இப்படி எல்லாம் கூட உடல் எடை அதிகமாகுமா ?
நாம் அன்றாடம் செய்யும் சில விஷயங்கள் நமக்கே தெரியாமல் எடை அதிகமாகும். உடல் எடை அதிகமாகிறது என்ற உணர்வே இல்லாமல், எடை மெஷின் மீது நின்றால் மட்டும் உடல் எடை அதிகமாக இருப்பது தெரியும்.
நாம் அன்றாடம் செய்யும் சில விஷயங்கள் நமக்கே தெரியாமல் எடை அதிகமாகும். உடல் எடை அதிகமாகிறது என்ற உணர்வே இல்லாமல், எடை மெஷின் மீது நின்றால் மட்டும் உடல் எடை அதிகமாக இருப்பது தெரியும். இந்த மாதிரி உங்களுக்கே தெரியாமல் எடை அதிகமாகிறதே அதற்கு காரணம் தெரியுமா?
மனஅழுத்தம் - நீங்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் ஸ்ட்ரெஸ் கூட உடல் எடை அதிகரிக்க ஒரு காரணமாக அமைத்து விடுகிறது. மனஅழுத்தம் காரணமாக ஹார்மோன் ஏற்ற தாழ்வுகள் ஏற்படும். அதனால் உடல் எடை அதிகமாகிறது. நீங்கள் மனஅழுத்தம் என்ன செய்ய போகிறது என்று நினைத்தால், அதை மாற்றி கொள்ளுங்கள். நீண்ட நாட்களாக மனஅழுத்தமாக இருந்தால் உடல் எடை அதிகரிக்கும்.
தூக்கமின்மை - தூக்கம் போதுமான அளவு இருந்தால், உடல் ஆரோக்கியம் மேம்படும். தூக்கம் போதுமான அளவு இல்லை என்றால் உடல் சோர்வாக இருக்கும். உடல் சோர்வு இருந்தால் அதிக கலோரிகள் எடுத்து கொள்வோம் . அதனால் வளர் சிதை மாற்றத்தை ஏற்படுத்தும். தூக்கம் போதுமான அளவு இல்லை என்றாலும், ஹார்மோன் மாற்றங்கள் நடக்கும். அதனால் உடல் எடை அதிகமாகும். நீண்ட நாட்களாக தூக்கமின்மையால் அவதி படுகிறீர்கள் என்றால் உடல் பருமன் ஆகும்..
தைராய்டு ஹார்மோன் - தைரோய்டு ஹார்மோன் குறையாக சுரந்தால் போதுமான வளர் சிதை மாற்றம் இருக்காது. அதனால் உடல் எடை அதிகமாகும். வறட்சியான சருமம் உடல் எடை அதிகமாதல், மாதவிடாய் சுழற்சியில் பிரச்சனை, முடி உதிர்தல், அதீத சோர்வு போன்ற அறிகுறிகள் இருந்தால் அது தைராய்டு ஹார்மோன் சரியாக சுரக்க வில்லை என்று அர்த்தம்.அதனால் தைராய்டு ஹார்மோன் காண சிகிச்சைகள் எடுத்து கொள்ள வேண்டும்.
மாத விடாய் சுழற்சி - மாத விடாய் சுழற்சி ஆரம்பிக்கும் நாட்கள் மற்றும் மாதவிடாய் சுழற்சி முடியும் நேரங்களில் உடல் எடை அதிகரிக்கும். உடல் எடையில் ஒரு வித ஏற்ற தாழ்வு இருக்கும். அப்போது ஆரோக்கியத்தில் தனியாக கவனம் செலுத்த வில்லை என்றால் உடல் எடை அதிகரித்து இருக்கும். இந்த நேரங்களில் நடக்கும், ஹார்மோன் மாற்றங்கள் உடல் எடை அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்து விடுகிறது.
அடிக்கடி சாப்பிடுதல் - சிலர் சும்மா இருக்கிறோம் என்பதற்காக எதையாவாது சாப்பிடுவது, சிலர் மனஅழுத்தம் காரணமாக அதிக இனிப்புகளை சாப்பிடுவது, சிலருக்கு சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். அதனால் உணவுகளை எடுத்து கொள்வது, இது போன்ற உணவு சாப்பிடுபவர்கள் உணவில் இருக்கும் ஆரோக்கியத்தை கவனிக்க மாட்டார்கள். பெரும்பாலும், சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்து கொள்வார்கள். அதனால் உடல் எடை அதிகமாகும்.
இது போன்று காரணங்களால் உடல் எடை அதிகமாகும்.