தினமும் கண்டிப்பா ஐந்து லிட்டர் தண்ணீர் குடிக்கணுமா? இது சரியா? ஆயுர்வேதம் என்ன சொல்லுது!
ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும் என ஆயுர்வேத மருத்தவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இவ்வுலகமானது நீர், நிலம், காற்று ,நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களால் ஆனவை . இது ஐந்தும் மனிதருடன் மிக நெருக்கமான தொடர்பு கொண்டவை. நீரின்றி அமையாது உலகு என்று முன்னோர்களின் கூற்றுப்படி நீரின்றி உலகில் எந்த உயிரும் வாழ முடியாது.
உடலில் 80 சதவீதம் தண்ணீர் நிறைந்துள்ளது. எனவே தான் இவ்வுலகில் உணவு இல்லாவிட்டாலும் வாழ முடியும், ஆனால் தண்ணீரின்றி வாழ முடியாது.உலகில் வாழும் ஒவ்வொரு உயிருக்கும் நீரானது உயிர் வாழ்வதற்கு மிக முக்கிய பங்காக இருக்கிறது.
இதில் நீரானது மனிதர்களுக்கு முக்கிய பங்காற்றுகிறது. நமது உடல் சரியான முறையில் இயங்க நீர்ச்சத்து மிகவும் அவசியம். நாம் நீரை எவ்வளவு குடிக்க வேண்டும் மற்றும் அதனைக் குடிப்பதால் ஏற்படும் பயன்கள் ஆகியவற்றினை நாம் விரிவாக பார்ப்போம்.
நீரானது நமது வாழ்க்கையில் ஒரு அமிர்தம் ஆகவே பார்க்கப்படும் . தண்ணீரானது உடலில் போதிய அளவு இருந்தால் நம் உடலானது ஆரோக்கியமாகவும் ஒரு புத்துணர்ச்சியுடனும் காணப்படும். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் பலர் தண்ணீர் குடிப்பதை தவிக்கின்றனர். இதற்காக அவர்களுக்கு தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகளைப் பற்றி நன்கு தெரியவில்லை என்று அர்த்தம் இல்லை. அதிகமான வேலைப் பளுவினால், தண்ணீர் குடிப்பதற்கு கூட நேரமில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
ஆனால் தண்ணீரை நன்கு குடித்தால் அதனால் உடலுக்கு ஏற்படும் பயன்களை முழுமையாக அனுபவிக்க முடியும்.
உண்மையில் தண்ணீர் குடிப்பதால், உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை தடுக்கலாம். இதனால்தான் மருத்துவர்கள் கூட அதிக அளவு தண்ணீர் குடிக்க வலியுறுத்துகின்றனர் .
நமது உடம்பிற்கு ஒரு நாளைக்கு நான்கு முதல் ஐந்து டம்ளர் தண்ணீரானது போதுமானதாக இருக்கும். ஆனால் நாம் செய்யும் வேலை காரணமாகவும் ,வெளியே சென்று அலைந்து திரிவதன் காரணமாகவும், நம் உடலில் நீரானது அதிக அளவு வற்றி விடுகிறது. இதனால் நாம் ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் ஆனது கண்டிப்பாக குடிக்க வேண்டும் என ஆயுர்வேத மருத்தவர்கள் வலியுறுத்துகின்றனர். அதுவும் கோடை காலத்தில் ஐந்து முதல் ஆறு லிட்டர் தண்ணீர் குடித்தால் நம் உடலானது சரியான முறையில் புத்துணர்ச்சியுடன் நன்கு பலன் தரும். நமது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் தண்ணீர் பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொண்டு செல்கிறது.
நீரானது நமது உடம்பில் முக்கியமாக கழிவுகளை வெளியேற்றும் செயலில் ஈடுபடுகிறது . கழிவுகளை வெளியேற்றம் செயல் பாட்டில் தண்ணீரின் பங்கானது மிக முக்கியமானது.
எனவே தான் உடலுக்கு எனர்ஜி வேண்டுமெனில், தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் எனக் கூறுவார்கள், அதேபோல்
உடலின் வெப்பத்தை சீராக வைப்பதற்கு, தினமும் போதிய அளவில் தண்ணீரை குடிக்க வேண்டும். இல்லையெனில் உடலில் அதிகப்படியான வெப்பம் ஏற்பட்டு, உள் உறுப்புகளில் நோய்களை ஏற்படுத்தும்.
தண்ணீரை நாம் அருந்தும் போது எவ்வகையான நன்மைகளை உடலுக்கு ஏற்படுத்துகிறது என்பதை தற்போது பார்க்கலாம்
1.அதிக அளவு ஆற்றல் கிடைக்கும்,
2.கழிவுகளை வெளியேற்றும்,
3.உடல் வெப்பத்தை சீராக வைக்கும்,
4.மெட்டபாலிசம் அதிகமாகும்,
5.தசைப்பிடிப்புகளை தடுக்கும்,
6.முறையான குடலியக்கம்,
7.பொலிவான சருமத்திற்கு உதவுகிறது,
8.அசிடிட்டியை குறைக்கும்,
9.நன்கு மூளை செயல்பட உதவுகிறது.
10. மூட்டு உராய்வை தடுக்கிறது.
11. ஊட்டச்சத்துக்களை அனைத்து உறுப்புகளுக்கும் கொண்டு செல்ல வேண்டி
பயன்படுகிறது.
12. எடை குறைப்பதற்கு பயன்படுகிறது.
உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு தண்ணீருக்கு தான் உண்டு.
13. உடலில் உள்ள நச்சு கிருமிகளை அழித்து கழிவாக வெளியேற்ற உதவுகிறது.
காலையில் எழுந்தவுடன் பல் துலக்கிய பின் தண்ணீர் அருந்துவது, நம் உடலில் உள்ள சிறுநீரகம், சிறு குடலையும் பெருங்குடலையும் நன்கு சுத்தம் செய்து கழிவுகளை சிறுநீர் மூலமாக வெளியேற்றும் தன்மை கொண்டது . தண்ணீரானது மிகவும் அதிகமாக பயன்படுத்தினாலும் ஆபத்தை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.