To Keep Carrots Fresh Longer: கேரட் ஃப்ரெஷாக இருக்க வேண்டுமா? டிப்ஸ் இதோ!
To Keep Carrots Fresh Longer: கேரட்டில் அதிகமான சத்துக்கள் இருப்பதால் உணவில் தவறாமல் எடுத்துகொள்கிறோம். அப்படியிருக்க, இருந்தாலும் அளவோடு சாப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
குளர்கால உணவுகளில் மிகவும் வைரப்ரண்ட் நிறத்தில் இருக்கும் காய்கறி.. கேரட். கேரட் புலாவ், கேரட் அல்வா, கேரட் ஜூஸ், கேரட் மில்க் ஷேக், கேரட் ஐஸ்க்ரீம், கேரட் கேக் என லிஸ்ட் நீளும். ஆனாலும் கேரட்டை எப்படி ஃப்ரஸ்சாக வைத்திருப்பதற்கான டிப்ஸ் இதோ.
ஊட்டச்சத்து மிகுந்த கேரட்
கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்றவற்றிற்கு உதவுவதாக நிபூனர்கள் தெரிவிக்கின்றனர். இதில் அதிகமாக உள்ள நார்ச்சத்து குட் பாக்டீரியாக்களை அதாவது உடலுக்கு நன்மை அளிக்கக்கூடிய பாக்டீரியாக்கை உருவாக்குகிறது. ரத்தத்தில் இருக்கும் கொழுப்பைக் குறைக்க உதவும். இதயப் பிரச்னைகள் இரத்தக் கொழுப்பு அதிகரிப்பால் ஏற்படக்கூடியது. கேரட்டை அதிகமாக சாப்பிட்டால் இரத்தக் கொழுப்பு குறையும்.
ஆரோக்கியம் பெருக.. அளவோடு உண்பது அவசியம்
கேரட்டில் அதிகமான சத்துக்கள் இருப்பதால் உணவில் தவறாமல் எடுத்துகொள்கிறோம். அப்படியிருக்க, இருந்தாலும் அளவோடு சாப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அப்படி இல்லை என்றால் பக்க விளைவுகள் ஏற்படும்.இரண்டு வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு கேரட் அவ்வளவு பாதுகாப்பானது அல்ல. சிலருக்கு கேரட் உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதனால், சரும அலர்ஜி, வீக்கம், வயிற்றுப் போக்கு இது போன்ற பிரச்சனை வரும் எனவே கேரட்டை சாப்பிடும்போது மேற்கூறிய அறிகுறிகள் இருந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சர்க்கரை நோய், குடல் பிரச்சனைகள், சர்க்கரை அளவு குறைதல், ஹார்மோன் பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனை பெறாமல் கேரட் சாப்பிட கூடாது.
கேரட் ஃப்ரெஷாக இருக்க டிப்ஸ்...
கேரட் வாங்கும்போது அதன் நிறம், கேரட் மீதுள்ள டெக்சரை பார்த்து வாங்க வேண்டும். கேரட் மீது எந்த புள்ளிகளும் இல்லாம் இருக்க வேண்டும்.
தோல் நீக்கிய கேடரட்களை ஒரு டப்பாவில் தண்ணீரில் போட்டு மூடிவிடவும். 2-3 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் மாற்றிவிடவும்.
கேரட்டை தோல் நீக்கி, நறுக்கி (zip-lock) கவரில் போட்டு ஃப்ரீசலில் வைக்கவும். சமைக்கும் நேரத்தில் ஏற்கனவே நறுக்கி வைப்பது சமையலை நேரத்தை குறைக்கும்,
தோல் நீக்கி, நறுக்கிய கேரட் துண்டுகளை வேக வைத்து ஃப்ரீசரில் வைக்கலாம். இதையும் zip-lock கவரில் ஸ்டோர் செய்து வைக்கவும்.
கேரட் ரெசிபிகள் சில..
கேரட் பாசந்தி
என்னென்ன தேவை
பால் – 4 கப்,
கேரட் – ஒன்று,
பாதாம்- 5,
முந்திரி – 5, ச
ர்க்கரை – ஒரு கப்.
செய்முறை:
பாதாமையும் முந்திரியையை 15 நிமிடம் பாலில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். துருவிய கேரட்டை பாலில் ஊற வைத்த பாதாம், முந்திரியையும் மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அடி கனமான பாத்திரத்தில் பாலை காய்ச்ச வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து பாலை சுண்ட விட வேண்டும். பாத்திரத்தின் ஓரங்களில் படியும் ஏடுகளையும் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பிறகு சர்க்கரை, அரைத்த கேரட் விழுதை பாலில் சேர்த்து மீண்டும் நன்கு கெட்டியாக கிளரி இறக்கினால் கேரட் பாசந்தி ரெடி..
கேரட் அல்வா
தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் கேரட் இனிப்பு வகைகள் வீட்டிலேயே செய்வதுண்டு. துருவிய கேரட், சர்க்கரை, நெய், ஏலக்காய் பொடி சேர்த்து செய்தால் கேரட் அல்வா தயார்.
பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.