Work From Home healthy snacks | வீட்டில் இருந்தே பணி செய்கிறீர்களா.. உங்களுக்கான ஸ்நாக்ஸ் லிஸ்ட் இங்க இருக்கு..
பணி நாள்களின் போது நீங்கள் முழு எனர்ஜியோடு இருப்பதற்காக சத்தான ஸ்நாக்ஸ் வகை உணவுகளை இங்கே குறிப்பிட்டுள்ளோம். ஊட்டச்சத்து நிபுணர் ஹர்ஷிதா திலாவரி 7 ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வகைகளைப் பரிந்துரைத்துள்ளார்.
வீட்டில் இருந்தே பணியாற்றுவது தற்போது சாதாரண ஒன்றாக மாறியுள்ளதோடு, அடுத்தடுத்த ஆண்டுகளில் இன்னும் தொடர்ச்சியாகப் பின்பற்றப்படவுள்ளது. பணிக்கும், வீட்டுக்கான நேரத்திற்கும் இடையிலான எல்லைகள் மங்கியிருப்பதால், நமது உடல்நலனையும், மன நலனையும் பேணிக் கொள்வதற்கான வழிமுறைகளை நாம் அறிந்துகொள்ள வேண்டும். பெருந்தொற்று காலத்தில் ஆரோக்கியமான உணவுகள் மீதான ஆர்வம் அதிகரித்தாலும், உணவு வேளைகளுக்கு இடையில் ஏற்படும் பசியைப் போக்க பலரும் ஆரோக்கியமற்ற உணவுகளைத் தேடிச் செல்வதுண்டு.
பணி மேற்கொள்ளும் நாள்களின் போது நீங்கள் முழு எனர்ஜியோடு இருப்பதற்காக சத்தான ஸ்நாக்ஸ் வகை உணவுகளை இங்கே குறிப்பிட்டுள்ளோம். ஊட்டச்சத்து நிபுணர் ஹர்ஷிதா திலாவரி 7 ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வகைகளைப் பரிந்துரைத்துள்ளார்.
1. வறுத்த கடலை
அதிக புரதம், ஃபைபர், வைட்டமின்கள், மினரல்கள் முதலானவை அதிகமாக வறுத்த கடலையில் இருப்பதால், ஸ்நாக்ஸ் நேரத்தில் இதனைத் தயாரித்து ஒரு வாரம் வரை சேமித்து உண்ணலாம். அரை கப் வறுத்த கடலையில் 5 கிராம் ஃபைபரும், 10 கிராம் புரதமும் இருக்கிறது. மேலும், உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்களும் இதில் உள்ளன.
2. பாலாடைக்கட்டி, பழம்
பாலாடைக்கட்டி, பழம் ஆகியவற்றில் அதிகளவிலான புரதம் இருக்கிறது. மேலும், இதில் இருக்கும் கலோரிகள் குறைவாக உள்ளதால், ஊட்டச்சதுகள் நிறைந்து இருக்கின்றன.
3. வீட்டிலேயே தயாரித்த ஓட்ஸ் பந்துகள்
காய்ந்த பழம், தேங்காய் ஆகியவற்றுடன் நட் பட்டர், ஓட்ஸ் முதலானவற்றைத் தேனோடு சேர்த்து உருட்டி பந்துகளாக மாற்றி உண்ணலாம். இதில் சேர்க்கப்படும் தயாரிப்பு பொருள்களுக்கு ஏற்றவாறு, ஓட்ஸ் உருண்டைகளில் ஃபைபர் சத்து, ஆரோக்கியமான கொழுப்பு, புரதம், அதிக வைட்டமின்கள், மினரல்கள் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.
4. காய்கறிகள், ஹும்மஸ்
கொண்டைக் கடலை, பூண்டுகள், ஆலிவ் எண்ணெய், எலுமிச்சை ஜூஸ் முதலானவற்றைப் பயன்படுத்தி செய்யப்படும் ஹும்மஸ் என்ற உணவு தயாரிக்கப்படுகிறது. இது ஃபைபர், புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் ஆகியவை நிறைந்துள்ளன. இதனைக் கேரட் முதலான காய்கறிகளோடு உண்பது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, கண் பார்வையை வலுப்படுத்துவது முதலானவற்றில் உதவும்.
5. வேக வைத்த முட்டைகள்
நன்கு வேக வைத்த முட்டைகள் ஊட்டச்சத்து மிகுந்த ஸ்நாக்ஸ் வகையாகப் பலரால் விரும்பி உண்ணப்படுகிறது. மனித உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் முட்டையில் இருக்கின்றன. 50 கிராம் எடை கொண்ட முட்டையில் சுமார் 6 கிராம்களுக்கும் அதிகமாக புரதம், இரும்புச் சத்து, கால்சியம், கோலின், வைட்டமின்கள் ஏ,பி6,பி12,டி ஆகிய ஊட்டசத்துகள் இருக்கின்றன.
6. பாப்கார்ன்
அதிக ஃபைபரும், குறைந்த கலோரிகளும் கொண்ட பாப்கார்ன் சத்துள்ள உணவாக இருக்கிறது. 2 கப் பாப்கார்னில் சுமார் 62 கலோரிகள், 12 கிராம் கார்போஹைட்ரேட், 2 கிராம் ஃபைபர், வைட்டமின்கள், மினரல்கள் ஆகியவை உள்ளன.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )