Pirandai : எடை குறைப்புக்கு இத்தனை நாட்கள் போதுமா? பிரண்டையை இப்படி பயன்படுத்துங்க..
பிரண்டை.. கிராமங்களில் வேலிகளில் படர்ந்து கிடக்கும். சர்வ சாதாரணமாக வீட்டுப் பெண்கள் அதைப் பறித்து துவையல் அரைத்து சாப்பாட்டில் சேர்த்துவிடுவர். ஆனால், நகரங்களில் இது அபூர்வமான பொருளாக உள்ளது. இதை சமைப்பதற்கான முறை சற்று பொறுமை தேவைப்படும் முறை என்பதால் இதை நகரத்து, வேலைக்குச் செல்லும் பெண்கள் பெரிதாக கண்டுகொள்வதில்லை.
பிரண்டை.. கிராமங்களில் வேலிகளில் படர்ந்து கிடக்கும். சர்வ சாதாரணமாக வீட்டுப் பெண்கள் அதைப் பறித்து துவையல் அரைத்து சாப்பாட்டில் சேர்த்துவிடுவர். ஆனால், நகரங்களில் இது அபூர்வமான பொருளாக உள்ளது. இதை சமைப்பதற்கான முறை சற்று பொறுமை தேவைப்படும் முறை என்பதால் இதை நகரத்து, வேலைக்குச் செல்லும் பெண்கள் பெரிதாக கண்டுகொள்வதில்லை.
பிரண்டையில் சாதாரண பிரண்டை, சிவப்பு பிரண்டை, உருட்டுப் பிரண்டை, முப்பிரண்டை, தட்டைப் பிரண்டை எனப் பல வகைகள் உள்ளன. சாதாரண பிரண்டை எனப்படும் நான்கு பட்டைகளைக் கொண்ட பிரண்டை அதிகமாகக் காணப்படும் வகையாகும். இதையே நாம் பொதுவாக உபயோகிக்கலாம்.
பிரண்டையில் கால்சியம் சத்து அதிகம். ஆகையால் எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள். எலும்பு சம்பந்தமான நோய் உள்ளவர்களுக்கு இதனைக் கொடுக்கலாம். உடைந்த எலும்புகளை ஒட்ட வைக்கும் அதன் குணத்தினாலேயே பிரண்டைக்கு வஜ்ரவல்லி என்கிற பெயர் வந்தது. பிரண்டையை காய வைத்து அதில் செய்யும் பொடியை எலும்பு முறிவு கட்டில் பயன்படுத்துவது உண்டு.
பிரண்டை உண்பதால், உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும்; ஞாபக சக்தி பெருகும்; மூளை நரம்புகளும் பலப்படும். பசியின்மை, நாக்குச் சுவையின்மை ஆகியன குணமாகும். ரத்த மூலம் குணமாகும். மேலும் வயிற்றுப் பூச்சிகளையும் கட்டுப்படுத்தும். பிரண்டையில் இருந்து சாறு எடுத்து 6 தேக்கரண்டி அளவு சாற்றுடன் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் கலந்து காலையில் மட்டும் ஒரு வாரம் சாப்பிட்டு வர மாதவிடாய் ஒழுங்காக வரும்.
அடிபட்ட வீக்கம் குணமாக பிரண்டையிலிருந்து சாறு எடுத்து புளி, உப்பு சேர்த்து காய்ச்சி பொறுக்கும் சூட்டில் அடிபட்ட இடத்தில் மேல் பூச்சாகப் பற்றுப் போடலாம்.
பிரண்டைச் சாறு உடம்பில் பட்டால் அதிகமான அரிப்பும் நமைச்சலும் ஏற்படும். வேர், தண்டு ஆகியவை அதிகமான மருத்துவப் பயனுள்ளவை. தண்டு கார்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது.
ஆகையால், நம் சாப்பாட்டில் பிரண்டையை துவையலாக வாரம் ஒருமுறை எடுத்துக் கொள்வதில் பக்க விளைவுகள் இருக்காது. ஆனால், பிரண்டையை பொடியாக, சூரணமாக இல்லை வேறு நாட்டு மருந்து வடிவில் நாமே மருத்துவர் ஆலோசனையின்றி எடுத்தால் உடலில் அரிப்பு, வெப்பம் அதிகரித்தல் போன்ற உபாதைகள் ஏற்படலாம். உணவே மருந்து. ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அதுவே கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். ஒவ்வொரு தனி நபரின் உடலும் வெவ்வேறு பன்பு கொண்டது. ஆகையால் பிரண்டையை சமையல் செய்யாமல் வேறு வடிவில் மருத்துவ சப்ளிமென்ட்டாகப் பயன்படுத்தும் போது நிச்சயமாக மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நலம்.
பிரண்டை துவையல் ரெசிபி.. எளிமையாக பிரண்டை துவையல் எப்படிச் செய்வது என்பதைப் பார்ப்போம். பிரண்டையை சுத்தம் செய்யும் போது கையில் அரிப்பு ஏற்படலாம். ஆகையால் சுத்தம் செய்த பின்னர் கைகளை இளம் சூடு நீரில் கழுவிக் கொள்ளலாம். 1. முதலில் பிரண்டையை நன்கு கழுவி, அதின் மேலுள்ள தோலை உரித்து சுத்தம் செய்து உள்ளிருக்கும் தண்டு பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும். 2. பின் வாணலில் நல்லெண்ணையை ஊற்றி, காய்ந்ததும் பிரண்டையின் தண்டுப்பகுதிகளைப் போட்டு நன்கு நிறம் மாறி பச்சை வாசனை போகும் வரை வதக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
3. பிறகு அதே வாணலியில் சிறிது நல்லெண்ணைய் ஊற்றி காய்ந்ததும், பிரண்டையின் அளவிற்கு ஏற்ப சின்ன வெங்காயம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வரமிளகாய், பூண்டு, இஞ்சி அனைத்தையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
4. கடைசியாக தேங்காயை துருவி சேர்த்து வதக்கி இறக்கவும். ஆறிய பின் வதக்கிய பிரண்டையுடன் , புளி சேர்த்து அரைத்து எடுத்தால் சுவையான பிரண்டை துவையல் தயார்.
தண்ணீர் அதிகம் சேர்த்தால் சட்னி, குறைவாக சேர்த்தால் துவையல்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )