Health Tips: முகத்தை அழகாக வைத்திருப்பது எவ்வாறு?ஒப்பனை தேவையானதா?
ஆண்களை விட பெண்கள் தங்களது முகத்தை அழகாக வைத்துக் கொள்ள பலவிதமான மேக்கப் கிட்களை பயன்படுத்துகின்றனர்.
![Health Tips: முகத்தை அழகாக வைத்திருப்பது எவ்வாறு?ஒப்பனை தேவையானதா? International Makeup Day 2022: 8 Festive Makeup Trends For Fall 2022 Health Tips: முகத்தை அழகாக வைத்திருப்பது எவ்வாறு?ஒப்பனை தேவையானதா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/12/6cf3b6fcf67531d825ec12d9bb7b59aa1662923050515224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது தமிழரின் முதுமொழி. ஆகவே குறைந்தபட்ச ஒப்பனை என்பது இன்றைய காலத்தில் தேவையாக இருக்கிறது. இதன்படி செப்டம்பர் 10 உலக மேக்கப் தினமாக அல்லது உலக ஒப்பனை தினமாக கொண்டாடப்படுகிறது. ஆண்களை விட பெண்கள் தங்களது முகத்தை அழகாக வைத்துக் கொள்ள பலவிதமான மேக்கப் கிட்களை பயன்படுத்துகின்றனர். தங்களது சருமத்தை மிக அழகாகவும், பளபளப்பாகவும் மற்றவர்களை கவர்வதற்காகவே பல விதமான மேக்கப்களை பயன்படுத்துகின்றனர். இதற்காகவே மேக்கப் தினம் என்று திருவிழாவாக கொண்டாடுகின்றோம்.
உங்கள் முகம் பொலிவுடன் தோற்றமளிக்க :
வெயில் காலங்களில் நீங்கள் அதிகம் வெளியே செல்வதால் உங்கள் முகத்தின் சருமம் பாதிக்கப்படுகிறது. அது மட்டும் இன்றி சாலையோரங்களில் வாகனங்களில் செல்லும்போது மண் துகள்கள் முகத்தில் படுவதனால் நமது முகத்தின் சருமம் பாதிக்கப்படுகிறது. இதனை சரி செய்வதற்காகவே, டோனிங் மற்றும் மான்சரைசிங் செய்யப்படுகிறது. இது செய்வதனால் முகம் பளபளப்பாகவும் மென்மையாகவும் காணப்படுகிறது. தளர்வான செட்டிங் பவுடருக்குப் பதிலாக நீர் சேர்த்து செட்டிங் ஸ்ப்ரே பயன்படுத்தி,இந்த ஃபேஸ் பேஸை முகத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.
போல்ட் பிரவுஸ்
பெண்கள் அதிக அளவு பயன்படுத்தக்கூடிய தடிமனான பீச் மற்றும் இளஞ்சிவப்பு தேர்வுகளில் பிரைட் கலர் ப்ளஷ்கள் ஒரு விரல் அல்லது சிறிய தூரிகையைப் பயன்படுத்தி கன்னங்களில் மற்றும் கன்னத்தின் மேல் உயரத்தில் வண்ணத்தை வைக்கவும். அதனை கன்னங்கள் முதல் முகத்தில் கண் இமைகள் வரை வைத்துக் கொள்ளவும். இதனால் முகம் பார்க்க மிகவும் அழகாக தெரியும். எனவே இதை பெண்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
பெஜ்வெல்ட் கண்கள்
பெண்கள் இப்பொழுது பெஜ்வெல்ட் கண்கள் இப்போது அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். டிரெண்ட் வண்ண ஐலைனர்கள், கிராஃபிக்கல் ஐலைனர்கள், கனமான டெயிலை விட மிகச் சிறிய இயற்கையான லிப்ட் ஐ லைனர்கள் ஆகியவை இந்த காலகட்டத்தில் அதிகம் பயன்படுத்துகின்றனர். மெட்டாலிக், மினுமினுப்பு நிறமிகள் மற்றும் தடித்த நிறங்கள் இப்போது இளம் பருவத்தினரும் வயதான பருவத்தினரும் அதிகம் பயன்படுத்தக்கூடியதாக உள்ளன. நீங்கள் உங்கள் முகத்தை இந்த காலத்திற்கு ஏற்ப மாற்ற விரும்பினாலும் பாரம்பரியமாகவும் இருக்க விரும்பினால், கேட் ஐ விங்டு லைனரை பயன்படுத்துங்கள்.இது கேட் ஐ ஐலைனரின் சிறந்த எடுத்துக்காட்டு. சரியான இறக்கையைப் பெறுவதற்கான சீரான வழிகாட்டுதலைப் பெற, கண்களின் வெளிப்புற மூலையில் ஒரு டேப்பைப் பயன்படுத்தவும். இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஐலைனரை கண்ணின் உள் மூலைக்கு கொண்டு செல்லாமல், உங்கள் மேல் மூடியின் நடுவில் இருந்து வெளிப்புற மூலையை நோக்கி அதை வரைய வேண்டும். உங்கள் கண்களில் சரியான ஆழத்தை உருவாக்க, மஸ்காராவின் இரட்டை கோட் மூலம் அதை மேலே போடவும்.
