மேலும் அறிய

Makhana Vs Peanuts:மக்கானா - வேர்க்கடலை; இரண்டில் எது உடல் எடையை குறைக்க சிறந்தது?தெரிஞ்சிக்கோங்க!

Makhana Vs Peanuts: வேர்க்கடலை, மக்கானா இரண்டில் எது உடல் எடையை குறைக்க சிறந்தது என்பதை பற்றி காணலாம்.

ஸ்நாக் டைம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற விரும்புபவர்களுக்கு ஊட்டச்சத்து நிபுணர்கள் சில பரிந்துரைகளை வழங்குகின்றனர். காலை உணவு, மதிய உணவு சாப்பிட்ட 2 மணி நேரம் பிறகு பழங்கள், ஜூஸ் உள்ளிட்டவற்றை சாப்பிடலாம். காலை 8 மணிக்குள் உணவை முடிவித்துவிட்டால் 11 மணி வாக்கில் ஸ்நாக்ஸ் ஏதாவது சாப்பிடலாம் என்கின்றனர். குழந்தைகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து சாப்பிடுவது அல்லது அவர்களுக்கு பள்ளி நேர ப்ரேக் டைம் ஸ்நாக் என எதுவாக இருந்தாலும் முடிந்த அளவு ஆரோக்கியமானவற்றை கொடுக்க வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். 

உடல் எடையை குறைக்க அல்லது நிர்வகிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் மக்கான் சாப்பிடுவது உதவுமா என்று கேட்டால் ’ஆம்’ என்பது நிபுணர்களின் பதிலாக இருக்கிறது. புரோட்டீன் அதிகம் உள்ள வேர்க்கடலையை ஸ்நாக்ஸா சாப்பிடுவர்களும் உண்டு. வேர்க்கடலை, மக்கான் இவற்றில் எது சிறப்பானது என்பது பற்றி நிபுணர்கள் தெரிவிப்பதை காணலாம்.

மக்கானா:

fox nuts, makhana என்றழைக்கப்படும் தாமரை மலர் விதைகள் ஸ்நாக் ஆக சாப்பிடுவதை பரவலாக காண முடிகிறது. இதில் புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் ஏ, மெக்னீசியம், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளது. குறைந்த கலோரி இருப்பதால் உடல் எடை குறைக்கும் பயணத்திற்கு உதவும். அமெரிக்க வேளாண் துறை வெளியிட்டுள்ள தகவலின் படி, 50 கிராம் மக்கானில் 170 கலோரி உள்ளது. இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் அடிக்கடி பசி உணர்வு ஏற்படாது. நிறைய சாப்பிட வேண்டிய அவசியம் ஏற்படாது. திருப்தியுடன் சாப்பிட்ட உணர்வை நீண்ட நேரத்திற்கு தரும். 

வேர்க்கடலை:

வேர்க்கடலையில் ஏராளமான சத்துகள் நிறைந்திருப்பது நாம் அறிந்ததே.  இதில் புரதச்சத்தும் நார்ச்சத்தும் அதிகம் இருக்கிறது. புரதம், நார்ச்சத்து இரண்டும் உடல் எடையை குறைக்க அவசியமான சத்துகள் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆன்டி - ஆக்ஸிடட்ன், வைட்டமின் பி, மினரல்ஸ், பாஸ்பரஸ், மெங்கனீஸ் உள்ளிட்டவை உள்ளது. 50 கிராம் நிலக்கடலையில் 280 கலோரி இருக்கிறது. 

உடல் எடையை குறைக்க சிறந்தது எது?

உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் குறைந்த கலோரி உள்ள உணவுகள், ஊட்டச்சத்து மிகுந்தவற்றை சாப்பிட வேண்டும். அப்படியிருக்கையில், உடல் எடையை குறைக்கும் பயணத்தில் இருப்பவர்களுக்கு மக்கானா சிறந்த தேர்வு. ஏனெனில் வேர்க்கடலையில் மக்கானாவை விட அதிக கலோரி உள்ளது. இரண்டும் ஊட்டச்சத்து நிறைந்தது என்றாலும் தினமும் சாப்பிடுவது நீங்கள் கலோரியை கவனத்துடன் கண்காணிக்க வேண்டிருக்கும். அதனால், மக்கானாவை டயட்டில் சேர்க்கலாம். 

உணவில் உள்ள கலோரியை கவனித்து சாப்பிட கூடியவர் என்றால் நீங்கள் மக்கானாவை ஸ்நாக் நேரத்திற்கு தேர்வு செய்யலாம். வாரத்தில் இரண்டு நாட்கள் என வேர்க்கடலையை சாப்பிடலாம். அதுவும் உப்பு சேர்த்த வேர்க்கடலையை தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். 

பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கேள்வி எழும்போது விசாரணை செய்யுங்கள்! - வேங்கை வயல் விவகாரத்தில் விஜய் ஆவேசம்
கேள்வி எழும்போது விசாரணை செய்யுங்கள்! - வேங்கை வயல் விவகாரத்தில் விஜய் ஆவேசம்
NEET 2025 New Pattern: மாணவர்களே மறக்காதீங்க; நீட் தேர்வு வினாத்தாளில் முக்கிய மாற்றம்- என்டிஏ அறிவிப்பு
NEET 2025 New Pattern: மாணவர்களே மறக்காதீங்க; நீட் தேர்வு வினாத்தாளில் முக்கிய மாற்றம்- என்டிஏ அறிவிப்பு
Sarathkumar speech : அப்போ வேண்டாம்!  இப்போ வேண்டுமா? விஜய் கவர்னரை ஏன் சந்தித்தார் ? சரத்குமார் கேள்வி
Sarathkumar speech : அப்போ வேண்டாம்! இப்போ வேண்டுமா? விஜய் கவர்னரை ஏன் சந்தித்தார் ? சரத்குமார் கேள்வி
DMK Govt: இதுதான் திமுக அரசின் சமூகநீதியா? 13 ஆண்டாகியும் பணி நிரந்தரம் இல்லையா? ராமதாஸ் கண்டனம்!
DMK Govt: இதுதான் திமுக அரசின் சமூகநீதியா? 13 ஆண்டாகியும் பணி நிரந்தரம் இல்லையா? ராமதாஸ் கண்டனம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ajithkumar award: அஜித்திற்கு Padma Bhushan.. பின்னணியில்  இருக்கும் அரசியல்! விஜய் தான் காரணமா?TN BJP LEADER : ’அண்ணாமலையை தூக்குங்க’’கண்டிசன் போட்ட EPS..நயினாருக்கு அடித்த JACKPOTVarunkumar vs Seeman : ”கொஞ்ச நஞ்ச பேச்சா..” சீமானை சீண்டும் வருண்குமார்? முற்றும் மோதல்!Vengaivayal Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கேள்வி எழும்போது விசாரணை செய்யுங்கள்! - வேங்கை வயல் விவகாரத்தில் விஜய் ஆவேசம்
கேள்வி எழும்போது விசாரணை செய்யுங்கள்! - வேங்கை வயல் விவகாரத்தில் விஜய் ஆவேசம்
NEET 2025 New Pattern: மாணவர்களே மறக்காதீங்க; நீட் தேர்வு வினாத்தாளில் முக்கிய மாற்றம்- என்டிஏ அறிவிப்பு
NEET 2025 New Pattern: மாணவர்களே மறக்காதீங்க; நீட் தேர்வு வினாத்தாளில் முக்கிய மாற்றம்- என்டிஏ அறிவிப்பு
Sarathkumar speech : அப்போ வேண்டாம்!  இப்போ வேண்டுமா? விஜய் கவர்னரை ஏன் சந்தித்தார் ? சரத்குமார் கேள்வி
Sarathkumar speech : அப்போ வேண்டாம்! இப்போ வேண்டுமா? விஜய் கவர்னரை ஏன் சந்தித்தார் ? சரத்குமார் கேள்வி
DMK Govt: இதுதான் திமுக அரசின் சமூகநீதியா? 13 ஆண்டாகியும் பணி நிரந்தரம் இல்லையா? ராமதாஸ் கண்டனம்!
DMK Govt: இதுதான் திமுக அரசின் சமூகநீதியா? 13 ஆண்டாகியும் பணி நிரந்தரம் இல்லையா? ராமதாஸ் கண்டனம்!
Republic Day 2025 Parade LIVE:  டெல்லியில் கோலாகலம்..! பிரமாண்ட அணிவகுப்பு, வியக்கவைக்கும் இந்திய ராணுவ பலம்
Republic Day 2025 Parade LIVE: டெல்லியில் கோலாகலம்..! பிரமாண்ட அணிவகுப்பு, வியக்கவைக்கும் இந்திய ராணுவ பலம்
Republic Day Images: ஜெய்ஹிந்த்! இந்த ஃபோட்டோ அனுப்பி வாழ்த்து சொல்லுங்க! களைகட்டும் குடியரசு தினம்!
Republic Day Images: ஜெய்ஹிந்த்! இந்த ஃபோட்டோ அனுப்பி வாழ்த்து சொல்லுங்க! களைகட்டும் குடியரசு தினம்!
Republic Day 2025 Live: தேசியக்கொடியை அவிழ்த்து பறக்கவிட்டு மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியர் - எங்கே தெரியுமா?
Republic Day 2025 Live: தேசியக்கொடியை அவிழ்த்து பறக்கவிட்டு மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியர் - எங்கே தெரியுமா?
Republic Day 2025 LIVE: டெல்லியில் தேசிய கொடி ஏற்றினார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு
Republic Day 2025 LIVE: டெல்லியில் தேசிய கொடி ஏற்றினார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு
Embed widget