இந்த பிரச்சனை இருந்தால் உங்கள் உடலில் நச்சுகள் அதிகமாக இருக்குனு அர்த்தம் !
Detoxification: உடல் கழிவுகளை நீக்குவது சிரமமா ? சிகிச்சை ஏதாவது எடுத்துக்கொள்ள வேண்டுமா என்றால் இல்லை!.
அடிக்கடி மலச்சிக்கல் அல்லது செரிமான பிரச்சனை போன்றவை இருந்தால் இந்த பதிவு உங்களுக்காகத்தான். உடலில் குவிந்து கிடக்கும் நச்சுக்களால்தான் இப்படியான பிரச்சனைகள் ஏற்படுகிறது. என்னங்க! நீங்க.. தினமும் மூனு வேளை குளிக்கிறேன், நாலு வேளை பல்தேய்க்கிறேன் எனக்கு இந்த பிரச்சனை இருக்கே என்றால், நீங்கள் அக தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றுதான் அர்த்தம். உங்களது உடல் ஆரோக்கியமாக இருப்பதுதான் சுத்தத்தின் வெளிப்பாடு. அவ்வாறு இல்லையென்றால் உங்கள் உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்ற வேண்டும் . இதனை ஆங்கிலத்தில் Detoxification என்பார்கள்.
உடல் கழிவுகளை நீக்குவது சிரமமா ? சிகிச்சை ஏதாவது எடுத்துக்கொள்ள வேண்டுமா என்றால் இல்லை!. உங்களது உணவு பழக்கங்களில் சில மாற்றங்களை கொண்டு வந்தால் உடலில் உள்ள கழிவுகள் , மலம் மற்றும் சிறுநீர் வாயிலாகவே வெளியேறிவிடும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதுதான். குறிப்பாக பசிக்காமல் சாப்பிடவே சாப்பிடாதீர்கள். கண்ட நேரத்தில் நொறுக்கு தீனிகளை சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். தாகமில்லாமல் தண்ணீரை அதிகமாக குடித்தால் கூட நச்சுக்களை உண்டாக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். உங்களுக்கு செரிமான பிரச்சனை இருந்தால் முட்டைக்கோஸ், உருளை கிழங்கு,காலிஃபிளவர் ,கத்திர்க்காய், தயிர் , உளுந்து போன்ற பொருட்களை சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். காலை எழுந்ததும் ஒரு டம்ளர் வெது வெதுப்பான நீரில் எலுமிச்சை கலந்து குடித்து வர உடலின் நச்சுக்கள் நீங்கும் என்கின்றனர் மருத்துவர்கள். அதே போல உணவில் வெங்காயத்தை அதிகமாக சேர்த்துக்கொள்ளுங்கள். அதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் உள்ளது. வெங்காயம் பாக்டீரியா போன்ற நச்சு கிருமிகளை இழுத்துக்கொள்ளும் சக்தி கொண்டதால்தான் அதனை வெட்டி வைத்துவிட்டு பயன்படுத்தக்கூடாது என்பார்கள். வாரத்தில் ஒருமுறை நல்லண்ணை தேய்த்து சுடு தண்ணீரில் குளிக்க உடலில் உள்ள நச்சுகள் வெளியாகும் என்கின்றனர் மருத்துவர்கள்.
இதனை தவிர வாரத்தில் மூன்று நாட்கள் விரதம் இருக்கலாம். முதல் நாள் தண்ணீர், மட்டன் சூப், சிக்கன் சூப் , வெஜிடபிள் சூப் போன்றவற்றை குடிக்கலாம் , அடுத்த நாள் பழங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளலாம், மூன்றாவது நாள் காய்கறி மற்றும் பழங்களை சேர்த்து சாப்பிடலாம். இவை தவிர அன்னாசி, பப்பாளி, உலர் திராட்சை, கொய்யா போன்ற பழங்களை காலை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். உடலில் தங்கியிருக்கும் கழிவுகள் எளிதாக வெளியேறும். இயற்கையாக கிடைக்கும் இளநீர் குடித்தால் ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருள் வெளியேறும். மருத்துவரின் ஆலோசனையை பெற்று உங்களின் டயட் பிளானில் சில மாறுதல்களை கொண்டுவந்தால், உடலில் இருக்கும் நச்சுக்கள் தானாகவே வெளியேறிவிடும்.