Red Spinach: சிவப்புக் கீரை உடல் எடையை குறைக்க உதவுமா? தெரிஞ்சிக்கோங்க!
Red Spinach: சிவப்பு கீரை வகைகள் உடல் நலனுக்கு தரும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்கே காணலாம்.
சிவப்புக் கீரை உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தருக்கிறது. Amaranth saag என்றழைகப்படும் சிவப்புக் கீரை உடல் எடையை நிர்வகிக்க எப்படி உதவுகிறது என்பதை காணலாம்.
சிவப்புக் கீரை:
இது சிவப்பு நிறத்தில் இருப்பது உணவின் தோற்றத்திற்கு உதவினாலும், அதிலுள்ள ஊட்டச்சத்து பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு நல்லது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வைட்டமின் இ,சில் கே உள்ளிட்டகளோடு, கால்சியம், இரும்புச்சத்து ஆகியவையும் நிறைந்துள்ளது. இது ஃப்ரீராடிக்ல்ஸ் எதிர்த்து போராட உதவும். குறிப்பாக உடல் எடையை குறைக்க வேண்டும் என்று திட்டத்துடன் இருப்பவர்களுக்கு மிகச் சரியான தேர்வாக இருக்கும். ஃபிட்டாக இருக்க வேண்டும் என விரும்புபவர்களும் இதை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ளலாம்.
நார்ச்சத்து நிறைந்த உணவு:
நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் நிறைய சாப்பிடலாம். இது எடையைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், வயிற்றை நீண்ட நேரத்திற்கு திருப்திகரமாக வைத்திருப்பதால், அளவுக்கு அதிகமாக சாப்பிட விடாமல் நம்மை பாதுகாக்கும். சிவப்புக் கீரையில் டயட்ரி ஃபைபர் அதிகம் நிறைந்துள்ளது.
குறைந்த கலோரிகள்:
சிவப்புக் கீரையில் கலோரிகளில் குறைவாக உள்ளன என்பதால், இது எடை இழப்பு உணவில் சேர்க்க சிறந்த உணவுகளில் ஒன்றாக மாறுகிறது.
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்:
இதில் புரோபயாடிக் பண்புகளும் உள்ளன. அவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. குடல் நன்றாக செயல்பட்டால், செரிமானம் நன்றாக இருக்கும். செரிமானம் சீராக இருந்தால் தேவையற்ற விஷயங்கள் வயிற்றில் சேர்வது குறைத்து, எடை இழப்புக்கு வழிவகுக்கும்.
இது உடல் எடையை குறைக்க மட்டுமல்லாமல் செரிமான மண்டலம் சீராக இயங்கவும் உதவும்.
நோய் ர்திப்பு சக்தியை அதிகரிக்க உதவும். பருவ கால தொற்றுநோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கும். வாரத்திற்கு ஒரு முறை சிவப்புக் கீரையை உணவில் சேர்த்து கொள்ளலாம். கீரை சூப், கீரை தோசை, கீரை சப்பாத்தி, கீரை கூட்டு என செய்து சாப்பிடலாம்.
தூக்கம் முக்கியம்:
உடல் எடையை குறைக்கும் பயணத்தில் சிலர் தூக்கத்தின் முக்கியத்துவத்தை மறந்து விடுகிறார்கள். உங்கள் உடலில் ஒரு இன்ச் எடை குறைய வேண்டும் என்றாலும் தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். தினமும் 8 மணி நேரமாவது தூங்க வேண்டும்.
உணவுமுறையில் கவனம் :
ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். எப்போதுமே உணவை மெதுவாக மென்று சாப்பிட வேண்டும்.
பொறுப்புத்துறப்பு: இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.