Thick Curd | கடைகளில் மட்டும்தான் கெட்டித்தயிர் கிடைக்குமா? இப்படி பண்ணுங்க.. அழகா கேக் மாதிரி தயிர் கெட்டியா வரும்..
பாலில் நுண்ணுயிர்கள் நொதித்தல் காரணமாக கிடைக்கும் தயிரில், பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. இதனை நம்முடைய அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டால், இதய நோய் பாதிப்பு வராது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சந்தைகளில் விதவிதமான பாக்கெட்டுகளில் கிடைக்கும் கெட்டியான தயிரைப்போல் வீட்டிலேயே சில வழிமுறைகளைப்பின்பற்றி நாமே தயார் செய்யலாம்.
பாலில் நுண்ணுயிர்கள் நொதித்தல் காரணமாக கிடைக்கும் தயிரில், பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. இதனை நம்முடைய அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டால், இதய நோய் பாதிப்பு வராது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் பக்கவாதம், இதய நோய் பாதிப்பு வருவதற்கான வாய்ப்பு 20 சதவீதம் குறைவதாகவும் தெரியவந்துள்ளது. இதோடு தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜூரண சக்தியை அதிகரிக்கும் பாக்டீரியாவை உருவாக்குகிறது. இது போன்று பல்வேறு நன்மைகள் நிறைந்துள்ளதால் பலர் தயிரை தன்னுடன் உணவு முறையில் சேர்த்துக்கொள்கின்றனர். இதில் ஒரு சிலர் கடைகளிலும், ஒரு சிலர் வீடுகளிலும் தயிரை செய்து சாப்பிட்டுவருகின்றனர். இருந்தப்போதும் வீட்டில் தயாரிக்கப்படும் தயிர்கள் கடைகளில் வாங்குவதுப்போல அதிக கிரீம் மற்றும் ஃபிரெஷாக இருக்காது.
எனவே கடைகளில் இருப்பது போல் கெட்டியான தயிர் எவ்வாறு செய்வது என்ற கேள்விகள் பெண்களுக்கு அதிகளவில் எழக்கூடும். இதுப்போன்றவர்களாக நீங்கள்? அப்படின்னா தயிரை வீட்டிலேயே எப்படி தயார் செய்யலாம் என்பது குறித்து இங்கே நாம் தெரிந்துக்கொள்வோம்.
வீட்டிலேயே க்ரீமியான தயார் செய்வதற்கான டிப்ஸ்கள்:
வீட்டில் தயிர் தயாரிக்க முதலில் கெட்டியான பால் அவசியம். அப்பொழுது தான் தயிர் நமக்கு க்ரீமியாக மாற்ற உதவும்.
நமக்கு தயிர் நன்றாக வர வேண்டும் என்றால் அதற்கு சரியான பாத்திரம் தேர்வு செய்வது அவசியமான ஒன்று. முக்கியமாக வீட்டில் மண் பானை இருந்தால், அதனுள் தயிர் சேமித்து வைக்கலாம். முன்னதாக தயிர் செய்ய பாலை நன்கு சூடாக்க வேண்டும். நல்ல கொதித்து நுரை வந்ததும் பாலை ஆற வைத்து தயிர் சேமிக்கும் பாத்திரத்தில் பாலை ஊற்றி வைக்க வேண்டும்.
இதற்கு முக்கியமாக பருவகாலத்திற்கு ஏற்ப பாலின் வெப்பநிலையை வைத்திருக்க வேண்டும். உதாரணமாக நீங்கள் கோடைக்காலத்தில் தயிர் தயாரிக்கிறீர்கள் என்றால்? பால் சற்று சூடாக இருக்க வேண்டும். இதனுடன் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து கலக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் பாத்திரத்தை நகர்த்தாமல் சுமார் 6-7 மணி நேரம் அப்படியே விட்டுவிட வேண்டும். ஏனென்றால் கோடைக்காலத்தில் தயிர் செட் ஆக சுமார் 6-7 மணி நேரம் ஆகும்.
அதே நேரம் குளிர்காலத்தில் தயிர் தயாரிக்க வேண்டும் என்றால், பாலை சூடாக எடுத்துக்கொள்ள வேண்டும். குளிரில், தயிரை ஒரு வெதுவெதுப்பான இடத்தில் வைத்திருக்க வேண்டும். மேற்சொன்னதுப்போன்று பாலில் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து கலக்கிக்கொள்ள வேண்டும்.
இதனையடுத்து தயிர் உறைந்த பிறகு, இதனை பிரிட்ஜில் வைக்கவும். சிறிது நேரம் கழித்து வெளியில் எடுக்கும் போது உங்களுக்குக் கெட்டியான மற்றும் சுவையான தயிர் நமக்கு கிடைக்கும். எனவே இனிமேல் நீங்களும் மேல்சொன்ன டிப்ஸ்களை கொஞ்சம் டிரை பண்ணிப்பாருங்கள்...