Masturbation : சுய இன்பம் தப்பே கிடையாது.. ஆனா இந்த தப்புகளை மட்டும் செய்யாதீங்க.. உஷார்..
Masturbation : சுய இன்பம் மேற்கொள்ளும்போது ஆண்களும் பெண்களும் செய்யும் தவறுகளைச் சுட்டிக் காட்டுவதோடு, அவற்றை எப்படி சரி செய்யலாம் என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது...
Masturbation Mistakes: வெளிப்படுத்துகிறார்களோ இல்லையோ மனிதர்கள் பாலியல் இன்பத்திற்காக சுய இன்பம் மேற்கொள்வது வழக்கமானது. அவ்வபோது தனியாக இன்பம் அனுபவிப்பது என்பது தன்னைத் தானே மகிழ்விப்பதற்கும், உச்சநிலையை மேலும் அதிகரிப்பதற்கும் மனிதர்கள் பெரும்பாலானோரால் மேற்கொள்ளப்படுகிறது. எனினும், சுய இன்பம் மேற்கொள்ளும் போது உடலில் பல்வேறு ஆரோக்கியமான நன்மைகளும் கிடைக்கின்றன.
சுய இன்பம் மேற்கொள்வதால் மன அழுத்தம் குறைகிறது; தூக்கம் அதிகரிக்கிறது; பாலியல் அழுத்தம் தீர்க்கப்படுகிறது. இத்தனை நன்மைகள் இருந்தாலும், சுய இன்பத்தை முறையாக மேற்கொள்ளாமல் இருந்தால், அது உற்சாகம் அளிப்பதற்குப் பதிலாக தீமைகளாக மாறலாம்.
சுய இன்பம் மேற்கொள்ளும் போது ஆண்களும் பெண்களும் செய்யும் தவறுகளைச் சுட்டிக் காட்டுவதோடு, அவற்றை எப்படி சரி செய்யலாம் என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது...
1. சரியான மனநிலையை அமைக்காமல் இருப்பது
சுய இன்பம் மேற்கொள்வதன் காரணம் என்பதே தனிமையை அனுபவிப்பதற்கும், பாலியல் இன்பம் பெறுவதற்கும் ஆகும். எனவே இதனைச் சரியாகப் பெற வேண்டும் என்றால் அதற்கேற்ற மனநிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். சுய இன்பம் என்பதும் பாலியல் உறவு கொள்வதைப் போன்ற ஒன்று என்பதால், உச்சகட்ட இன்பத்தை அடைய அதற்கேற்றவாறு திட்டமிடுதல் அவசியம். சுய இன்பம் மேற்கொள்ளும் போது, அதனை விரைவாக முடித்துவிட முயன்றால், உங்களால் முழுமையாக மகிழ்ச்சியைக் கொள்ள முடியாது. எனவே உங்கள் சுய இன்பத்திற்கான நேரத்தைச் சரியாகத் திட்டமிட வேண்டும். விளக்கை அணைப்பது, அடல்ட் படங்கள் பார்ப்பது, ஓய்வாக இருப்பது, நறுமணங்கள் பூசிக் கொள்வது, கற்பனை செய்து கொள்வது என ஏற்ற மனநிலை உருவாக்கப்பட வேண்டும்.
2. பாலியல் நிலையில் பரிசோதனைகள் மேற்கொள்வது
சுய இன்பம் மேற்கொள்பவர்கள் அனைவருக்கும் பிடித்த நிலை (position) என்பது இருக்கும். எனினும், எப்போதும் அதனையே தொடர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. புதிதாக வெவ்வேறு நிலைகளைப் பரிசோதனை செய்வது புதிய அனுபவம் அளிப்பதாகவும், உங்கள் தேவைகளை நீங்களே புரிந்து கொள்ளவும் பயன்படும். எனவே சாய்ந்து அமர்வது, படுத்துக் கொள்வது, நாற்காலியில் அமர்வது முதலான நிலைகளைப் பரிசோதனை செய்யலாம். இணையோடு உடலுறவு மேற்கொள்ளும் போது, உங்களுக்குத் தேவையான கட்டளைகளைக் கொடுக்கவும் இது உதவி செய்யும்.
3. விரைவாக சுய இன்பத்தை மேற்கொள்வது
சுய இன்பம் என்பது வெறும் உச்சநிலையை அடைவதற்கான ஒன்று மட்டுமல்ல. அது உங்களை நீங்களே புரிந்து கொள்வதற்காக மேற்கொள்ளப்படுகிறது. எனவே பொறுமையாகவும், உங்களை மகிழ்ச்சியாக மாற்றுவதைப் புதிதாக செய்து பார்க்கவும் முயலவும். உங்கள் கைகளை மாற்றலாம்; வேகத்தை மாற்றலாம். இது உச்சநிலை அனுபவத்தை அதிகரிக்கும்.
4. உடலில் ஏதேனும் ஒரு பகுதி மீது மட்டும் கவனம் செலுத்துவது
சுய இன்பம் மேற்கொள்ளும் போது, புதிய பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான நேரம் அதிகம் இருப்பதால், பாலுறுப்புகள் மீது மட்டும் கவனம் செலுத்துவது அதிகபட்ச மகிழ்வை அளிக்காது. எனவே உங்கள் கழுத்து, தோள்பட்டை, உதடுகள், வாய் முதலான உடலின் பல்வேறு பகுதிகளையும் தொடுவதும், தடவுவதும் சுய இன்பத்தின் உச்சநிலையை மேலும் அதிகரிக்கும்.
5. அதிகளவில் சுய இன்பம் மேற்கொள்வது; மூர்க்கமாக மேற்கொள்வது
சுய இன்பம் என்பது மகிழ்ச்சிக்காக மேற்கொள்ளப்படுவது. எனவே அதனை பலவந்தமாக செய்வதோ, சில நிமிடங்களில் முடித்துக் கொள்வதோ தவறானது. மொத்தமான உற்சாகத்தை அனுபவிக்க, உங்கள் உடலை நீங்கள் மென்மையாகக் கையாள வேண்டும். மேலும், தினமும் சுய இன்பம் கொள்வது, ஒரே நாளில் மூன்று முறை சுய இன்பம் கொள்வது முதலானவற்றைத் தவிர்க்க வேண்டும். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறைகள் சுய இன்பம் மேற்கொள்வது போதுமானது. இது உங்கள் உடலைப் பொருத்தது என்றாலும், இதனைச் சரியாக மேற்கொள்வதால், அனைத்து விதமான நன்மைகளையும் பெறலாம்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )