கொத்தமல்லி இலை மாதக்கணக்கில் கெடாமல் இருக்க வேண்டுமா? இதை ட்ரை பண்ணுங்க!
பொதுவாக வீடுகளில் உள்ள பிரிட்ஜிகளில் இலையினை கெடாமல் வைத்திருப்பார்கள். ஆனால் பிரிட்ஜ் இல்லாத வீடுகளில் எப்படி கொத்தமல்லி இலையினை கெடாமல் வைத்திருப்பதற்கான வழிமுறைகள் இங்கே...
சமையலுக்கு அன்றாடம் பயன்படுத்தக்கூடிய மருத்துவக் குணம் வாய்ந்த கொத்தமல்லி இலைகளை ஒரு மாதத்திற்குக் கூட கெடாமல் வைப்பதற்கு பல்வேறு எளிமையான வழிமுறைகள் உள்ளன.
நம் அன்றாட வாழ்வில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் உணவுப்பொருட்களில் முக்கியமான ஒன்றாக உள்ளது கொத்தமல்லி இலைகள். மருத்துவக்குணம் கொண்ட இந்த கொந்தமல்லிக்கு கொரோனா பெருந்தொற்று சமயத்தில் மவுசு கூடியது. ஏனென்றால் நோய் எதிர்ப்புச் சக்தியினை ஏற்படுத்துவதற்காகவே மக்கள் இதனை உணவில் சேர்க்கத்தொடங்கினர். கொத்தமல்லி ரசம் வைத்து உடலில் ஏற்படும் சளியினையும் மக்கள் போக்கியும் வந்தனர். எனவே இந்தக்காலக்கட்டத்தில் பல காய்கறிக்கடைகளில் கொத்தமல்லி வாங்குவதற்கு மக்கள் சென்றாலும் இல்லாத நிலை ஏற்பட்டது. இதனை மொத்தமாக வாங்கி வைத்தப்பொழுதும் ஓரிரண்டு நாள்களிலேயே காய்ந்து போய்விடும். இதனை எப்படி கெடாமல் வைத்துக்கொள்வது என்பது தான் மக்கள் முன்பிருந்தே சந்திக்கும் பிரச்சனையாக இருந்து வருகிறது.
பொதுவாக பிரிட்ஜ்க்குள் வைத்து இலையினை கெடாமல் வைத்திருப்பார்கள். ஆனால் பிரிட்ஜ் இல்லாத வீடுகளிலும் எப்படி கொத்தமல்லி இலையினை கெடாமல் வைத்திருப்பது? என்பது குறித்த சில டிப்ஸ்களை இங்கு தெரிந்துக்கொள்வோம்.
கடைகளிலிருந்து வாங்கி வரப்படும் கொத்தமல்லி இலைகளை வாடி வதைங்கிப்போகாமல் வைத்துக்கொள்வதற்கு முதலில், கொத்தமல்லி கட்டில் உள்ள பழுத்த மற்றும் அழுகிய இலைகளை பிரித்தெடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு பிளாஸ்டிக் டப்பாவினை எடுத்துக்கொண்டு அதில் 2 அல்லது 3 டம்ளர் தண்ணீரினை ஊற்றவேண்டும்.பின்னர் பிளாஸ்டிக் டப்பாவில் ஊற்றிய தண்ணீருக்குள், கொத்தமல்லிகட்டின் வேர் மட்டும் படும் படி உள்ளே வைக்க வேண்டும். இலைகள் மற்றும் தண்டு படும் படி வைத்தால் அது அழுகிவிடும்.
டப்பாவில் ஊற்றியத் தண்ணீரினை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை மாற்றி வைத்துக்கொள்ள வேண்டும். இதனை தவறாமல் செய்ய வேண்டும்.
இதனையடுத்து பிரிட்ஜ் இல்லாத வீடாக இருந்தால், வெளியில் அப்படியே வைத்து விட்டால், ஒரு வாரத்திற்கு கொத்தமல்லி இலைகள் கெடாமல் பிரஷாகவே இருக்கும்.
ஒருவேளை பிரிட்ஜில் வைக்கக்கூடிய வசதி இருந்தால் , கொத்தமல்லி வைத்துள்ள டப்பாவினை பிளாஸ்டிக் பேப்பரினைக்கொண்டு காற்றுப்புகாதப்படி கட்டி வைத்துக்கொண்டு உள்ளே வைக்க வேண்டும். இப்படி வைத்தால் சுமார் ஒரு மாதத்திற்கு கூட கொத்தமல்லி இலைகள் கெடாமலும் பிரஷாகவும் எடுத்து பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இதோடு மட்டுமின்றி பழுத்த மற்றும் வீணாகிப்போயிருக்கும் கொத்தமல்லி இலைகளை எல்லாம் பிரித்தெடுத்து ஒரு பேப்பரில் காற்றுப்புகாதப்படி சுருட்டி பிரிட்ஜில் வைத்தாலும் ஒரு வாரத்திற்கு வீணாகாமல் இருக்கும். குறிப்பாக கொத்தமல்லி இலைகளில் தயமின், நியாசின், ரிபோஃப்ளேவின், வைட்டமின் சி, பாஸ்பரஸ், கால்சியம், சோடியம், பொட்டாசியம், ஆக்சாலிக் ஆசிட் போன்ற பல்வேறு வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும், மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்துக்கள் போன்றவற்றையும் இது உள்ளடக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.