Oolong Tea : க்ரீன் டீயை விட சிறந்ததா ஊலாங் டீ? எடை குறையுமா? ஆய்வு சொல்வது என்ன?
ஊலாங் தேயிலையில் ப்ளாக் மற்றும் க்ரீன் டீயில் இருப்பதைப் போலவே ஆக்ஸிஜனேற்றப் பண்புகள் அடங்கி உள்ளன.
தேநீர் தயாரிப்பது ஒரு கலை. அதிலும் குறிப்பாக ஏர்ல் க்ரே, ஊலாங் என பலவகை தேநீர் உள்ளது. அவை ஒவ்வொன்றுக்கும் தயாரிக்கும் முறை மாறுபடும். குறிப்பாக ஊலாங் டீ அதிகம் அருந்துவது உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜனேற்றத்தை (Oxidation)வழங்கும்.
சீனாவில் பல ஆயிரம் காலமாக இந்த டீ புழக்கத்தில் உள்ளது. இது கேமிலியா செனன்சிஸ் என்னும் ஒருவகை தேயிலையில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதிலிருந்து வைட் டீ, ப்ளாக் டீ மற்றும் க்ரீன் டீ ஆகியன தயாரிக்கப்படுகிறது. ஊலாங் தேயிலை என்பது இலைகளை வெயிலில் வாட்டி அதனை அழுத்திப்பிழிந்து செய்வதன் மூலம் தயாரிக்கப்படுகிறது அதே சமயம் ப்ளாக் டீ இலைகளை நசுக்கித் தயாரிக்கப்படுகிறது. க்ரீன் டீயானது எவ்வகையான பதப்படுத்துதலும் இல்லாமல் தயாரிக்கப்படுகிறது.இவற்றில் ஊலாங் தேநீரின் நன்மைகளை கீழே காண்போம்.
ஊலாங் தேநீர் நன்மைகள்
ஊலாங் தேயிலையில் ப்ளாக் மற்றும் க்ரீன் டீயில் இருப்பதைப் போலவே ஆக்ஸிஜனேற்றப் பண்புகள் அடங்கி உள்ளன. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் செல்களை வயதாவதில் இருந்தும், மோசமான வாழ்க்கை முறை தேர்வுகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆபத்துகளில் இருந்தும் பாதுகாக்கின்றன. ஆன்டிஆக்ஸிடன்ட்களை உட்கொள்வது பல நாள்பட்ட நோய்களைத் தடுக்கும்.
ஊலாங் தேயிலை க்ரீன் டீ மற்றும் ப்ளாக் டீயை விட வலுவான ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஆண்டிமியூடோஜெனிக் பண்புகளைக் கொண்டுள்ளது என்று ஆராய்ச்சி கூறுகிறது.
1) நீரிழிவு நோய்க்கு எதிரான பாதுகாப்பு
இன்சுலின் எதிர்ப்பை எளிதாக்குவதன் மூலமும், இன்ஃப்ளமேஷனை குறைப்பதன் மூலமும், நீரிழிவு நோயிலிருந்து உடலைப் பாதுகாக்க ஊலாங் தேநீர் உதவுகிறது. ஊலாங் டீயின் நன்மைகள் நீரிழிவு கட்டுப்பாட்டை உள்ளடக்கியதா என்பது குறித்து குறிப்பிட்ட ஆராய்ச்சி எதுவும் இல்லை என்றாலும், சில ஆய்வுகள் இந்த டீ ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க உதவும் என்று காட்டுகின்றன.
ஊலாங் தேநீரில் உள்ள பாலிஃபீனால் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சாதாரண இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவும் என்று நம்பப்படுகிறது, இருப்பினும் இதை உறுதிப்படுத்த கூடுதல் ஆராய்ச்சி தேவை.
2) இதயத்திற்கு நல்லது
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது பொதுவாக இதயத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது. ஊலாங் தேநீரில் ஆக்ஸிஜனேற்றப் பண்புகள் இருப்பதால், அதை தொடர்ந்து குடிப்பதால், இதய ஆரோக்கியத்தை சிறந்த முறையில் பராமரிக்க முடியும்.
தேநீர் அருந்துபவர்களுக்கு பொதுவாக ரத்த அழுத்தம் குறைந்து, கொலஸ்ட்ரால் குறைந்து, இதய ஆரோக்கியம் போன்றவை வலுவடைவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதய நோய் உண்டாவதற்கான வாய்ப்புகளையும் ஊலாங் தேநீர் குறைப்பதாக சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இருப்பினும் இதுதொடர்பாக கூடுதல் ஆய்வுகள் தேவை என சொல்லப்படுகிறது