மேலும் அறிய

Jackfruit Biriyani : சிக்கன் பிரியாணி சுவையில், பலாக்காய் பிரியாணி எப்படி செய்வதென்று பார்க்கலாமா?

சிக்கன் பிரியாணியின் சுவையை மிஞ்சும் பலாக்காய் பிரியாணி எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க...

தேவையான பொருட்கள் 
 
300 கிராம் பலாக்காய், ஒன்றரை டம்ளர் அரிசி, இரண்டு பெரிய வெங்காயம், இரண்டு பெரிய தக்காளி, 2 பச்சை மிளகாய், 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 2 ஸ்பூன் கெட்டி தயிர், அரை எலுமிச்சம்பழம், ஒரு குழி கரண்டி சமையல் எண்ணெய், நாலு ஸ்பூன் நெய், ஒரு பட்டை, இரண்டு ஏலக்காய், மூன்று கிராம்பு, ஒரு அன்னாசிப்பூ, 1 பிரியாணி இலை, ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள், 1/2 ஸ்பூன் பிரியாணி மசாலா, கால் ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு கைப்பிடி புதினா, சிறிது கொத்தமல்லி இலை, தேவையான உப்பு, தண்ணீர்  தேவையான அளவு.
 
செய்முறை   
                                                                                                                                                                                                                     
பலாக்காயை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.  இஞ்சி,பூண்டு அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். அடுப்பில் குக்கரை வைத்து சமையல் எண்ணெயை ஊற்றி நெய் 2 ஸ்பூன் ஊற்றி ,பட்டை, கிராம்பு ,ஏலக்காய் ,பிரியாணி இலை சேர்க்க வேண்டும்.  பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
 
இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை 2 நிமிடம் வதக்க வேண்டும்.  பின் தக்காளியை சேர்த்து நன்கு வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள பலாக்காயை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.  பிறகு பிரியாணி மசாலா, மிளகாய் தூள்,மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி விட்டு அரை டம்ளர் தண்ணீர் விட்டு குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.
 
குக்கரில் அழுத்தம் போனதும்  மூடியைத் திறந்து அடுப்பில் வைத்து தயிர் சேர்த்து கிளறிவிட்டு அரிசியை போட்டு ஒரு நிமிடத்திற்கு கிளறிவிடவும். பிறகு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கைப்பிடி புதினா கொத்தமல்லி இலை கொஞ்சம் சேர்த்து கிளறி விட்டு எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து விட்டு, கொதி வந்ததும் குக்கரை மூடி அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும். 15 நிமிடங்களுக்கு பிறகு 
பிறகு குக்கரின் விசில் அடங்கியதும் மூடியைத் திறந்து கிளறிவிட்டு,  மீண்டும் 10 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து தம் போட வேண்டும். 
பிறகு அடுப்பை அணைத்து விட்டு, விசில் அடங்கியதும் குக்கரைத் திறந்து, 2 ஸ்பூன் நெய்யை ஊற்றி லேசாக கிளறி விட்டு இறக்கினால் பலாக்காய் பிரியாணி தயார். 

தலைப்பு செய்திகள்

Fridge: பிரிட்ஜ் ஃப்ரீசரில் ஐஸ் கட்டிகள் மலைபோல் குவிகிறதா? முக்கிய காரணங்கள் இதோ!
Fridge: பிரிட்ஜ் ஃப்ரீசரில் ஐஸ் கட்டிகள் மலைபோல் குவிகிறதா? முக்கிய காரணங்கள் இதோ!
Washing Machine: வாஷிங் மெஷினில் இந்த 6 வகையான துணிகளை ஒருபோதும் துவைக்கக் கூடாது..!
Washing Machine: வாஷிங் மெஷினில் இந்த 6 வகையான துணிகளை ஒருபோதும் துவைக்கக் கூடாது..!
Pressure Cooker: பிரஷர் குக்கரில் சமைப்பது இவ்வளவு ஆபத்தா? எந்தெந்த உணவு விஷமாக மாறும்? இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி எச்சரிக்கை!
Pressure Cooker: பிரஷர் குக்கரில் சமைப்பது இவ்வளவு ஆபத்தா? எந்தெந்த உணவு விஷமாக மாறும்? இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி எச்சரிக்கை!
தஞ்சாவூர் பாரம்பரிய ‘தண்ணி சாறு’: செரிமானத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் உகந்த கிராமத்து அமிழ்தம்!
தஞ்சாவூர் பாரம்பரிய ‘தண்ணி சாறு’: செரிமானத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் உகந்த கிராமத்து அமிழ்தம்!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget