Health Tips: படுத்தா தூக்கம் வரமாட்டேங்குதா..? இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க..!
சிலருக்கு 9 மணிக்கெல்லாம் தூக்கம் கண்களை தழுவட்டுமே என்று காதில் கீதம் பாடும். 10 மணியெல்லாம் அவர்களுக்கு நடுச்சாமம் போல் ஆழ்ந்த உறக்க நேரமாகிவிடும்.
சிலருக்கு 9 மணிக்கெல்லாம் தூக்கம் கண்களை தழுவட்டுமே என்று காதில் கீதம் பாடும். 10 மணியெல்லாம் அவர்களுக்கு நடுச்சாமம் போல் ஆழ்ந்த உறக்க நேரமாகிவிடும். ஆனால் சிலருக்கு மணி 12 ஆனால் மெத்த வாங்கினேன் தூக்கத்த வாங்கல என்ற பாடல் மட்டுமே கேட்கும்.
100லிருந்து தலைகீழாக ஒன்று வரை நூறு முறை எண்ணினாலும் கூட தூக்கமின்றி தவிப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் தூக்கம் வர தங்களின் வாழ்க்கைமுறையில் சில பல விஷயங்களை சரி செய்தாலே போதும். அதில் மிக முக்கியமானது உணவு முறை. உணவில் இந்த 5 வகை பொருட்களை பயன்படுத்தி வந்தால் நிச்சயமாக நல்ல தூக்கத்திற்கு கேரன்டி எனக் கூறுகிறார்கள் நிபுணர்கள்.
பால்:
பாலில் ட்ரிப்டோஃபேன் மற்றும் வைட்டமின் டி உள்ளது. இவை தூக்கத்திற்கு நல்ல அடித்தளம் போடும். பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் தூக்கத்தை உறுதி செய்யும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
உலர் கொட்டைகள்:
நார்ச்சத்து, வைட்டமின், தாதுக்கள் ஆகியவை உலர் கொட்டைகளில் அதிகமாக உள்ளன. இதில் உள்ள மெலட்டோனின் மற்றும் ஜிங்க், ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்ஸ், ட்ரிப்டோபேன் ஆகியன தூக்கத்தை சீராக அமைத்துத் தரும். பாதாம் பருப்பில் ஜிங்க் மற்றும் மெலடோனின் இருக்கின்றன. மேலும் இதில் மெக்னீஸியமும் இருக்கிறது. அதேபோல் பூசணி விதைகளும் நல்ல தூக்கத்திற்கு உதவும். பூசணி விதையிலும் ஜிங்க் மற்றும் மெக்னீஸிம் இருக்கின்றது.
ஹெர்பல் டீ:
காலங்காலமாக மூலிகை தேநீர் மருத்துவ குணங்கள் பற்றி பேசப்படுகிறது. அதன் மனம் மற்றும் தெரபி அம்சம் அதற்குக் காரணம். Chamomile tea ( சீமை சாமந்தி டீ ) , இது ஒரு அற்புதமான மூலிகை tea ஆகும். இந்த tea -யை குடித்தால் நீண்ட நாட்கள் இளமையோடு இருக்கலாம்.மேலும் இதில் ஏராளமான நன்மைகள் உள்ளது. மன அழுத்தம் , எதிர்ப்பு சக்தி , மாதவிடாய் வலி , தூக்கமின், கருவளையங்கள் போக்க , பொடுகு , சளி போன்ற அணைத்து பிரச்சைனைகளுக்கும் இந்த Chamomile tea -யை பருகலாம் . தூக்கம் நன்றாக அமைய உதவும். அதேபோல் லேவண்டரும் தனது நறுமணத்தால் தூக்கத்தை உறுதி செய்யும்.
டார்க் சாக்கலேட்:
டார்க் சாக்லேட்டுகள் நிறைய சாப்பிடக் கூடாது. ஆனால் அதில் உள்ள செரடோனின் உங்களை ரிலாக்ஸ்டாக இருக்க உதவும். அதனாலேயே இரவு உணவில் டெஸர்ட்டாக டார்க் சாக்கலேட் உண்போர் உண்டு.
வாழைப்பழம்:
வாழைப்பழத்தில் உள்ள மெக்னீஸியமும் பொட்டாசியமும் தசைகளையும், நரம்புகளை லகுவாக்கி நல்ல தூக்கத்திற்கான சூழலை உருவாக்கும். கூடவே அதில் பி6 இருக்கிறது. அது ட்ரிப்டோபேனை செரட்டோனினாக மாற்றி நல்ல ஆசுவாசத்தைத் தரும்.