தடித்த புருவங்கள்:
முகத்திற்கு அழகின் முக்கியத்துவமாக விளங்குவது புருவங்கள். புருவங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக பல வகைகளில் இருக்கின்றன. தடித்த புருவங்கள்,இயற்கை புருவங்கள், பஞ்சுபோன்ற புருவங்கள்,லேமினேஷன் புருவம் அல்லது சோப்பு புருவம் என்பது, புருவங்களை அழகாகும் முறையாகும். "இது புருவ முடியை பக்கவாட்டிற்கு பதிலாக மேல்நோக்கி செல்ல வைப்பதன் மூலம் அழகாக அடர்த்தியான புருவத்தை உருவாக்குகிறது. ப்ரோ பென்சில், ப்ரோ மெழுகு, புருவம் போமேட் அல்லது டாட்டூ எஃபெக்ட் ப்ரோ மார்க்கர் போன்ற புருவங்களை அழகாக்கும் பொருட்களைப் பயன்படுத்தி புருவங்களை அழகுபடுத்துங்கள்.
உங்கள் மேக்கப்பின் நீண்ட ஆயுளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்று உங்கள் மாய்ஸ்சரைசர். ஒரு மாய்ஸ்சரைசர் சரியாக ஒரு வழவழப்பு தன்மையை கொடுக்கிறது.இது உங்கள் மேக்கப்பை மிக விரைவாக சரியச் செய்யும், எனவே டெர்மலோஜிகா ஆக்டிவ் மாய்ஸ்ட் போன்ற தடயமே இல்லாத தயாரிப்பைத் தேர்ந்தெடுக்கவும் .
வீட்டில் விசேஷம் மற்றும் பண்டிகை போன்ற நாட்களில் கோஹ்ல்-ரிம் மற்றும் வெண்கல ஐ ஷேடோ தோற்றத்துடன் கூடிய பாரம்பரிய மென்மையான ஸ்மோக்கி போன்றவை முகத்திற்கு அழகை தருவதுடன் நல்ல பயனை தருகிறது. முகத்தில் கறை படியக்கூடிய மென்மையான கோல் பென்சிலைப் பயன்படுத்தவும், அதன் மேல் ஒரு வெண்கல ஐ ஷேடோவை விளிம்புகளில் கலக்கவும். இது முகத்திற்கும், நிறத்திற்கும் ஏற்றார் போல நன்றாக வேலை செய்கிறது. அது மட்டும் இல்லாமல் நம் பாரம்பரிய உடைக்கும் சரியானதாக உள்ளது. இந்த தோற்றம் உங்களை உடனடியாக பண்டிகைக்கு தயாராக்கும்.
சிவப்பு கருஞ்சிவப்பு உதடுகள் மற்றும் பளபளப்பான உதடுகள்
பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் முகம் பளிச்சின்றும் காணப்படுவதற்கு சிவப்பு கருஞ்சிவப்பு உதடுகள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. நாம் அழகு படுத்துவது மிகவும் சுலபமான வேலை. இருப்பினும், சிவப்பு கருஞ்சிவப்பு உதடுகளை விரும்பினால் அல்லது முகம் அழகான தோற்றத்தைப் பெற விரும்பினால் சுத்தமான அடித்தளம் மற்றும் அழகான புருவங்களைச் சீர் செய்யுங்கள். அழகான உங்களது முகம் அதிகம் கவரப்படும்.பளபளப்பான உதடுகள் மற்றவர்களை கவர்ந்திழுக்கும்.வரும் காலகட்டத்தில் இளம் பருவத்தினரால் பளபளப்பான உதடுகள் பெறுவதற்காக தங்கள் ஒப்பனையில் அதிக கவனம் செலுத்துவர். உங்கள் உதட்டின் இயற்கை அழகை மறைத்து ஒரு அழகான உதட்டினை உங்களுக்கு தருகிறது. இதனால் உங்கள் முகத்திற்கு மென்மேலும் அழகு கூடிக் கொண்டே போகிறது.
வழியெங்கும் மினுமினுப்பு
உங்களது முகம் மற்றும் உடல் முழுவதும் அழகாக வைத்திருக்க விரும்பினால்தங்க ஐ ஷேடோவின் மேல் நுட்பமான தங்கம் அல்லது ஷாம்பெயின் மினுமினுப்பைப் பயன்படுத்தலாம். இதனால் பண்டிகை காலங்களில் உங்களது அழகை மெருகேற்றுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)