PCOD ஆயுர்வேத சிகிச்சை முறையில் முழுவதுமாக குணப்படுத்த முடியுமா ?
பாலிசிஸ்டிக் ஓவரி டிஸ்ஆர்டர் (PCOD- பி.சி.ஓ.டி) என்பது இன்று ஐந்தில் ஒரு பெண்ணுக்கு இந்த பிரச்னை இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
பாலிசிஸ்டிக் ஓவரி டிஸ்ஆர்டர் (PCOD- பி.சி.ஓ.டி) என்பது இன்று ஐந்தில் ஒரு பெண்ணுக்கு இந்த பிரச்னை இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான முழுமையான தீர்வை பலரும் தேடி கொண்டு இருக்கையில், ஆயுர்வேத மருத்துவர் இதை 100% குணப்படுத்த முடியும் என கூறுகிறார்.
பாலிசிஸ்டிக் ஓவரி டிஸ்ஆர்டர் (PCOD- பி.சி.ஓ.டி) ஆனது பெண்களுக்கு கருப்பையில், கருமுட்டைப்பையில் சிறியது முதல் பெரிய அளவிலான நீர்கட்டிகள் சேர்ந்து இருக்கும். இதனால் மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் இருக்கும். இது ஹார்மோன் மாற்றங்களினால் வரும் ,ஆனால் சரிசெய்யக்கூடிய பிரச்சனையாகும். இது கருப்பையில் சுரக்கும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளினால் நிகழ்கிறது. இந்த ஏற்றத்தாழ்விற்கு காரணம், வாழ்வியல்முறை பழக்கம்
12 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு இந்த பிரச்னை வரும் இந்த நோயின் அறிகுறிகளானா, மாதவிடாய் சுழற்சியில் மாற்றம், முகத்தில் மீசை தாடி போன்று முடி அதிகமாக வளர்த்தல், தலை முடி உதிர்தல், உடல் எடை அதிகமாதல், குழந்தையின்மை, முகப்பரு, இப்படி பல பிரச்சனைகள் இந்த நீர்கட்டியினால் வரும். குடும்பத்தில் ஒரு வருக்கு இந்த பிரச்னை இருந்தால், சகோதரிக்கோ, அம்மாகு இருந்தால் குழந்தைக்கு என வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
இந்த pcod வருவதற்கான காரணங்கள்
பொதுவாக பெண்களின் கருப்பையில் பெண் பாலியல் ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் தவிர ஆண் பாலின ஹார்மோன் டெஸ்டோஸ்டிரோன் ஆகியவற்றை சுரக்கின்றன. இது மாத விடாய் சுழற்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. பெண்கள் உடலில் ஆண்களின் ஹார்மோன் குறைந்த அளவு இருக்கும். ஹார்மோன் சுரப்பியில் மாற்றங்கள் நடக்கும்போது, மாத விடாய் சுழற்சியில் பிரச்சனை வருகிறது. பெண்களின் உடலில் சுரக்கும் ஆண் பாலின ஹார்மோனான ஆண்ட்ரோஜன் அதிக அளவில் சுரந்தால் ஹைபராண்ட்ரோஜனிசம் என அழைக்கப்படுகிறது. இது கருமுட்டை உற்பத்தி ஆகாமல் தடுக்கிறது. கருப்பையில், கருமுட்டை பையிலும் நீர்கட்டிகள் உருவாக காரணமாக அமைகிறது.
ஆயுர்வேத சிகிச்சை - ஒருவர் எந்த அளவிற்கு இந்த நீர்க்கட்டி பிரச்சனை இருக்கிறது என்பதை பொறுத்து 3 முதல் 6 மாதங்கள் ஆகும். முழுமையாக சிகிச்சை எடுத்து ஆயுர்வேத வாழ்வியல் முறையை பின்பற்றினால் இந்த நீர்க்கட்டி பிரச்சனைக்கு 100% தீர்வு கிடைக்கும்.
காந்தாரி (Gandhari) மற்றும் வருணா (Varuna ) போன்ற மூலிகைளும், கச்னார் குகுலு ( Kachnaar Guggulu) எனப்படும் கிளாசிக்கல் ஆயுர்வேத மாத்திரை, மற்றும் ராஜ்பர்வத்னி வதி (Rajparvatni Vati) மற்றும் சந்திரபிரபா வதி (Chandraprabha Vati) போன்றவை ஒவ்வொருவரின் நோய் அறிகுறிகளை பொறுத்து வழங்க படுகிறது. இதை எடுத்து கொள்ளும் முன் ஆயுர்வேத மருத்துவரை அணுகி தன்னுடைய உடல் சார்ந்து ஆலோசனை எடுத்து கொள்வது அவசியம்.
ஒவ்வொருவரின் அறிகுறிகளை கூர்ந்து கவனித்து அதற்கு தகுந்தாற் போல், உடல் பயிற்சி செய்வது, உணவு முறையில் மாற்றம், போதுமான தூக்கம், மனஅழுத்தம் இல்லாமல் இருப்பது போன்ற சில வாழ்வியல் முறைகளை மாற்றுவது இந்த பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக அமையும்