Quit Smoking | புகைப்பழக்கத்தை விட நினைச்சாலும் முடியலையா? இதை முயற்சி பண்ணிப்பாருங்க..
புகைபிடிக்கும் பழக்கம் பெரிய உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. சளி இருமல் தொல்லையில் ஆரம்பித்து புற்றுநோய் வரை பாதிப்பை ஏற்படுத்துகிறது
புகை பிடிக்கும் பழக்கம் பெரிய உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. சளி இருமல் தொல்லையில் ஆரம்பித்து புற்றுநோய் வரை பாதிப்பை ஏற்படுத்துகிறது. சில வருடங்களாக இந்த புகைபிடிக்கும் பழக்கம் இருந்தால் அதில் இருந்து மீண்டு வர பல விதமான முயற்சிகளை எடுத்து முடியாமல் மீண்டும் புகை பிடிக்க தொடங்கி இருந்தால் இது உங்களுக்கான ஆலோசனைதான்.
புகை பிடித்தலை விடும் போது அதனால் கிரேவிங் என்னும் ஏக்கம் வர தொடங்கும். மேலும், அதை விடுவதற்கான அறிகுறிகள் வர தொடங்கும். இதனால் மீண்டும் புகைக்கலாம் என்ற நிலைக்கு தள்ளப்படுவார்கள். இவை எல்லாவற்றையும் கடந்து தான் இந்த பழக்கத்தை விட வேண்டும். மலசிக்கல், கை நடுக்கம், கோவம், படபடப்பு, பதற்றம், போன்ற அறிகுறிகள் வரும். புகைபிடிக்கும் பழக்கத்தை விடும் போது வரும் அறிகுறிகளை வெல்வதற்கு ஊட்டச்சத்து நிபுணர் நமாமி அகர்வால் சில ஆலோசனைகளை தனது பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
View this post on Instagram
- என்ன காரணத்திற்காக இந்த பழக்கத்தை விட வேண்டும் என்று நினைத்தீர்களோ அதை நினைவில் கொள்ளுங்கள்.
- வேலைகளில் ஈடுபாட்டுடன் இருக்கப் பழகுங்கள்
- மூன்று "D" நினைவில் வைத்து கொள்ளுங்கள் Drink Water ; Deep breathing ; Do not acknowledge cravings
புகை பிடிப்பதால் பல்வேறு உடல் நல பிரச்சனைகள் வருகிறது. புகை பிடிப்பதால், அதில் இருக்கும் நச்சுகள் அனைத்தும், நுரையீரலில் தேங்க ஆரம்பிக்கும். நுரையீரல் முழுமையா ஆக்ஸிஜன் எடுத்துக்கொள்ள முடியாமல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து இருக்கும்.இதய நோய்கள் வரும். நாளடைவில் பக்க வாதம் போன்ற பிரச்சனைகள் வரும்.