வெடிப்பு இருக்கா, கால் சருமம் வறட்சியா இருக்கா.. வீட்டிலேயே பெடி க்யூர் பண்ணலாம்!
பாதங்களுக்கு பெடி க்யூர் செய்யும் போது, உடலுக்கு நல்ல ரிலாக்ஸ் கொடுத்து நமக்கு நல்ல தூக்கத்தையும் தருகிறது. மேலும் காலில் உள்ள பாத வெடிப்பு மற்றும் குதிகால் வெடிப்புகள் நீங்க உதவியாக உள்ளது.
நம் பாதங்களில் ஏற்படும் வெடிப்புகளைப் ப்யூட்டி பார்லர் சென்று சரிசெய்யவேண்டாம், வீட்டிலேயே சுலபமாக பெடி க்யூர் செய்ய பல்வேறு வழிமுறைகள் உள்ளன.
நம் முகத்தை பராமரிப்பதற்கு அழகு நிலையங்களுக்கு செல்வது போன்று, கால்கள் மற்றும் பாதங்களை அழகாக மாற்றுவதற்கும் பலர் தற்போது ப்யூட்டி பார்லர்களை நோக்கி செல்லத்தொடங்கிவிட்டனர். ஆம் நம்முடைய ஒட்டுமொத்த உடலையும் பாதுகாப்பாக தாங்கி நிற்கும் நம் பாதங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது அவசியமான ஒன்று தான். ஆனால் பலரால் இதற்காக ப்யூட்டி பார்லர்களுக்கு எல்லாம் செல்ல முடியாத நிலை இருக்கும். இனி அதைப்பற்றிய கவலை இனி உங்களுக்கு தேவையில்லை. காட்டன் பேட்கள், நெயில் பாலீஷ் ரிமூவர், க்யூட்டிக்கிள் கிரீம், கால் ஸ்கரப் மற்றும் மாய்ஸ்சரைசர் இருந்தால் வீட்டிலேயே நீங்கள் இந்த வழிமுறையை பயன்படுத்தி எளிதாக பெடி க்யூர் பண்ணிக்கலாம்.. இதோ அந்த வழிமுறைகள்…
Step 1: வீட்டிலேயே பெடி க்யூர் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில், கால் நகங்களைச் சீராக வைத்துக்கொள்ளவேண்டும். பின்னர் நெயில் பாலிஷ் ரிமூவர் மூலம் உங்கள் கால் விரல்களில் உள்ள பழைய நெயில் பாலிசை அகற்றி, நகங்களை நேர்த்தியாக வெட்டிக்கொள்ள வேண்டும். குறிப்பாக நகங்களின் ஓரங்களில் அதிகமாக வெட்டுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். இல்லாவிடில் நகங்களில் வலி இருந்துக்கொண்டே இருக்கும். பின்னர் நெயில் கட்டர் மூலம் நகங்களை ஒரு வடிவத்திற்கு கொண்டுவந்துக்கொள்ளவும்.
step 2: அடுத்ததாக கால்களை 10 முதல் 20 நிமிடங்களுக்கு மசாஜ் கொடுக்க வேண்டும். இதற்காக ஒரு தொட்டியில் அல்லது பெரிய பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரினை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் சோப்பு, வீட்டில் இருக்கும் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம். மேலும் கூழாங்கற்களை தண்ணீரில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதன் பின்னர் உங்கள் கால்களை உள்ளே வைத்து ஒரு 15- 20 நிமிடங்களுக்கு மசாஜ் செய்து கொள்ள வேண்டும்.
படி 3: கால்களை மேற்கண்ட வழிமுறைகளில் மசாஜ் செய்த பிறகு, கால்களை நன்கு உலர்த்திக்கொள்ள வேண்டும். பின்னர் பாதம் மற்றும் கால் நகத்தின் அடிப்பகுதியில் சில க்யூட்டிகல் கிரீம்களை தடவி சில நிமிடங்களுக்கு அடிப்படியே வைக்க வேண்டும். இதனையடுத்து கால் ஸ்கரப்பைப் பயன்படுத்தி காலில் உள்ள உலர்ந்த மற்றும் இறந்த சரும செல்களை அகற்றிக்கொள்ள வேண்டும்.
மேலும் சிறிய பக்கெட்டில் வெதுவெதுப்பான நீரை எடுத்துக்கொண்டு அதில் உப்பினை சேர்த்துக் கரைத்துக்கொள்ள வேண்டும். இதனையடுத்து நீரில் பாதங்களை வைத்து 10-15 நிமிடங்கள் ஊற வைக்கவும். இதன் மூலம் பாதங்களில் உள்ள இறந்த செல்களை நீக்கி, பாதங்களை மென்மையாக்க உதவுகிறது. பின்னர் உங்களது பாதங்களில் ஸ்கரப்பை வைத்து தேய்த்துக்கொண்டு சுமார் 5 நிமிடங்கள் கழித்து சுத்தமான துண்டை எடுத்து பாதங்களை துடைத்துக்கொள்ள வேண்டும்.
step 4: பாதங்களில் உள்ள இறந்த செல்களை நீக்கி பின்னர், கால்களை நன்றாக சுத்தம் செய்துக்கொள்ள வேண்டும். பின்னர் தோல் மற்றும் கால்கள் தசைகளுக்கு ஊக்கமளிக்கும் விதமாகவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் விதமாக மசாஜ் செய்துக்கொள்ள வேண்டும்.
step 5 : மேற்கூறிய வழிமுறையை அனைத்தையும் மேற்கொண்ட பின்னர், உங்கள் பாதம் முன்பு இருந்தது போன்று இல்லாமல், உங்களுக்கே அழகான தோற்றமளிக்கும். பின்னர் இதனை மேலும் அழகாக்கும் விதமாக உங்களுக்கு விருப்பமான நெயில் பாலிஷ் உபயோகிக்கலாம்.
இவ்வாறு நம்முடைய பாதங்களுக்கு பெடிக்யூர் செய்யும் போது, உடலுக்கு நல்ல ரிலாக்ஸ் கொடுத்து நமக்கு நல்ல தூக்கத்தையும் தருகிறது. மேலும் காலில் உள்ள பாத வெடிப்பு மற்றும் குதிகால் வெடிப்புகள் நீங்க உதவியாக உள்ளது. கால்கள் பளிச்சென்று தெரியவும் உதவுவதோடு கால் வலி நீங்கி உடலுக்கு புத்துணர்ச்சியைத் தருகிறது.