Tips to Clean : இரும்பு சமையல் பாத்திரங்களை கழுவ ரொம்ப கஷ்டப்படுறீங்களா? செம்ம ஈஸியா க்ளீன் பண்ணலாம்.. டிப்ஸ் இதோ..
நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் இருக்கும் இரும்பு பாத்திரங்களை கழுவி, காய வைத்த பின்னர், அதன் உட்புறமும் மற்றும் வெளிப்புறமும் சமையல் எண்ணெயை பூசி வையுங்கள்.
நமது வீடுகளில் வாணலி, இரும்பு கடாய் மற்றும் இரும்பு தோசைக்கல் ஆகியவற்றையும் பயன்படுத்துகிறோம். மேலும் நான்ஸ்டிக் பாத்திரங்கள் இரும்பில் செய்யப்பட்டு, மேல் பூச்சி பூசப்படுகிறது. இரும்பு பாத்திரங்கள் துருப்பிடிப்பது என்பது,நீண்ட காலமாக இல்லத்தரசிகள் சந்தித்து வரும் பிரச்சனையாகும்.
இதற்கு பதிலாக,அலுமினிய பாத்திரங்கள் பயன்படுத்தலாம் என்றாலும் கூட,சுத்தமான அலுமினியமானது,கரையும் தன்மை உள்ளது. இது உணவுடன் சேர்ந்து, கேன்சர் முதலான நோய்களை உண்டாக்குகிறது.அலுமினிய பாத்திரத்தில் சமைத்தாலும் கூட, உடனடியாக அதை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி வைக்க வேண்டியது,மிகவும் அவசியமாகும். இத்தகைய காரணங்களால் அலுமினிய பாத்திரங்களை பயன்படுத்துவது தவிர்க்கப்படுகிறது.
இதை போலவே,இரும்பு பாத்திரங்களில், வெப்பம் சீராக பரவவும் மற்றும் எண்ணெய் பயன்பாட்டை குறைக்கவும்,நான்ஸ்டிக் கோட்டிங் செய்து வருகின்றது. இவையும்,உடலுக்கு புற்றுநோய் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.ஆகவே சுத்தமான இரும்பு பாத்திரங்களை பயன்படுத்துவது என்பது,மண் பாத்திரங்களை பயன்படுத்துவதை போன்று நல்ல பலனை தரும்.
ஆனால் இதில் இருக்கும் ஒரே பிரச்சனை தண்ணீரோடு அவற்றை வைத்து விடும் பட்சத்தில்,துருப்பிடித்து விடும் என்பதே.இதற்கு சிறப்பான தீர்வுகளை காணலாம்.
இரும்பு பாத்திரங்களை நன்றாக கழுவி,வெயிலில் உலர வையுங்கள்:
மண் பாத்திரங்களை பயன்படுத்தும் போது எவ்வாறு கவனமாக கையாள்கிறோமோ,அதைப் போன்று, இரும்பு பாத்திரங்களை கையாளும்போது,அவற்றை சுத்தம் செய்வதில் அதிக கவனம் தேவையாக இருக்கிறது. பயன்படுத்திய இரும்பு பாத்திரங்களை,மண் மற்றும் அலுமினிய பாத்திரங்களை தண்ணீரில் ஊற வைப்பது போல, அதிகநேரம் ஊற வைக்க கூடாது. அவற்றை சோப்பு போட்டோ அல்லது கிளீனிங் பவுடர்களைக் கொண்டே கழுவி சுத்தம் செய்த பின்னர்,அதில் தண்ணீர் தேங்காதவாறு நன்றாக வெயில்படும்படி கவிழ்த்து வைக்க வேண்டும்.இதனால் தண்ணீரானது, காய்ந்து விடுகிறது.ஆகையால் தண்ணீரும் இரும்பும் வினைபுரிந்து, துருப்பிடிப்பது தவிர்க்கப்படுகிறது.
இரும்பு பாத்திரங்களுக்கு மேற்பூச்சாக எண்ணெயை பயன்படுத்துங்கள்:
இரும்பு பாத்திரமானது, தண்ணீர் பட்டவுடன் துருப்பிடிக்கும் தன்மையை கொண்டுள்ளதால்,இவற்றிலிருந்து இலத்தரசிகள் தப்பிக்க,மற்றும் ஒரு எளிய வழி உள்ளது. இதன்படி நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் இருக்கும் இரும்பு பாத்திரங்களை கழுவி,வெயிலில் நன்றாக காய வைத்த பின்னர்,அதன் உட்புறமும் மற்றும் வெளிப்புறமும் சமையல் எண்ணெயை சிறு பூச்சாக,பூசி வையுங்கள். இவ்வாறு செய்வதன் மூலமாக அதில் தண்ணீரோ அல்லது காற்றில் இருக்கும் ஈரப்பதமோ அந்த பாத்திரங்களிள் படும் சமயங்களில், இரும்புடன் தண்ணீர் துளிகள் வினை புரிவது தடுக்கப்பட்டு,துருப்பிடிப்பதும் தவிர்க்கப்படுகிறது.
நீங்கள் அடிக்கடி உபயோகப்படுத்தும் வாணலி,தோசைக்கல் ஆகியவற்றில் கூட,இத்தகைய மெல்லியதான எண்ணெய் பூச்சை அதன் அனைத்து பக்கங்களிலும் பூசி வைக்கலாம். பயன்படுத்தும் தருணங்களில், நன்றாக அவற்றை,எண்ணை பிசுக்கு போக கழுவி,பின்னர் அப்படியே பயன்படுத்தலாம்.
மேலும் இரும்பு பாத்திரத்தில் சமைப்பது என்பது,இரும்பு சத்து குறைபாடு மற்றும் ரத்த சோகையை தவிர்க்கிறது.ஆகவே இரும்பு பாத்திரங்களை பயன்படுத்துவதை, நிலத்தரசிகள் அதிகப்படுத்த வேண்டும்.அதே நேரம் பாத்திரத்தில் சமைக்கப்படும் உணவுகளை உடனடியாக வேறு பாத்திரத்துக்கு மாற்றி வைப்பதும் அவசியமானதாகும்.
இதைப்போலவே சிட்ரிக் ஆசிட் நிறைந்த,எலுமிச்சை சாறு போன்ற உணவுகளை தயாரிக்கும் போது இரும்பு பாத்திரங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
மேலும் புளியுடன் இரும்பு பாத்திரமானது வினை புரியும் தன்மை உள்ளதால்,புளி சேர்த்து சமைக்கப்படும் கார குழம்பு போன்ற உணவுகளை சமைக்கும் போது, இரும்பு பாத்திரங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
பானைகளில் உள்ள மஞ்சள் கறையை நீக்கும் வழி:
பானையில் உள்ள மஞ்சள் கறையை நீக்க, பேக்கிங் சோடா மூலம் அவற்றை தேய்க்க வேண்டும். அதில் 30 நிமிடங்கள் வரை பேக்கிங் சோடாவை தேய்த்து ஊற விட்டு பின்னர் ,நன்கு தேய்த்து கழுவ வேண்டும் .