Watch Video | பழைய புடவைகள் இருக்கா? 10 நிமிடங்களில் மிருதுவான மெத்தையா ரெடி.. வீடியோ
பழைய புடவைகளைக் கொண்டு வெறும் 10 நிமிடங்கள் மெத்தை செய்யலாம். எப்படி எனக் கேட்பவர்களுக்கு வீடியோவைப் பகிர்கிறோம். வீடியோ டேட்டாவை யோசிப்பவர்களுக்கு செய்தியாகவே கொடுக்கிறோம்.
பழைய புடவைகளைக் கொண்டு வெறும் 10 நிமிடங்கள் மெத்தை செய்யலாம். எப்படி எனக் கேட்பவர்களுக்கு வீடியோவைப் பகிர்கிறோம். வீடியோ டேட்டாவை யோசிப்பவர்களுக்கு செய்தியாகவே கொடுக்கிறோம்.
நீங்கள் பலமுறை உடுத்தி நிறம் மங்கி, இல்லை அபிமானத்தில் குன்றிப் போய் பீரோ, அலமாரிகள் அடைத்துக் கொண்டு சேலைகள் நிறைய இருக்கின்றனவா? அதில் 10 புடவைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அவை நல்ல துவைத்து, காயவைத்ததாக இருக்கட்டும்.
சேலையை மடிப்பதிலும் ஒரு நுட்பம் இருக்கிறது. சேலை எப்போதும் செவ்வக வடிவில்தான் இருக்கும். சேலையை மூன்றாக மடிக்கவும். அதேபோல் 10 சேலைகளையும் நீள வாக்கிலேயே மூன்றாக மடித்துக் கொள்ளவும். பின்னர் அவற்றை ஒன்றன் மீது ஒன்றாக அழகாக, தொய்வில்லாமல் அடுக்கிக் கொள்ளுங்கள். குறைந்தது 7 சேலைகளாக வைத்துக் கொள்ளுங்கள். அவ்வாறாக சேலைகளை அடுக்கிய பின்னர் நான்கு ஓரங்களிலும் பின் வைத்து அவற்றை சேர்த்துக் கொள்ளவும். அடுத்தது தையல்தான்.
தையலை ஆரம்பிக்கும் முன். அந்த சேலைகளைவிட பெரிதாக இருக்கும் பழைய போர்வையை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தப் போர்வையில் கீழ் பகுதி மேலாக வைத்து அதன் மீது சேலைகளை வைக்கவும். பின்னர் 4 புறங்களிலும் அந்தப் போர்வையை மடித்து கெட்டி நூல் அல்லது ட்வைன் நூல் வாங்கிக் கொள்ளுங்கள். நூலின் எண் 08. ஊசியும் நன்றாக கனமானதாக இருக்க வேண்டும். ஊசியில் நூலைக் கோர்த்து போர்வை, சேலைகள் என அனைத்திலும் ஊடுருவும்படி செய்து தையல் போட்டுக் கொள்ளுங்கள்.
இவ்வாறாக 4 பக்கமும் தையலை சுற்றிலும் முடித்த பின்னர். நடுவில் குறுக்கே தையல் போட்டுக் கொள்ளுங்கள். இப்படி 4 ஐந்து இடங்களில் முடிச்சுப் போட்டு தேவையற்ற நூலை வெட்டிவிடுங்கள். அவ்வளவு தான் இருவர் படுத்துறங்கு மெத்தை தயார்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள யூடியூப் சேனலை நடத்தும் பெண், பழைய சேலைகள் துணிகள் கொண்டு நிறைய டிப்ஸ் கொடுத்துள்ளார்.
அத்தனையும் கீழே குப்பையாக எறியக் கூடிய துணிகளை உபயோகமான பொருட்களாக மாற்றுவதற்கான டிப்ஸ். இந்த வீடியோவில் இருவர் படுக்கும் மெத்தை செய்துள்ளது போல் இதற்கு முந்தைய வீடியோவில் பழைய பாயையும் சேலைகளையும் கொண்டு ஒருவர் தூங்கும் மெத்தை எப்படி உருவாக்கலாம் என டிப்ஸ் கூறியுள்ளார். பார்த்து பயனடையுங்கள்.
ஆனால், என்னதான் ரீயூஸ் பொருள் என்றாலும் கூட பழைய துணிகளை அதை வாங்க இயலாதவர்களுக்கு கொடுப்பதே சிறந்தது. நமக்குத் தேவையற்றது சிலருக்கு அத்தியாவசியமானதாக இருக்கலாம் அல்லவா?! ஆகையால் இயனற வரை நாம் பயன்படுத்தி நல்ல நிலையில் இருக்கும் உடைகளை இல்லாதோருக்கு தானமாகக் கொடுக்கலாம். அதையும் தாண்டி கிழிந்தவற்றை ஏதாவது ஆர்ட் ஃப்ரம் வேஸ்ட் வகையறாவில் ட்ரை பண்ணலாம்.