Crab Masala: ஸ்பைசியான நண்டு மசாலா சாப்பிடலாமா? இப்படித்தான் செய்யனும்!
கடல் உணவு பிரியர்களா நீங்கள்? சுவையான நண்டு மசாலா எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க.
அசைவ பிரியர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். அதுவும் கடல் உணவுகள் என்றால் சிலர் அதிகம் விரும்பி சாப்பிடுவர். அசைவத்தில் கோழி, ஆடு, மீன், நண்டு என பல்வேறு வகைகள் உள்ளன. அசைவப் பிரியர்கள் மிகவும் விரும்பி உண்ணும் உணவு வகையில் நண்டுக்கு முக்கிய இடம் உண்டு. நண்டில் உள்ள சதைப் பகுதியின் சுவை அற்புதமாக இருக்கும். இதை காரசாரமாக சமைக்கும் போது அதன் சுவை மேலும் அலாதியானதாக இருக்கும். இப்போது ஸ்பைசியான நண்டு மசாலா எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
நண்டு- 4 நடுத்தர அளவு சுத்தம், தேங்காய் எண்ணெய் - 4 டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி, பெரிய வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது, பச்சை மிளகாய் - 2 கீறியது, கறிவேப்பிலை ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன், மிளகாய் தூள் - 2 டீஸ்பூன், கொத்தமல்லி பொடி - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன், கரம் மசாலா பொடி- 2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, கொத்தமல்லி -நன்றாக நறுக்கியது 1 கைப்பிடி அளவு.
செய்முறை
சுத்தம் செய்த நண்டை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அதில் அரை கப் தண்ணீர் மற்றும் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்ய வேண்டும். இதை மூடி 3 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். இப்போது இந்த நண்டில் உள்ள தண்ணீரை வடித்து விட்டு, இந்த கலவையை தனியாக வைக்க வேண்டும்.
ஒரு கடாயில், எண்ணெய் சேர்த்து, எண்ணெய் சூடானதும், சீரகம் மற்றும் பெருஞ்சீரகம் சேர்க்க வேண்டும். பின் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும். பிறகு தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
மசாலா பொடிகள் மற்றும் உப்பு சேர்த்து, நண்டை வேக வைத்து வடித்து வைத்துள்ள தண்ணீரை சேர்த்து நன்கு கலக்கி விட்டு இதை இதை 7 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.
இப்போது இதனுடன் நண்டு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். மீதமுள்ள தண்ணீரைச் சேர்த்து , மூடி போட்டு 6 நிமிடங்கள் வரை வேக வைக்க வேண்டும்.
இப்போது அடுப்பில் தீயை கொஞ்சம் கூடுதலாக வைத்து, மசாலாவில் இருக்கும் தண்ணீரை சற்று வற்ற விட வேண்டும். இப்போது நண்டு மசாலாவில் கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான நண்டு மசாலா தயார்.
மேலும் படிக்க
Dalai Lama: ”சீனாவிடமிருந்து சுதந்திரம் வேண்டாம்; ஆனால்...” - திபெத் விவகாரத்தில் தலாய் லாமா கறார்!
Crime: ஓடும் காரில் இப்படியா? சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை...கத்திமுனையில் மிரட்டிய கொடூரம்!