Ladies Finger Fry :ஞாபக சக்தியை அதிகரிக்கும் வெண்டைக்காய்...மொறு மொறு ஃப்ரை இப்படி செய்து பாருங்க...
சுவையான வெண்டைக்காய் ஃப்ரை செய்முறை பார்க்கலாம்
தேவையான பொருட்கள்
வெண்டைக்காய் - 25
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
கரம் மசலா - 1 டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - வறுக்க தேவையான அளவு
செய்முறை
முதலில் வெண்டைக்காய்களை சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அவற்றை இரண்டாக நறுக்கி நீள வாக்கில் சிப்ஸ் போல் நறுக்கிக்கொள்ள வேண்டும். அல்லது வழக்கம் போல் வட்டமாக நறுக்கி கொள்ளலாம்.
பின் வெண்டைக்காயை ஒரு கிண்ணத்தில் சேர்த்து அதில் கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு , உப்பு, மிளகுத்தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்க்க வேண்டும்
இதில் லேசாக தண்ணீர் தெளித்து வெண்டைக்காயில் மசாலா நன்கு ஒட்டுமாறு கலந்து கொள்ள வேண்டும்.
பின் அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் வெண்டைக்காயை தூவி விட்டு பொன்னிறமாக பொறித்து எடுத்தால் சுவையான வெண்டைக்காய் வறுவல் தயார்.