மேலும் அறிய
Advertisement
வீணாகும் உணவு பொருளை மீண்டும் உபயோகப்படுத்துவது எப்படி?
உணவை முன்கூட்டியே திட்டமிடுவது, தேவையானதை மட்டுமே வாங்குவது, சரியான உணவு சேமிப்பைக் கடைப்பிடிப்பது மூலமாக உணவு கழிவுகளை குறைக்கலாம். இப்படி உணவு கழிவுகளை குறைக்க சில வழிகளை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
உணவு கழிவுகள் ஒரு பிரச்சனையாக இருப்பதாக அமெரிக்கா வேளாண்மை துறை அறிவித்துள்ளது. உணவு விநியோகத்தில் ஆண்டுக்கு 30-40% வீணடிக்கப்படுவதாக கணக்கிட்டுள்ளது. உணவில் இருந்து வெட்டி எடுக்கப்படும் வேண்டாம் என தூக்கி போடும் கழிவுகள் பசுமை இல்லா வாயு வெளியேற்றத்தைஅதிகரிக்கிறது மற்றும் காலநிலை மாற்றத்திற்கு பங்களிக்கின்றன.
உணவை முன்கூட்டியே திட்டமிடுவது, தேவையானதை மட்டுமே வாங்குவது, சரியான உணவு சேமிப்பைக் கடைப்பிடிப்பது மூலமாக உணவு கழிவுகளை குறைக்கலாம். இப்படி உணவு கழிவுகளை குறைக்க சில வழிகளை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
- தர்பூசணி ஊறுகாய் - பெயர் கேட்பதற்கே சற்று வித்தியாசமாக இருக்கிறது அல்லவா. கோடைகாலத்தில் கிடைக்கும் தர்பூசணியில் இனிப்பாக இருக்கும் சதை பகுதிகளை சாப்பிட்டு தூக்கி எரியபடும் தோலை கொண்டு ஊறுகாய் போடலாம். மற்ற காய்களை போல தோலை சிறிதாக வெட்டி வினிகர், தண்ணீர், சர்க்கரை மற்றும் உப்பு வேகவைக்கவும்.பின்னர் அவற்றை குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தி கொள்ளலாம்.இஞ்சி, இலவங்கப்பட்டை, மிளகுத்தூள் அல்லது கிராம்பு போன்ற பிற மசாலாப் பொருட்களையும் சுவைக்காக சேர்க்கலாம்.
- காய்களை மீண்டும் வீடு தோட்டத்தில் வளர்த்தல் - தண்டுகளை சிறிதாக வெட்டி நீரில் வைத்தால் மீண்டு வேர் முளைக்க ஆரம்பிக்கும்.இவற்றை ஒரு தொட்டியில் மண் போட்டு வைத்து மீண்டும் வளர்த்து பயன்படுத்தி கொள்ளலாம்.
- காப்பி தூளை உரமாக பயன்படுத்தாலும். வீட்டில் வளர்க்கும் செடிகளுக்கு இந்த காபி தூள் சிறந்த உரமாக பயன்படுகிறது. இது நீரை நீண்ட நேரம் சேர்த்து வைக்கவும், செடிகள் சீக்கிரம் வளரவும் உதவுகிறது...
- பழ தோல்களை வைத்து ஜாம் செய்தல் - பழ தோல்களை சீவி 25-30 நிமிடங்கள் தண்ணீரில் சமைக்கவும், தோல்களை வடிகட்டவும், திரவத்தை அதிக வெப்பத்தில் சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறுடன் கொதிக்க வைக்கவும். பின்னாடி ஆறவைத்து குளிர்சாதன பெட்டியில் வைத்து தேவை படும்போது பயன்படுத்திக்கொள்ளலாம்.
- தக்காளியை மீண்டும் பயன்படுத்துதல் - அரைத்த தக்காளி மீதம் இருக்கும் மற்றும் அதனுடன் தக்காளி சாஸ் மீதம் இருப்பவற்றை இரண்டையும் சேர்த்து குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்து கொள்ளலாம். 3 மாதங்கள் வரை இவற்றை பயன்படுத்தி கொள்ளலாம்.
- எலும்பு குழம்பு தயாரிக்க முயற்சிக்கவும் - இறைச்சியிலிருந்து மீதமுள்ள எலும்புகளை சேமிப்பதன் மூலம் எலும்பு குழம்பு வீட்டிலேயே செய்யலாம்.வெறுமனே ஒரு பெரியபாத்திரத்தில் வறுத்த எலும்புகளைச் சேர்த்து எலும்புகள் முழுமையாக நீரில் மூழ்கும் வரை தண்ணீரில் நிரப்பவும். லேசாக வெப்ப நிலையில் மூடி வைத்து , 24-48 மணி நேரம் சமைக்க விடவும். அடுத்து, ஒரு சல்லடை பயன்படுத்தி குழம்பு வடிகட்டி, அதை ஜாடிகளுக்கு மாற்றி, குளிர்சாதன பெட்டியில் சேமிக்கவும்.எலும்பு குழம்பு காபி அல்லது தேநீருக்கு ஒரு சூடான, இனிமையான மாற்றாக மட்டுமல்லாமல், சூப், மற்றும் கிரேவிக்கு ஒரு சிறந்த கூடுதலாகிறது.
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
கிரிக்கெட்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion