மேலும் அறிய

Health: கணினி முன்னாடி மணிக்கணக்கா உட்காந்து வேலை பாக்குறீங்களா..? இனி அப்படி பண்ணாதீங்க..!

ஒரே இடத்தில் 2 மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ச்சியாக உட்கார்ந்திருந்து இருப்பது ஒரு சிகரெட் பிடிப்பதைவிட கேடு என்று மருத்துவர் எச்சரித்துள்ளார்.

ஒரே இடத்தில் 2 மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ச்சியாக உட்கார்ந்திருந்து இருப்பது ஒரு சிகரெட் பிடிப்பதைவிட கேடு என்று மருத்துவர் எச்சரித்துள்ளார். நவீன கால வாழ்க்கை முறையில் பெரும்பாலும் கணினி சார்ந்த வேலை பார்ப்போர் அதிகமாக இருக்கின்றனர்.  அவர்களின் வாழ்க்கை முறை செடன்ட்ரி எனப்படும் உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறையாகவே இருக்கிறது. அப்படியிருக்க ஒரு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டு மருத்துவர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

ஸ்டிஃப்நெஸ்:

அதாவது நாம் ஒரு நாளில் 2 மணி நேரத்துக்கு மேல் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்போம் என்றால் நாம் ஒரு சிகரெட் புகைப்பதைவிட அதிகமான கேட்டை நம் உடலுக்குச் செய்கிறோம் என்று அந்த மருத்துவர் எச்சரித்துள்ளார். இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக ஓரிடத்தில் உட்கார்ந்திருந்தால் உங்களின் உடல் தோரணையில் சிக்கல் ஏற்படும்.

இதனால் சர்க்கரை நோய், இதய நோய்கள் உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் ஏற்படும். உடல் முழுவதுமான நரம்புகள் அழுத்தத்திற்கு உள்ளாகும். இதனால் ஸ்டிஃப்நெஸ் எனப்படும் நிலை உருவாகும். எலும்பு முறிவுகளுக்கான வாய்ப்பும் அதிகரிக்கும். குறிப்பாக கணினி முன்னால் பல மணி நேரம் இவ்வாறு உட்கார்பவர்களுக்கு இந்த உபாதைகளுக்கு எல்லாம் வாய்ப்பு மிகமிக அதிகம்.

வளர்சிதை மாற்றம்:

இது குறித்து மருத்துவர் பிரியங்கா கூறும்போது, இரண்டு மணி நேரம் ஓரே இடத்தில் தொடர்ச்சியாக அமர்ந்திருந்தால் நம் உடலில் உள்ள சக்தி பயன்படுத்தப்படாது. அதனால் வளர்சிதை மாற்றம் குறையும். குறைந்த வளர்சிதை மாற்றம் என்பது உடலில் சேர்ந்த ஊட்டச்சத்துகள் பயன்படுத்தப்படாமல் போகக் கூடிய நிலையை உருவாக்கும். நம் உடலில் ஊட்டச்சத்துகள் சரியாக பயன்படுத்தப்படாமல் போகும்போது அதனால் கல்லீரலில் அவை தேங்கும் சூழல் உருவாகும்.

இதனால் ஃபேட்டி ஆசிட்ஸ் ஆக்ஸிடேஷன், புரோட்டீஸ் பிரேக் டவுன், ப்ரோட்டீ சின்தஸிஸ் ஆகியன சரிவர செய்யப்படாமல் போகும். அதிகப்பட்டியான குளுக்கோஸ் ஃபேட்டி லிவரை உருவாக்கும். வயது ஏறஏற வளர்சிதை மாற்றம் உடலில் குறையும். அதில் நாம் அதிக நேரம் உட்கார்ந்தே இருந்தால் இன்னும் பல நோய்கள் நம்மை வந்து சேரும்.

சுவாசிக்கும் திறன்:

நாம் நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்து வேலை பார்த்தால் நமது நுரையீரல் குறைவாக வேலை செய்யும். அதனால் சுவாசிக்கும் திறன் குறையும். இதன் காரணமாக நுரையீரல் செயல்பாட்டுத் திறன் குறைந்துவிடும். சராசரியாக ஒரு மனிதன் தனது நுரையீரல் செயல்பாட்டுத் திறனில் பாதியைத் தான் உபயோகப்படுத்துகிறார். அப்படியிருக்கு அதைக்குட நாம் பயன்படுத்தாவிட்டால் அது இன்னும் குறைந்து முற்றிலுமாக செயலிழக்கும்.  

தொடர்ச்சியாய் பல மணி நேரம் உட்கார்ந்து வேலை செய்தால் கொழுப்பைக் கரைக்கும் நொதிகள் சுரப்பது குறையும். கெட்ட கொழுப்பு எரியாமல், உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். உட்கார்ந்து வேலை செய்வது வருடக் கணக்கில் தொடர்ந்தால், எலும்பு வளர்ச்சி குறையவதோடு, அடர்த்தியும் குறையும். உடலில் இயக்கம் இல்லாதபோது போதிய ரத்தம் மூளைக்குச் செல்லாது. இதன் காரணமாக செல் வளர்ச்சி பாதிக்கப்படும். அதன் விளைவாக இளமையிலேயே முதிய தோற்றம் உண்டாகும் வாய்ப்பு அதிகம் ஏற்படும். சீரான ஹார்மோன் சுரப்பும் தடைப்படும். இவ்வாறு மருத்துவர் பிரியங்கா ரோஹத்கி எச்சரித்துள்ளார்.

உடற்பயிற்சி அவசியம்:

இதற்குத் தீர்வாக அவர், ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் 2 அல்லது 3 நிமிடங்கள் எழுந்து நடக்கவும். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஏதேனும் சிறிய உடற்பயிற்சி செய்வதும் நலம். காலையில் எழுந்தவுடன் ஒரு சிறு தூராமவது நடந்து வரவும். 80 நிமிடங்கள் வேலை 2 நிமிடங்கள் நடை என்று பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Girl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan : Bus Accident : போதை தலைக்கேறிய அரசு ஓட்டுநர் காவல் நிலையத்தில் புகுந்த பஸ் சென்னை அடையாறில் பரபரப்புAdani News : அச்சச்சோ..கைதாகும் அதானி?2,100 கோடி லஞ்சம் கொடுத்தாரா?அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் -  அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Embed widget