Jaggery Benefits : அடேங்கப்பா.. இனிமே இதுக்கு மாறுவீங்க.. அச்சு வெல்லத்தில் இத்தனை நன்மைகளா?
நம் வீட்டுப் பெரியவர்கள் ஒரு நாளில் ஏதேனும் ஒரு உணவு வேளைக்குப் பின்னர் கொஞ்சம் வெல்லத்தை எடுத்து வாயில் போடுவதைப் பார்த்திருப்போம். அந்த வெல்லத்துக்குப் பின்னால் அத்தனை நன்மைகள் இருப்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?!
நம் வீட்டுப் பெரியவர்கள் ஒரு நாளில் ஏதேனும் ஒரு உணவு வேளைக்குப் பின்னர் கொஞ்சம் வெல்லத்தை எடுத்து வாயில் போடுவதைப் பார்த்திருப்போம். அந்த வெல்லத்துக்குப் பின்னால் அத்தனை நன்மைகள் இருப்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?!
வாங்க வெல்லத்தின் நன்மைகளை அறிவோம்..
20 கிராம் வெல்லத்தில் 38 கலோரி உள்ளது. இதில் 9.8 கிராம் கார்போஹைட்ரேட், 9.7 கிராம் சர்க்கரை, 0.01 கிராம் புரதம், இதுதவிர கோலைன், பீட்டைய்ன், வைட்டமின் பி12, பி6, ஃபோலேட், கால்சியம், அயர்ன், பாஸ்பரஸ், மக்னீஸியம், செலீனியம், மேன்கனீஸ் என நிறைய சத்துக்கள் உள்ளன. சரி இவ்வளவு சத்துகள் உள்ளதே இவை நம் உடலில் என்ன செய்யும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டாமா?
மலச்சிக்கலைத் தீர்க்கும்..
வெல்லம் நம் உடலில் உள்ள ஜீரன நொதிகளை தூண்டிவிட்டு மலச்சிக்கலைத் தீர்க்கும்.
வயிற்றுக்குக் குளிர்ச்சி..
அதுமட்டுமல்லாமல் வெல்லம் நம் உடல் வெப்பநிலையை சீராக வைத்திருக்க உதவும். இதனால், வயிறு குளிர்ச்சி அடையும். வெல்லத்தைக் கொண்டு ஷர்பத் செய்து குடிப்பதல கோடை கால வெப்பத்தில் இருந்து தப்பிக்கலாம்.
சருமத்துக்குப் பொலிவு..
வெல்லத்தில் வைட்டமின்களும், மினரல்களும் நிறைவாக இருப்பதால் அது சருமத்துக்குப் பொலிவு தருகிறது. முகத்தில் வரும் பருக்களை தவிர்த்து, கரும்புல்லிகளையும் மறையச் செய்கிறது. பொதுவாக சருமம் முதிர்ச்சி அடைவதைத் தள்ளிப்போடுகிறது.
எதிர்ப்பு சக்தி..
வெல்லத்தில் ஜிங்க், செலேனியம் இருப்பதால் இது தொற்றுநோய்களுக்கு எதிராகப் போராடுகிறது. இதிலுள்ள ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்டுகள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சிதைவுகளை தடுக்கிறது. அதுமட்டுமல்லாது ரத்தத்தில் ஹீமோகுளோபின் எனப்படும் சிவப்பு அணுக்களின் அளவைக் கூட்டுகிறது.
ஆன்டி அலர்ஜிக்..
அதேபோல், ஒவ்வாமையால் ஏற்படும் ஆஸ்துமா நோய்க்கு வெல்லம் ஒரு அருமருந்து. வெல்லம் ஆன்டி அலர்ஜிக் தன்மை உடையது எனப் பலருக்கும் தெரியாது. பித்தம், வாதம் மற்றும் காமாலை நோய்களுக்கு வெல்லத்தை பானமாகச் செய்து தரலாம்.
பெண்களுக்கு மருந்து..
பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனையின் போது உடல் சோர்வாகவும், காரணமின்றி படபடப்பாகவும் இருக்கும். சிலருக்கு தலைசுற்றலும் இருக்கும் அந்நிலையில் வெல்லம் சாப்பிட சரியாகிவிடும். இதைத் தான் இப்போதெல்லாம் சாக்கலேட் கிரேவிங் என்று சொல்லிக் கொள்கிறார்கள். உண்மையில் ஒரு துண்டு வெல்லம் அது மாதிரியான நேரத்தில் மாயம் செய்யும்.
இத்தனை நன்மை உள்ள வெல்லத்தை நாம் பயன்படுத்தத் தவறுக் கூடாது. வெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாக இனிப்பு வகைகளை வெல்லம், கருப்படி மூலம் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் இதில் உள்ள அத்தனை சத்துகளும் நிறைவாக குழந்தைகளுக்குக் கிடைக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை. மண்டை வெல்லம், அச்சு வெல்லம் என வகை வகையாக வெல்லம் கிடைக்கிறது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )