Poondu Kaara Kulambu :சாதத்துக்கு சூப்பர் காம்பினேஷன்.. பூண்டு காரகுழம்பு செய்வது எப்படி?
சாதத்துக்கு சூப்பர் காம்பினேஷன். பூண்டு கார குழம்பு செய்முறை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மிளகு, சீரகம், வெங்காயம், பூண்டு, சின்ன வெங்காயம், கறிவேப்லை, வெந்தயம், தக்காளி, நல்லெண்ணெய்,பெருங்காயம், புளி
செய்முறை
ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும், அதில் ஒரு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் வெந்தயம், 20 பல் பூண்டு, 15 சின்ன வெங்காயம் இரண்டு கொத்து கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பொருட்கள் நன்றாக சிவந்ததும் அதை ஆற வைக்க வேண்டும். பிறகு மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். பின்னர் நன்றாக பழுத்த 3 தக்காளியை மிக்ஸியில் தேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் கடாயில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, அதில் கால் ஸ்பூன் வெந்தயம் சேர்த்து வதக்க வேண்டும். வெந்தயம் சிவந்ததும் அதில் ஒரு ஸ்பூன் கடுகு, உளுந்தம்பருப்பை சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் அரை ஸ்பூன் பெருங்காய தூள் சேர்க்க வேண்டும். பின்னர் அதில் ஒரு கப் தோல் நீக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். இரண்டு கைப்பிடி பூண்டை சேர்த்து வதக்க வேண்டும். பூண்டு வெங்காயம் நன்றாக சிவந்து வரும் வரை வதக்கி விட வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, அதில் 2 ஸ்பூன் மிளகாய் தூள், 2 ஸ்பூன் மல்லித்தூள் சேர்க்க வேண்டும். அரை ஸ்பூன் மஞ்சள் தூளையும் சேர்த்து கிளறி விட வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் வரை மசாலா கலந்த பொருட்களை நன்றாக கலந்து விட வேண்டும். மசாலா அடிப்பிடித்து விடாத படி கலந்து விட்ட பின் அதில் கெட்டியான புளி தண்ணீரை சேர்க்க வேண்டும்.இப்போது அடுப்பை மிதமான தீயில் வைத்து 22 நிமிடம் வரை கொதிக்க விட வேண்டும். குழம்பு கெட்டியான பதம் வந்ததும், அதில் சிறிய துண்டு வெல்லத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து குழம்பை கொதிக்க விட வேண்டும். குழம்பில் எண்ணெய் பிரிந்து வந்த பிறகு அதில் மேலும் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு நன்றாக கலந்து விட்டு அடுப்பில் இருந்து இறக்கி கொள்ளலாம். இந்த குழம்பை பிரிஜில் வைக்காமல் ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம். பிரிட்ஜில் வைத்தால் இரண்டு வாரங்கள் வரை பயன்படுத்தலாம். இந்த குழம்பு சாதத்துக்கு சூப்ப்ர் காம்பினேஷனாக இருக்கும்.
மேலும் படிக்க