(Source: ECI/ABP News/ABP Majha)
Obama Questions : திருமணம் ஆகப்போகுதா? ஒபாமா உங்க முன்னாடி வைக்கிற மூன்று கேள்விகள் இவைதான்..
திருமணம் செய்துகொள்வதற்கு முன்பு உங்கள் மனைவியாகப் போகிறவரிடமோ, கணவனாகப் போகிறவரிடமோ இந்த மூன்று கேள்விகளைக் கேட்டு பின்பு முடிவெடுங்கள் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.
திருமணம் செய்துகொள்வதற்கு முன்பு உங்கள் மனைவியாகப் போகிறவரிடமோ, கணவனாகப் போகிறவரிடமோ இந்த மூன்று கேள்விகளைக் கேட்டு பின்பு முடிவெடுங்கள் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மூன்று கேள்விகள்:
திருமணம் என்பது மனிதனின் வாழ்க்கையில் பழங்காலம் முதலே முக்கியமான விஷயமாக இருந்து வருகிறது. திருமணம் செய்துகொள்வதற்காக ஆணோ, பெண்ணோ பல்வேறு வகைகளில் மெனக்கெடுகிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரையில் மனிதனின் வாழ்க்கையில் திருமணம் என்பது முக்கிய நிகழ்வாகப் பார்க்கப் படுகிறது. மேற்கத்திய நாடுகளில் விவாகரத்து சாதாரணமானது தான் என்றாலும் கூட, இந்தியாவில் அது இன்னும் பரவலாக்கப்படவில்லை. எனவே, தன் வாழ்நாளில் மிகப்பெரும் காலத்தை தன்னுடன் செலவிடப் போகும் நபரை மிக கவனமுடன் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில், 3 கேள்விகளை தங்களுக்குள்ளாக கேட்டுக்கொள்வதன் மூலம் தனக்கான இணையரை தேர்ந்தெடுக்கலாம் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா கூறியுள்ளார்.
பாரக் ஒபாமா, மிச்செல்லி ஒபாமா தம்பதியினரை சிறந்த கணவன் மனைவிக்கு எடுத்துக்காட்டாகவே சொல்லலாம். உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இளைஞர், இளைஞிகள் மற்றும் தம்பதியினருக்கு ஒரு முன்னுதாரணமாகவே இருவரும் திகழ்கின்றனர். தங்களைப் போன்று மகிழ்ச்சியான தம்பதிகளாய் இருக்க திருமணத்திற்கு முன்பே 3 கேள்விகளை கேளுங்கள் என்கிறார் ஒபாமா. ஒபாமா கேட்கசொல்லும் முதல் கேள்வி,
உங்களது இணையர் சுவாரஸ்யமானவரா?
உங்கள் வாழ்நாளில் பெரும்பாலானப் பகுதியை மற்ற யாரை விடவும் உங்களுடன் வாழப்போகிறவர் உங்கள் இணையர் தான் என்பதால் அவர் சுவாரஸ்யம் மிக்கவராக இருப்பது அவசியம் என்கிறார் ஒபாமா. உங்கள் இணையராகப்போகிறவர் எது பற்றி நினைக்கிறார், என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பது பற்றி தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். அதை தெரிந்துகொள்ளாமல் திருமணம் செய்தால் வாழ்க்கையில் ஒரு சுவாரஸ்யமே இல்லாமல் மொத்த வாழ்க்கையுமே கடினமாகிவிடும் என்கிறார் ஒபாமா.
உங்களது இணையர் நகைச்சுவை குணம் கொண்டவரா?
உங்களை யார் தங்களது நகைச்சுவைகள் மூலமாகவும் செயல்கள் மூலமாகவும் சிரிக்க வைக்கிறாரோ அவர் உங்கள் வாழ்நாளின் பொக்கிஷமாக இருப்பார். மனிதனுக்கு நகைச்சுவை உணர்வு முக்கியம். அதை தனது இணையருடன் பகிர்ந்து கொள்வது மிகவும் முக்கியம். ஏனெனில், சில காலங்களுக்குப் பிறகு வாழ்க்கையில் ஒரு சலிப்பு ஏற்பட்டுவிடும். அப்போது இந்த நகைச்சுவை உணர்வு தான் மீதி காலத்தை சுவாரஸ்யமாக்கும். திருமண உறவை நிலைத்திருக்கச் செய்யும் என்று ஒபாமா கூறுகிறார்.
உங்கள் இணையர் நல்ல பெற்றோராக இருப்பாரா?
இறுதியாக, உங்கள் இணையர் உங்கள் குழந்தைக்கு நல்ல பெற்றோராக இருப்பாரா என்ற கேள்வி முக்கியமானது என்கிறார் ஒபாமா. இந்த கேள்வி தான் திருமணத்திற்கு சம்மதிக்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்வது. குழந்தைகளிடம் அன்பான, அக்கறையுள்ள மற்றும் நற்பண்புகளை விதைக்கக்கூடிய ஒருவருடன் இருப்பது முக்கியமானது மற்றும் அவசியமானதும் கூட என்று ஒபாமா கூறுகிறார்.
எனவே, உங்கள் வாழ்விணையரை தேர்ந்தெடுக்கும் முன் மேற்சொன்ன மூன்று கேள்விகளை கேட்டு அதற்கான விடையை தெரிந்துகொண்ட பின் திருமணத்திற்கு முயற்சி செய்யலாம் என்று ஒபாமா கூறியுள்ளார்.