Cashew Nuts Cake: எலும்பு வலிமையை அதிகரிக்க உதவும் முந்திரி கேக்! சுவையாக செய்வது எப்படி?
சுவையான முந்திரி கேக் செய்முறையும், முந்திரியின் பலன்களையும் கீழே விரிவாக பார்க்கலாம்.
![Cashew Nuts Cake: எலும்பு வலிமையை அதிகரிக்க உதவும் முந்திரி கேக்! சுவையாக செய்வது எப்படி? tasty cashew nuts cake recipe procedure and its benefits Cashew Nuts Cake: எலும்பு வலிமையை அதிகரிக்க உதவும் முந்திரி கேக்! சுவையாக செய்வது எப்படி?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/04/a233c9335279ae03260e934929632f9e1704348454423571_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தேவையான பொருட்கள்
முந்திரி 200 கிராம்
சர்க்கரை 200 கிராம்
தண்ணீர் தேவையான அளவு
நெய் தேவையான அளவு
குங்குமப்பூ ஒரு சிட்டிகை
ஏலக்காய் பொடி இரண்டு சிட்டிகை
செய்முறை :
முதலில் முந்திரியை இரண்டு மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அடுப்பில் கடாயை வைத்து சர்க்கரை, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சவும். (தண்ணீர் குறைவாக சேர்க்க வேண்டும் இல்லையென்றால் பாகு பதம் வர அதிக கூடுதல் நேரம் எடுத்துக் கொள்ளும்)
பாகு பதம் வந்தவுடன் அரைத்த முந்திரி விழுதை சிறிது சிறிதாக பாகில் கொட்டி கிளற வேண்டும். பின்னர் குங்குமப்பூ சேர்த்து தேவையான அளவு நெய் சேர்த்து கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். பின்னர் ஏலக்காய் பொடி சேர்க்க வேண்டும்.
முந்திரியின் பயன்கள்
உங்களுக்கு முடி பிரச்சினை அதிகமாக இருந்தால், தினமும் 4 முந்திரி சாப்பிடுவதால் அதை சரி செய்ய முடியும் என்ன சொல்லப்படுகிறது. இவற்றில் உள்ள காப்பர், முடியை அதிக உறுதியுடனும், கருகருவெனவும் வைத்து கொள்ள உதவலாம்.
மேலும் தினசரி 4 முந்திரி சாப்பிடுவதால் தோலில் உள்ள செல்கள் அதிக புத்துணர்வு பெற்று பொலிவாக இருக்குமாம். ஏனெனில், முந்திரியில் அதிக புரதசத்து, ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், ஜின்க், செலினியம், இரும்புசத்து உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)