News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

நாவில் எச்சில் ஊறும் சுவையில் தேங்காய் பால் புட்டிங்.. இப்படி செய்து அசத்துங்க!

சுவையான தேங்காய் பால் புட்டிங் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

FOLLOW US: 
Share:

2 கப் தேங்காய் துருவலை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். தேங்காயை துருவும் போது அடியில் உள்ள ப்ரெளன் நிறம் வராமல் பார்த்துக் கொள்ளவும். அப்போது தான் புட்டிங் தூய்மையான வெள்ளை நிறத்தில் இருக்கும். இதனுடன் 2 ஏலக்காயை சேர்த்துக் கொள்ளவும். தேங்காய் துருவலை எடுத்த அதே கப்பில் இரண்டு கப் அளவு தண்ணீரை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 

இப்போது இந்த தேங்காய் பாலை ஒரு கிண்ணத்தில் வடிக்கட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது ஒரு பாத்திரத்தை எடுத்து முக்கால் பாகம் அளவு தேங்காய் பாலை இந்த பாத்திரத்தில் சேர்க்கவும். மீதி பாலை தணியே எடுத்து வைத்துக் கொள்ளவும். முக்கால் பாகம் தேங்காய் பால் எடுத்துள்ள பாத்திரத்தில் அரை கப் சர்க்கரை சேர்க்கவும். தேங்காய் துருவல் அளந்த அதே கப்பால் சர்க்கரையை அளக்க வேண்டும். இதனுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து ஒரு கரண்டியால் கலந்து விட்டு இதை அப்படியே எடுத்து வைத்து விட வேண்டும். கால் கப் தேங்காய் பால் வைத்துள்ள பாத்திரத்தில் கால் கப் சோள மாவு சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து விட வேண்டும். இப்போது முக்கால் பாகம் பால் உள்ள பாத்திரத்தை அடுப்பில் வைத்து, மிதமான தீயில் வைத்து வேக விடவும். லேசாக கொதி வந்தவுடன் அடுப்பின் தீயை மேலும் குறைத்து கரைத்து வைத்துள்ள சோளமாவை இத்துடன் சேர்த்து 2 நிமிடம் தொடர்ந்து கரண்டியால் கிண்டி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். ( தேங்காய் பால் அதிகம் கொதித்தவுடன் சோளமாவு கரைசல் சேர்த்தால், தேங்காய்பால் திரிந்து விடும்) இப்போது இனிப்பை சரி பார்க்கவும். உங்களுக்கு தேவைப்பட்டால் மேலும் சிறிது சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.  இப்போது இது ஒரு வெண்ணெய் போன்று திரண்டு வரும். இப்போது அடுப்பை அணைத்து விட வேண்டும். இப்போது ஒரு கண்ணாடி பவுலை எடுத்து இந்த கலவை சூடாக இருக்கும் போதே இதில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.  சூடு ஆறியதும் இதை மூடி போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து இரண்டு மணி நேரத்திற்கு பின் எடுத்து லேசாக ஷேக் செய்து விட்டு ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ள வேண்டும். இதை கத்தியால் வெட்டி பரிமாறலாம். இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும். 

Published at : 18 Apr 2024 02:56 PM (IST) Tags: coconut milk pudding pudding recipe

தொடர்புடைய செய்திகள்

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

டாப் நியூஸ்

கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?

கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...

ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?

ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?

Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து