Velvet Pan Cake :வெல்வெட் பேன் கேக் இப்படி செய்து பாருங்க... சுவை சூப்பரா இருக்கும்..
சுவையான பேன் கேக் எப்படி ஈசியா செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மைதா மாவு - 10 கப் சர்க்கரை - 1/4 கப் கோக்கோ பவுடர் - 2/3 கப் பேக்கிங் சோடா - 6 டேபிள் ஸ்பூன் பேக்கிங் பவுடர் - 4 டேபிள் ஸ்பூன் உப்பு - 5 டேபிள் ஸ்பூன் பட்டர் மில்க் - 2 கப் முட்டை - 2 சிவப்பு கலரிங் பொடி-2 டேபிள் ஸ்பூன் பட்டர் மற்றும் மாப்பிள் சிரப் - 1 டேபிள் ஸ்பூன்.
தயாரிப்பு முறை
ஒரு பெரிய பெளலில் மைதா மாவு மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
அதனுடன் கோக்கோ பவுடர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து எல்லா பொருட்களையும் நன்றாக கிளற வேண்டும்.
5 சிப் லாக் கவர் அல்லது 5 காற்று புகாத டப்பாக்களை எடுத்து கொண்டு ஒவ்வொரு கவரிலும் அல்லது டப்பாக்களிலும் இரண்டு கப் அளவிற்கு மாவு கலவையை வைக்கவும்.
இப்பொழுது இவைகளை பிரிட்ஜில் வைத்து விட வேண்டும்.
பேன் கேக் செய்முறை
ஒரு சிறிய பெளலை எடுத்து அதில் பட்டர் மில்க் மற்றும் முட்டையை சேர்த்து இரண்டையும் ஒரு கலக்கியை கொண்டு நன்றாக அடித்து கொள்ள வேண்டும்.
இதனுடன் கலரிங் பொடியை சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும்
பிரிட்ஜில் வைத்து எடுக்கப்பட்ட கலவையை இதனுடன் சேர்த்து, ஈரப்பதம் வரும் வரை நன்றாக கலக்கவும்.
ஒரு தவாவை எடுத்து சூடுபடுத்தி, அதில் எண்ணெய் அல்லது பட்டரை தடவ வேண்டும்.
இப்பொழுது கலந்து வைத்துள்ள (பேட்டரை) மாவை 1/4 கப் அளவிற்கு அதில் ஊற்றி, மேலே நுரைகள் வந்ததும் அதை மறு புறம் திருப்பி விட்டு பொன்னிறமாகும் வரை வேகவைக்கவும்.
நன்றாக வெந்ததும் பேன் கேக்கை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கேக் மீது வெண்ணெய் மற்றும் சிரப் ஊற்றி அலங்கரித்து சூடாக பறிமாறலாம். இந்த கேக்கை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.
மேலும் படிக்க