உணவு ருசியா இருந்தா மட்டும் போதுமா...? சுத்தம்... மொத்தமா வேணும்!
இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில், சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருப்பதும் மிகவும் அவசியம். ஏனென்றால், வெளியில் இருந்து பொருள்களின் வழியே இந்த பாக்டீரியாக்கள் வைரஸ்கள் வீட்டிற்கு வர தொடங்கும்.
இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில், சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருப்பதும் மிகவும் அவசியம். ஏனென்றால் வெளியில் இருந்து பொருள்களின் வழியே இந்த பாக்டீரியாக்கள் வைரஸ்கள் வீட்டிற்கு வர தொடங்கும். இதை தவிர்க்க சில சுகாதாரமான விஷயங்களை தொடர்ந்து செய்ய வேண்டும்.
இந்த ஊரடங்கு காலம், வீட்டில் இருந்து வேலை செய்வது, நியூ நார்மல் ஆகி கொண்டு இருக்கிறது. வீட்டில் இருப்பதால் மூன்று வேளையும் , தனித்தனியாக சமைத்து சாப்பிடுவது, ஒரு உணவிற்கும், மற்றொரு உணவிற்கும் இடையே சாப்பிடுவது அதிகமாகி கொண்டு இருக்கிறது. அடுப்படியில் சமையல் செய்வது அதிகமாகி கொண்டு இருக்கிறது. பழைய முறை மாதிரி இல்லாமல், புதிதாக பெரிய மாற்றம் நடக்கிறது..
அடிக்கடி கைகளை கழுவுவது, வீட்டில் அடிக்கடி பயன்படுத்தும், பிரிட்ஜ் கைப்பிடிகள், கதவுகள், பைப்புகள், பாத்திரங்கள் என அனைத்தையும் சுத்தமாக அவ்வப்போது துடைத்து வைத்து கொள்வது அவசியம். அதே மாதிரி ஊரடங்கு நேரம் மற்றும், தொடரும் கொரோனா நேரங்களில் பொருள்களை வாங்கி பாதுகாப்பாக வைத்து மிகவும் அவசியம்.
உணவை பாதுகாப்பாக சேமித்து வைத்தல் - வெளியில் இருந்து பொருள்களை வாங்கி நீண்ட நாட்களுக்கு சேமித்து வைப்பது அவசியம். சேமித்து வைக்க இன்று நிறைய தொழிநுட்ப வசதிகள் அதிகரித்துள்ளது. பிரிட்ஜ் கூட ஆக்டிவ் ஃப்ரெஷ் ப்ளூ லைட் தொழில்நுட்பத்துடன் அறிமுக படுத்த பட்டுள்ளது. இது வைரஸ் மற்றும் பாக்டீரியா வராமல் தடுக்கும். மேலும் இது உணவுகளில் ஊட்டச்சத்தை பாதுகாக்கும். காய்கறிகள் மற்றும் பழங்களை வெளியில் இருந்து வாங்கி வந்து குளிர்சாதன பெட்டியில் பாதுகாக்கலாம்.
சமைக்கும் போது உணவின் பாதுகாப்பை உறுதி செய்வது. - சமைக்கும் போது சுத்தமாக செய்வது, உணவை நீண்ட நேரம் பாதுகாப்பதும் அவசியம். பேக்கிங், கிரில்லிங், மீண்டும் சூடாக்குவது, மைக்ரோவேவ் என பல முறைகள் இருந்தாலும், நீண்ட நேரம் உணவை பாதுகாப்பது அவசியம். ஒவ்வொரு முறை சமையல் முறைகளும் உணவில் இருக்கும் ஊட்டச்சத்துகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. மைக்ரோ வாவ் முறை சமையல் ஊட்டச்சத்துகளை அப்படியே தக்க வைத்து கொள்ளும் என்ன நிறைய நபர்கள் நம்பி கொண்டு இருப்போம். ஆனால் இது முற்றிலும் தவறு. எந்த காய்கள் குறைவான தண்ணீரில் சமைத்தாலும், நீண்ட நேரம் சமைத்தாலும் அதில் இருக்கும் ஊட்டச்சத்துகள் குறைந்து விடும். மேலும் ஆக்டிவ் டிஃப்ரோஸ்ட் என்ற தொழில் நுட்பம் பயன்படுத்தி சமைக்கும் போது நீண்ட நேரம் உணவானது, அதன் தன்மையில் அப்படியே இருக்கும். மேலும் புத்துணர்வு குறையாமலும், ஊட்டச்சத்துகள் பாதுகாப்பாகவும் இருக்கும்.
பாத்திரங்களை சுத்தமாக வைத்து கொள்வது. - என்னதான் வகைவகையாக சுத்தமாக சமைத்தாலும், பாத்திரங்கள் சுத்தமாக இல்லை என்றால் உணவு சீக்கிரம் கெட்டு விடும். மேலும் அதன் சுவையும் மாறி விடும். பாத்திரங்களை சுத்தமாக டிஸ்வாஷ்ர் போட்டு கழுவி , ஈரப்பதம் இல்லாமல் காயவைத்து, துடைத்து பயன்படுத்துவது அவசியம்.
மேலே சொன்ன முறைகள் உணவை வாங்கி பாதுகாப்பாக வைத்து பின்னர் பயன்படுத்துவதற்கான வழிமுறைகள். வெளியில் இருந்து உணவை வாங்கி உண்ணும் போது மிகுந்த பாதுகாப்புடன் இருப்பது அவசியம். இத கொரோனா காலங்களில் தொற்று எதில் இருந்து பரவும் என்று சொல்ல முடியாது. மிகுந்த கவனத்துடனும், பாதுகாப்புடனும் இருப்பது அவசியம்