(Source: ECI/ABP News/ABP Majha)
Pedicure: சுத்தமான, அழகான பாதங்கள் வேண்டுமா? வீட்டிலேயே ஈசியா பெடிக்யூர் செய்வது எப்படி?
வீட்டிலேயே பெடிக்யூர் செய்து உங்கள் பாதங்களை அழகாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ள முடியும். வாங்க எப்படி பெடிக்யூர் செய்வதென்று பார்க்கலாம்.
பெரும்பாலான பெண்கள் தங்கள் முகத்தை அழகாக வைத்துக் கொள்ள அதிக அக்கரை செலுத்துகின்றனர். ஆனால் தங்கள் பாதங்களை மறந்து விடுகின்றனர். உங்களது கால்களையும், பாதங்களையும் அழகாக்குவதற்கு நீங்கள் ப்யூட்டி பார்லர் செல்ல வேண்டாம். வீட்டிலேயே வாரத்திற்கு ஒரு முறை பாதத்தை சுத்தம் செய்ய, பெடிக்யூர் செய்யலாம். இவ்வாறு செய்யும் போது பாதங்களில் அழுக்குகள் சேர்வது மற்றும் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்க முடியும்.
பெடிக்யூர் செய்வது எப்படி?
பெடிக்யூர் மூலம் நம்முடைய கால்களை சுத்தம் செய்வதற்கு முன் முதலில் நாம் நகங்களை சரியாக வெட்டி விட வேண்டும். பின்னர் நெயில் ரிமூவரின் உதவியுடன் நகங்களில் உள்ள பழைய நெயில் பாலிஷை அகற்ற வேண்டும். பெடிக்யூர் செய்த பின்னர் விருப்பமான நெயில் பாலிஷ் உபயோகித்து கொள்ளலாம்.
கால்களில் உள்ள அழுக்குகள் மற்றும் தொற்றுகள் நீக்க மசாஜ் செய்ய வேண்டும். கால்களில் கொஞ்சம் கிரீம் அல்லது தேனை கொண்டு மசாஜ் செய்யலாம். பின்னர் சூடான நீரில் எலுமிச்சை சாறு கலந்து கால்களை சிறிது நேரம் அந்த தண்ணீரில் வைத்து மசாஜ் செய்யும் போது கால்களில் உள்ள அழுக்குகள் விரைவாக சுத்தம் ஆகும்.
நகங்கள்:
இப்போது உங்களது தோல் மற்றும் நகங்கள் மென்மையாக மாறியதும், பிரஷ் மூலம் கால் நகங்களைச் சுத்தம் செய்ய வேண்டும். வீட்டில் இருக்கும் பழைய பிரஷ்களை கொண்டு நகங்களை சுத்தம் செய்யலாம். பின்னர் பியூமிஸ் கல்லைப் பயன்படுத்தி குதிகால் மீது இறந்த சருமத்தை அகற்ற வேண்டும்.
இதையடுத்து கால் விரல்களில் ஏதேனும் பாதிப்பு இருக்கும் பட்சத்தில், எலுமிச்சை துண்டுகளைக் கொண்டு கால்களில் தேய்க்கலாம். இதனையடுத்து, 1 டீஸ்பூன் எலுமிச்சை + 2 டீஸ்பூன் சர்க்கரை, ½ டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைக் கொண்டு பாதங்களை நன்றாக தேய்த்து மசாஜ் செய்து, மென்மையான துண்டினால் துடைக்க வேண்டும். பின்னர் சூடான தேங்காய் எண்ணெய்யைப் பயன்படுத்தி சுமார் 5 நிமிடங்களுக்கு பாதங்களை மசாஜ் செய்யலாம்.
அழகான, சுத்தமான:
3 ஸ்பூன் சூடான தேங்காய் எண்ணெய்யை கொண்டு ஐந்து நிமிடம் மசாஜ் செய்யவும். பின்னர் சூடான தண்ணீரில் நனைத்த துண்டால் துடைத்து எடுத்து விட வேண்டும். இறுதியில் விருப்பமான நெயில் பாலிசுகளை உபயோகிக்கலாம். வீட்டிலேயே இதை செய்ய முடியும். இப்படி செய்வதன் மூலம் பாதங்களை அழகாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ள முடியும்.
மேலும் படிக்க