Goat Update: "அநியாயம் பண்ணாதீங்க அப்டேட் வரும்" அன்புத் தொல்லை செய்யும் ரசிகர்களுக்கு வெங்கட்பிரபு வேண்டுகோள்!
கோட் அப்டேட் கேட்டு ரசிகர்கள் கொடுத்த டார்ச்சரில் கடுப்பாகியுள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.
அநியாயம் பண்ணாதீங்க விரைவில் அப்டேட் வரும் என்று கோட் பட இயக்குநர் வெங்கட் பிரபு ரசிகர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
கோட் (GOAT)
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தற்போது கோட் படத்தில் நடித்து வருகிறார். பிரஷாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மோகன், பிரேம்ஜி உள்ளிட்ட பல நடிகர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். கடந்த ஜனவரி 1 ஆம் தேதி இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இதனைத் தொடர்ந்து அடுத்தகட்ட அப்டேட் எதிர்பார்த்து ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வருகிறார்கள்.
கோட் அப்டேட்
Aniyayam pannadheenga!! Update miga viraivil nanba nanbis!!! #GOAT and trust me it will be a sirapana update 🙏🏽🙏🏽🙏🏽
— venkat prabhu (@vp_offl) March 25, 2024
கோட் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், தாய்லாந்து, இஸ்தான்புல், இலங்கை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று அடுத்தடுத்து நடைபெற்று வருகிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் தொடர்ச்சியாக தனது ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் செல்ஃபி எடுத்து வருகிறார். தமிழ் நாட்டைப் போல் கேரளாவிலும் விஜய்க்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு தளத்தில் ஆயிரக் கணக்கான ரசிகர்கள் விஜயைப் பார்க்க கூட்டம் கூட்டமாக திரண்டு வருகிறார்கள்.
ஒவ்வொரு நாளும் கோட் படத்தின் அடுத்த அப்டேட் கேட்டு படக்குழுவினருக்கு ரசிகர்கள் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். இதில் பலர் இயக்குநர் வெங்கட் பிரபுவை வசைபாடியும் வருகிறார். சில நாட்கள் முன்பாக வெங்கட் பிரபு கோட் படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அந்த அப்டேட் என்னவாக இருக்கும் எப்போது வெளியாகும் என பலவிதமான கேள்விகள் சமூக வலைதளங்களில் எழுந்து வருகின்றன.
அநியாயம் பண்ணாதீங்க
அப்டேட் கேட்டு ரசிகர்கள் கொடுத்த டார்ச்சரின் கடுப்பான இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று இரவு ஒரு கருத்து தெரிவித்துள்ளார். இதில் அவர் அநியாயம் பண்ணாதீங்க. அப்டேட் விரைவில் வரும். அதுவும் சிறப்பான ஒரு அப்டேட் வரும்” என்று அவர் கூறியுள்ளார்.