Health Tips: உடலுக்கு கிரீன் காபி நல்லதா? பிளாக் காபி நல்லதா? எந்த அளவு குடிக்கலாம்?
காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் பால் சேர்த்து காபி குடிப்பதைத் தவிர்த்து விட்டு, பிளாக் காபி குடிக்கப் பழகினால் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்
இதில் க்ரீன் காபி கொட்டைகள் அதாவது பச்சை காபி கொட்டைகள் என்பது வறுக்காத காபி கொட்டைகள் என வகைப்படுத்தலாம். இதில் வறுத்த காபி கொட்டைகள் பிளாக் காபி கொட்டைகள் என அறியப்படுகிறது. காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் பால் சேர்த்து காபி குடிப்பதைத் தவிர்த்து விட்டு, பிளாக் காபி குடிக்கப் பழகினால் அனைவரையும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். அதேபோல் உடலில் எடையையும் குறைக்கும்.
காபி கொட்டைகளை வறுப்பதால் அதில் இருக்கும் க்லோரோஜெனிக் என்னும் மூலக்கூறு குறைந்து விடுவதாக ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது. பச்சைக் காபியில் இருக்கும் உயர் க்லோரோஜெனிக் அமிலம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிப்பதாக கூறப்படுகிறது.
பொதுவாக பயன்படுத்தும் வறுத்த கொட்டைகளைக் கொண்டுத் தயாரிக்கும் காபியில் இந்த க்லோரோஜெனிக் அமிலம், பச்சைக் காபியை விட குறைந்த அளவில் உள்ளதாக கூறப்படுகிறது.
பச்சை காபி பருகுவதால், அதில் இருக்கும் க்லோரோஜெனிக் அமிலத்தால் கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்து இதயத்திற்கு நன்மை கிடைப்பதாக சொல்லப்படுகிறது. இதில் பச்சை காபி கொட்டைகள் வறுத்து பதப்படுத்தப்படாதவை என்பதால் இதில் அதிக அளவு அன்டி ஆக்சிடென்ட் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.
இந்த கிரீன் காபி அருந்துவதால் கல்லீரல் சுத்திகரிக்கப்பட்டு, இயற்கை முறையில் உடலில் உள்ள நச்சுக்கள் நீக்கப்படுவதாக ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது. அதேபோல் உடலில் இருந்து தேவையற்ற கொழுப்புகளும் வெளியேற்றப்படுகின்றன.
கிரீன் காபி அருந்துவதால் இரத்த அழுத்தம் குறைந்து மேலும் எடை குறைப்பிற்கும் உதவுகிறது.
அதேபோல் இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் இது முக்கிய பங்காற்றுகிறது.
உங்கள் எடையைக் குறைக்க விரும்புவோர், அடிக்கடி ஏற்படும் பசியை போக்க விரும்புவோர் பச்சை காபியை பருகுவதால், பசி குறைந்து அதிக உணவு சாப்பிடுவதை தடை செய்யும். இதனால் பச்சை காபி சாப்பிடுவதால் எடை கணிசமான அளவு குறைகிறது என சொல்லப்படுகிறது. பச்சை காபியில் உள்ள கொலோரோஜெனிக் அமிலம் பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த பச்சை காபி கொட்டைகள் உதவுவதாக அறியப்படுகிறது. நீரிழிவு நோயாளிகள், பச்சை காபி குடிப்பதால், இரத்த ஓட்டத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. கருப்பு காபியை பச்சை காபியுடன் ஒப்பிடும்போது அதிக காஃபின் கொண்ட மிகவும் அதிகம் பேரால் விரும்பப்படும் ஒரு பொருளாகும். காபி கொட்டைகளை வறுக்கும்போது காஃபின் தூண்டுதல் அதிகரிப்பதாக கூறப்படுகிறது.
இதில் கிரீன் காபி ,பிளாக் காபி என கூறும் போது பிளாக் காபி தான் அதிக அளவு சுவை கொண்டது என கூறப்படுகிறது.
இந்த பிளாக் காபி மிகவும் வாசனை நிறைந்ததாக இருக்கிறது. ஒரு கிளாஸ் பிளாக் காபியில் இருக்கும் அதே அளவு காஃபினைப் பெற ஒருவர் 4-5 கிளாஸ் க்ரீன் காபியை உட்கொள்ள வேண்டும் என ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது.
பிளாக் காபியை போன்று பச்சை காபியில் அதிக சுவை மணம் இருப்பதற்கு வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. ஒவ்வொரு உணவிலும் உடலுக்கு தேவையான நன்மைகள் இருப்பது போல் பக்க விளைவுகளும் இருக்கவே செய்கிறது. பச்சை காபியில் நிறைய நன்மைகள் இருந்தாலும் பிளாக் காபியை போன்று இதிலும் காபின் அதிகளவாக இருப்பதாகவே சொல்லப்படுகிறது.
மணம் ,சுவை ,நிறத்தில் அடித்துக்கொள்ள கறுப்பு காபியை விட வேறு எதுவுமில்லை. அதேபோல் நினைவாற்றலுக்குறிய மூளையின் குறிப்பிட்ட பகுதிகளை இந்த காபியில் இருந்து கிடைக்கும் காஃபின் பாதிப்படையச் செய்வதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பச்சை காபி கொட்டைகளை வறுத்தெடுத்தால், காஃபியில் அமிலத்தன்மை அதிகமாக இருக்கும் , இது உடலில் காபின் தன்மையை அதிகமாக காட்டும். உடல் எடையைக் குறைப்பது மட்டுமின்றி, இதய நோய்கள்,
புற்றுநோய், நீரிழிவு போன்ற நோய்களைத் தடுக்கவும் பிளாக் காபி உதவுகிறது.
காபியில் காஃபின் இருப்பதால் உடல்நலம் பாதிக்கப்படும் என்ற எண்ணம் அனைவர் மனதிலும் பதிந்துள்ளது. ஆனால் கருப்பு காபியை அளவாக உட்கொள்வது உங்களுக்க பல நன்மைகளைத் தரும். உடல் கொழுப்பை கரைத்து அதன் மூலம் எடையைக் குறைக்க உதவும். பிளாக் காபியை கொழுப்பை எரிக்கும் சப்ளிமெண்ட் என்றும் சுகாதார நிபுணர்கள் அழைக்கின்றனர்.