Hair Care | கொத்துகொத்தா முடி கொட்டுதா... அரிசி தண்ணீர் ஒரு மேஜிக்.. இப்படி யூஸ் பண்ணுங்க..
அரிசி ஊற வைத்த தண்ணீரைப் புளிக்க வைத்து பயன்படுத்தும்போது இழந்த முடியை வளர வைக்க முடியும்.
இன்று வாழ்க்கை இறுக்கம் நிரம்பியதாய் மாறிவிட்டது. மன நல சிக்கல்கள், மருந்துகள் என்று நாட்கள் ஓடுகிறது. நகர சூழலில் பதற்றமோ பயமோ மன உளைச்சலோ தொடங்கும்போது முதல் அறிகுறி தெரிவது முடியில்தான்.
முடி உதிர்வு தீவிரமாக இருப்பது நாம் அதிகமான அழுத்தத்திற்குள் சிக்கிக்கொண்டு இருக்கிறோம் என்பதற்கான முதல் வெளிப்பாடு. ஆனால் முடி என்பது நமது அழகுடன், கலாச்சாரத்துடன் பின்னிப் பிணைந்தது என்பதால் முடியினால் நமது தன்னம்பிக்கையை உடைத்து முழுகடிக்க முடியும். நமது முடி உதிர்வை நாம் எப்படி கையாளுகிறோம் என்பது முற்றிலும் நமது தனிப்பட்ட தேர்வாக இருந்தாலும் சமையலறையில் நாம் பயன்படுத்தும் சிறு சிறு பொருட்கள் முடியின் வேரை ஆழப்படுத்தும் நற்குணங்களைக் கொண்டுள்ளன. அவற்றுள் ஒன்று அரிசித் தண்ணீர்.
சமைப்பதற்கு முன்பு நாம் அரிசியை நன்கு களைந்து ஊற வைப்பது வழக்கம். அந்த தண்ணீரைப் புளிக்க வைத்தால் முடிக்கு வலு தரும் பேக்டீரியாக்கள் நிறைந்த தண்ணீராய் அது மாறும். அதற்கு அரிசியை ஊற வைத்த தண்ணீரை ஒரு பாட்டிலில் மூடி வைக்க வேண்டும். ஒருநாள் முழுவதும் அந்த தண்ணீர் மூடியே இருக்கும்போது, அது கொஞ்சம் கொஞ்சமாய் புளிக்க ஆரம்பிக்கும். ஒரு நாளுக்குப் பிறகு அந்த தண்ணீரை எடுத்து அதில் சிறிது சுத்தமான தேங்காய் எண்ணெய் சேர்த்து முடி இழைகளில் தடவலாம், முடி வேர்களை சிறிது நேரம் மசாஜ் செய்துவிடலாம். சில நிமிடங்கள் ஊற வைத்த பின் முடியை வழக்கமான ஷாம்பூவினால் நன்கு அலசி காய வைக்கலாம். வாரம் இரு முறை இதை செய்யும் போது நல்ல பலன் கிடைக்கும்.
மேலும், முடி ஈரமாக இருக்கும்போது நிச்சயம் வாரக் கூடாது. ஈரமாக இருக்கும்போது மயிர்க்கால்கள் பலவீனமாக இருக்கும், அவை நன்கு உலர்ந்த பின்பே வார வேண்டும், இல்லையெனில் அதிகமான முடி உதிர்வு ஏற்படும்.
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்