Ayurveda Tips: மழைக்காலத்தில் கடைபிடிக்கவேண்டிய ஆயுர்வேத முறைகள்..
Ayurveda Tips: மழைக்காலத்தில் கடைபிடிக்கவேண்டிய ஆயுர்வேத முறைகள்..
மழை என்றால் குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களுக்கும் ஒரு முறை அதில் நனைய வேண்டும் என்ற ஆசை வரும்.ஆனால் இந்த ஆசையை எல்லோராலும் உடனடியாக நிறைவேற்றிக் கொள்ள முடியாது,மழைக்காலத்தில் மழையில் நனையும் தருணங்களில் சிலருக்கு உடனடியாக காய்ச்சல் அல்லது சளி பிடித்துக் கொள்வதற்கு வாய்ப்புகள் அதிகம்.
அதேபோல நாள் பட்ட சளியால் அவதிப்படுபவர்கள்,வீசிங் இருப்பவர்கள்,காச நோய் இருப்பவர்கள் இவ்வாறு மழையில் நனைவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.இதைப் போலவே நன்கு கொதிக்க வைத்து ஆற வைத்த தண்ணீரை சிறிய சூட்டில் குடிக்கலாம்.இது மழையினால் நனைந்த குளிருக்கு இதமாக இருக்கும்.
எதிர்பாராத விதமாக நீங்கள் மழையில் நனைய நேரிட்டால் உடனடியாக அதற்கான பாதுகாப்பு விஷயங்களை செய்ய வேண்டும்.முதலில் வீட்டிற்கு வந்து மறுபடியும் தலைக்கு ஷாம்புவும் உடம்புக்கு சோப்பு போட்டு குளித்து விட வேண்டும் அடுத்து உடம்பில் ஈரம் இல்லாதவாறு நன்றாக துவட்டிக் கொள்ள வேண்டும்
கொஞ்சம் கத கதப்பான சூழ்நிலை இருந்தால் சிறந்தது.
முடிந்தால் சிறிது வெந்நீர் குடிக்கலாம்.
ஆடைகளை மாற்றிய பின் உங்கள் உடலில் பாக்டீரியா எதிர்ப்பு கிரீம் தடவவும். இது பாக்டீரியாவை அகற்றவும், ஒவ்வாமைகளைத் தடுக்கவும் உதவும்.
பிறகு இஞ்சி கலந்த தேனீரை பருகினால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் கதகதப்பும் ஒருங்கே கிடைக்கும்நீங்கள் ஒருவேளை பால் இல்லாத டீ குடிப்பதாக இருந்தால் உங்கள் டீயில் தேன் எலுமிச்சை சாறு மற்றும் புதினாவையும் கலந்து குடிக்கலாம்.இது உடலை வெப்பமாக்குவது மட்டுமல்லாமல், காய்ச்சலைத் தடுக்கும் வைட்டமின் சி கொண்டுள்ளது.
நிதானமாக தேநீர் அல்லது ஏதேனும் மூலிகை கலவையை பருகலாம்.
இதைப்போலவே துளசியிலும் நீங்கள் பால் இல்லாத டீயை தயாரித்து சிறிது தேன்விட்டு சாப்பிடலாம்.இன்று எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் ஆவாரம் பூ மற்றும் செம்பருத்தி பூ காய வைத்தது கிடைக்கிறது. இதைக் கொண்டும் தேயிலை இல்லாமல் டீ தயாரித்து குடித்தாள் நோய் எதிர்ப்பு சக்தியும் கதகதப்பும் ஒருங்கே கிடைக்கும்.இதைப் போலவே கற்பூரவள்ளி கொண்டும் மூலிகை டீ தயாரிக்கலாம்.
இந்த காலகட்டத்தில் சாப்பாட்டில் பூண்டு மற்றும் இஞ்சி ஆகியவற்றை சற்று அதிகப்படியாக சேர்த்துக் கொள்வது சளி தொந்தரவுகளை தவிர்க்கும்.இத்தகைய மழை தருணங்களில் இரவு படுப்பதற்கு முன்பாக சூடான பாலில் சிறிது மிளகு மஞ்சள் தூள் மற்றும் பூண்டு கலந்து குடிக்கலாம்.
பூண்டு மற்றும் மிளகு என இவை இரண்டும் சற்றே காரத்தன்மை கொண்டதினால் வயிற்றில் வாய்வு கோளாறு உள்ளவர்கள் அல்சர் உள்ளவர்கள் வெறும் வயிற்றில் இதை பருக வேண்டாம் ஏதாவது ஒரு திட உணவு கொஞ்சம் மேலும் எடுத்துக் கொண்ட பின் இந்த பானத்தை அருந்தலாம் இதுவும் மழைக்காலங்களில் சளி பிடிப்பதிலிருந்தும் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தும் தரும்.இப்படியாக மழையில் நனைந்து அதற்கு பின்னான நேரங்களில் பிரிட்ஜில் இருக்கும் குளிரான குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது.
இதைப்போலவே மோர், முளைக்கீரை, மணத்தக்காளி கீரை, மற்றும் இளநீர் என உடலுக்கு உடனடியாக குளிர்ச்சியை தரக்கூடிய பொருட்களை தவிர்க்கலாம்.இதைப் போலவே இந்த நேரங்களில் விளக்கெண்ணெய் பயன்பாட்டையும் தவிர்க்க வேண்டும்
இத்தகைய மழையில் நனைந்த தருணங்களில் வீட்டில் உங்களுக்கு நேரம் இருக்குமேயானால் வீட்டில் உள்ளவர்களை கேட்டு வெங்காயம் மற்றும் பூண்டு கலந்த பக்கோடா சூடாக சாப்பிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். இதற்கு
கடுகு எண்ணெய் போன்ற ஆரோக்கியமான எண்ணெயை ஆழமாக வறுக்கவும், உண்மையில் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்ல எண்ணெய்களைப் பயன்படுத்துங்கள். இரண்டாவதாக, எண்ணெயை ஒரு முறைக்கு மேல் எண்ணெயாகப் பயன்படுத்த வேண்டாம். தீங்கு விளைவிக்கும்.
நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான படி உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகும்.