குங்குமப்பூ கலந்த பாலை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன ?

Published by: விஜய் ராஜேந்திரன்

தூங்குவதற்கு முன் குடிக்கலாம்

2-3 குங்குமப் பூக்களை எடுத்து சூடான பாலில் கலந்து, 5 நிமிடங்கள் வைத்து, கொஞ்சம் தேன் சேர்த்து,நன்கு கலந்து தூங்குவதற்கு முன்பு குடிக்கலாம்

நிம்மதியான தூக்கம்

குங்குமப் பூவில் உள்ள மாங்கனீஸ் ஒரு லேசான மயக்க மருந்து மாதிரி செயல்பட்டு, மூளையை ரிலாக்ஸ் ஆக வைத்து இரவில் நிம்மதியான தூக்கத்தை தருகிறது

நினைவாற்றல்

குங்குமப் பூ நமது எண்ணம் மற்றும் நினைவாற்றலை ஒழுங்குப்படுத்த உதவும்

மாதவிடாய் வலி

குங்குமப் பூவில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருள் உள்ளது. அடி வயிற்று வலி, மாதவிடாய் வலி, அதிக இரத்தப்போக்கு போக்க உதவும்

மன அழுத்தம்

குங்குமப் பூவில் கரோட்டினாய்டு, விட்டமின் பி போன்ற பொருட்கள் நமது மூளையில் உள்ள சொரோடோனின் மற்றும் மற்ற வேதியியல் பொருட்களை சரி செய்து மன அழுத்தத்தை குறைக்க உதவும்

இதய நோய்

குங்குமப் பூவில் அதிகமான குரோசிடின் உள்ளது. குரோசிடின் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறைத்து இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்க உதவும்

கீழ் வாத வலி

குங்குமப் பூவில் அதிகமான அழற்சி எதிர்ப்பு பொருள் உள்ளது. திசுக்களில் உள்ள லாக்டிக் அமிலத்தை கரைத்து அழற்சியை போக்கி கீழ் வாத வலியை குணப்படுத்த உதவும்

நோய் எதிர்ப்பு சக்தி

குங்குமப் பூவில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

இரத்த அழுத்தம்

குங்குமப் பூவில் உள்ள குரோசிடின் நமது உடலில் இரத்த ஓட்டத்தை நன்றாக்கி இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்

இருமல், சளி

குங்குமப் பூ இருமல், சளி மற்றும் தொண்டை புண் பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த மருந்து. குளிர் காலத்திற்கு மிகவும் நல்லது