Low Blood Pressure | ஹைப்போடென்ஷன் இருக்கா? டென்ஷன் வேண்டாம்.. இந்த உணவுகள் முக்கியம்..!
உடலில் இரத்த அழுத்தம் அதிகமானாலும் பிரச்னை தரும் குறைந்தாலும் பிரச்னை தரும். நீங்க டென்ஷன் ஆனீங்கனா அது பிரஷர் அதிகமா இருக்குன்னு அர்த்தம் இல்லை.
உடலில் இரத்த அழுத்தம் அதிகமானாலும் பிரச்னை தரும் குறைந்தாலும் பிரச்னை தரும். நீங்க டென்ஷன் ஆனீங்கனா அதுக்கு பிரஷர் அதிகமா இருக்குன்னு அர்த்தம் இல்லை. டென்ஷன் அதிகம் ஆனாலும், பிரஷர் குறைவா இருக்கும். ஆகா மொத்தத்துல டென்ஷன் ஆனவே பிரச்னைதான். அதாவது பிரஷர்னு எதை சொல்றோம்னா இரத்த அழுத்தம். ஒரு குறிப்பிட்ட அழுத்தத்தில் உடலில் இரத்த ஓட்டம் நடைபெறும். அது 120/80 மிமீ ஹெச்ஜி என்பது சாதாரணமா இருக்க வேண்டிய அழுத்தம். இதில் 10 மிமீ ஹெச்ஜி கூடுதலாகவோ குறைவாக இருக்கலாம். அது சாதாரணமா அளவாகும். மில்லிமீட்டர் (மிமீ எச்ஜி) என அலகில் அளவிடப்படுகிறது.
140/ 90 மிமீ ஹெச்ஜி மற்றும் அதற்கு அதிகமாக இருந்தால் அது உயர் இரத்த அழுத்தம் , ஹைப்பர்டென்ஷன் எனவும், 90 /60 மிமீ ஹெச்ஜி அதற்கு குறைவாக இருந்தால் அது குறைத்த இரத்த அழுத்தம் ஹைப்போடென்ஷன் எனவும் அழைக்கப்படுகிறது. 90/60 மிமீ எச்ஜி இதற்கு குறைவாக இருந்தால், மங்கலான பார்வை, மயக்கம், தொடர்ந்து ஒரு தலைவலி, தலைசுற்றல், வாந்தி, குமட்டல் , கவன குறைபாடு, இது போன்ற அறிகுறிகள் தோன்றும். நாடித்துடிப்பு அதிகமாதல், மூச்சு விடுவதில் சிரமம், கை கால்களில் குளிர்ச்சியாக இருத்தல், வியர்த்து கொட்டுதல், போன்ற பிரச்னை இருந்தால் , உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
ஹைப்போடென்ஷன் பிரச்னை இருந்தால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மருந்துகள் மட்டுமில்லாமல், சில வாழ்வியல் முறை மாற்றம் இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைக்க உதவும். தினம் உடற்பயிற்சி, டென்ஷன் ஆகமா இருக்க பிராணாயாமா பயிற்சிகள், தியான பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். போதுமான தூக்கம் அவசியம். மேலும் என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம், ஹைப்போடென்ஷன் பிரச்சனையை கட்டுக்குள் வைக்கலாம்.
தண்ணீர் - உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது 2-3 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். குறைவாக தண்ணீரை குடித்தால் அது இரத்தத்தை குறைக்கும். அதனால் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைக்க உதவும்.
வைட்டமின் பி – போலேட், வைட்டமின் பி-இன் ஒரு வகையை எடுத்துக்கொள்ள வேண்டும். இது இரத்த சிவப்பணுக்களை உருவாக்குகிறது. ஃபோலேட் அதிகம் உள்ள சிட்ரஸ் பழங்கள், அஸ்பாரகஸ், பயறு, பீன்ஸ், கீரைகள், முட்டை இந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.
உப்பு - இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் அவர்கள் உப்பின் அளவை குறைத்து எடுத்து கொள்ளவேண்டும். இரத்த அழுத்தம் அதிகமாக இருந்து உணவில் சரியான அளவு உப்பு சேர்த்து சாப்பிட வேண்டும்.
காஃபின்: காபி அல்லது காபினெட்ட் பானங்கள் தற்காலிகமாக இரத்த அழுத்தத்தை அதிகரிக்க உதவும்.