Rose Water | ரோஸ் வாட்டர் எப்படி பயன்படுத்தணும் தெரியுமா? இதெல்லாம் நன்மைகள்..
சருமத்திற்கு ரோஸ் வாட்டர் பயன்படுத்துவது, பெரிய மாற்றத்தை தரும். பேஸ் பேக்குகளில் ரோஸ் வாட்டர் கலந்து பயன்படுத்தலாம்.
சருமத்திற்கு ரோஸ் வாட்டர் பயன்படுத்துவது, பெரிய மாற்றத்தை தரும். அடிக்கடி ரோஸ் வாட்டர் பயன்படுத்துவது, மற்றும் பேஷ் பேக்குகளில் ரோஸ் வாட்டர் கலந்து பயன்படுத்தலாம். இந்த ரோஸ் வாட்டர் ஆனது, ரோஜா பூக்களில் இருந்து இந்த ரோஸ் வாட்டர் தயாரிக்கப்படுகிறது. இந்த தண்ணீர் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்தது.
ரோஸ் வாட்டரில் ஆண்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்து இருக்கிறது. அனைத்து பருவ நிலைகளிலும், இந்த ரோஸ் வாட்டர் பயன்படுத்தலாம். சருமத்திற்கு மாய்ஸ்சரைசருடன் சேர்த்து இந்த ரோஸ் வாட்டர் பயன்படுத்தலாம்.
ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து, முகத்தில் தடவி கொள்ளலாம். முகத்தில் பேஸ்மாஸ்க் பயன்படுத்தலாம். இது போன்ற பல வகைகளில், ரோஸ் வாட்டர் பயன்படுத்தலாம்.
எரிச்சல், வறட்சி, தோலின் நிறம் மாறுதல் போன்ற பிரச்சனைகள் இருந்தால், இந்த ரோஸ் வாட்டர் பயன்படுத்தலாம். சருமத்தில் வறட்சி, பொலிவின்மையுடன் இருந்தால், இந்த ரோஸ் வாட்டர் பயன்படுத்துவதால் சருமம் பொலிவுடன் இருக்கும்.
வெட்டு காயங்கள், வடுக்கள், தீக்காயங்கள் போன்ற காயங்களுக்கு இந்த ரோஸ் வாட்டர் பயன்படுத்தலாம்.சருமத்தில் ஏதேனும் ஒவ்வாமை பிரச்சனை இருந்தால், இந்த ரோஸ் வாட்டர் பயன்படுத்தலாம்.
கண்கள் சிவத்தல், வீக்கம் அடைதல், கண்களில் சோர்வு இருந்தால் காட்டனில் ரோஸ் வாட்டர் நனைத்து ஒத்தடம் போல் வைக்கலாம். இது கண்களுக்கு தேவையான ஓய்வை தரும். கண்கள் மீண்டும் புத்துணர்வுடன் இருப்பதற்கு இந்த ரோஸ் வாட்டர் உதவும். கருப்பு புள்ளிகள், மற்றும் வெள்ளை புள்ளிகள் வராமல் இருக்கவும், சருமத்தில் தேங்கி இருக்கும் கழிவுகளை நீக்கவும், இந்த ரோஸ் வாட்டர் உதவியாக இருக்கும்.
ரோஸ் வாட்டர் மனம், மனநிலையை இதமாக வைக்க உதவும். மனஅழுத்தம், சோர்வு போன்ற நேரங்களில் ரோஸ் வாட்டர் பயன்படுத்தி, மசாஜ் செய்வது நல்லது. இது மனதை இதமாக வைக்கும்.
ரோஸ் வாட்டர் கிருமி நாசினி பண்புகளை கொண்டுள்ளது. இது பாக்டீரியா போன்ற தொற்றுகள் வராமல் பாதுகாக்கும்.
முகப்பரு வராமல் பாதுகாக்கும். முகப்பரு வந்தபிறகு சருமத்தில் ஏற்படும் தழும்புகள் சரிசெய்ய ரோஸ் வாட்டர் உதவியாக இருக்கும்.
கண்களை சுற்றி இருக்கும் கருவளையம் நீங்க தினம் ரோஸ் வாட்டர் பயன்படுத்தலாம்.
சருமம் இயற்கையான பொலிவுடனும், புத்துணர்வுடனும் இருப்பதற்கு ரோஸ் வாட்டர் முக்கிய பங்காற்றுகிறது. ரோஸ் வாட்டர் தானே என்று இல்லாமல் அதை சரியாக பயன் படுத்தினால் சருமம் பொலிவாக இருக்கும். இது அனைத்து பருவ நிலைகளுக்கும் ஏற்றது.