மேலும் அறிய
Baingan Sambhar: கத்தரிக்காய் சாம்பாரை ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க! டேஸ்ட் செம அசத்தலா இருக்கும்!
கத்தரிக்காய் சாம்பாரை எப்படி சுவையாக செய்வது என்று பார்க்கலாம்.
சாம்பார் தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமானது. இதை தோசை, இட்லி, ஊத்தாப்பம் உள்ளிட்ட நீங்கள் விரும்பும் அனைத்து கிளாசிக் தென்னிந்திய உணவுகளுடனும் சேர்த்து சாப்பிடலாம். வாங்க சுவையான கத்தரிக்காய் சாம்பார் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- 2 பெரிய கத்தரிக்காய்
- 1 கப் துவரம் பருப்பு
- 1 சிறிய துண்டு புளி
- 2 தக்காளி, துண்டுகளாக்கப்பட்டது
- 2 டீஸ்பூன் சாம்பார் பொடி
- 1 தேக்கரண்டி கடுகு விதைகள்
- 1/2 தேக்கரண்டி வெந்தய விதைகள்
- 10-12 கறிவேப்பிலை
- ஒரு சிட்டிகை பெருங்காய தூள்
- 2 டீஸ்பூன் தாவர எண்ணெய்
- சுவைக்கேற்ப உப்பு
- தண்ணீர், தேவைக்கேற்ப
செய்முறை
1.கத்தரிக்காயை முட்கரண்டி அல்லது கத்தியால் துளைத்து, திறந்த தீயில் நேரடியாக சுட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.
2.பின் கத்திரிக்காய்களை ஆற வைக்க வேண்டும். பின்னர் கத்தரிக்காயின் கருகிய தோலை உரித்து விட்டு, கத்தரிக்காயை மசித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
3. ஒரு தனி பாத்திரத்தில், துவரம் பருப்பை நன்கு கழுவி, சற்று குழந்து மென்மையாக மாறும் வரை போதுமான தண்ணீரில் வேக வைக்க வேண்டும். வேகமான சமையலுக்கு பிரஷர் குக்கரையோ அல்லது வழக்கமான பாத்திரத்தையோ பயன்படுத்தலாம். ஆனால் அதற்கு அதிக நேரம் ஆகலாம்.
4. பருப்பு வேகும் போது, புளியை வெதுவெதுப்பான நீரில் சுமார் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். புளியை கரைத்து அதன் கரைசலை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
5. அடுப்பை மிதமான தீயில் வைத்து, ஒரு பெரிய கடாயில், தாவர எண்ணெயை சூடாக்கவும். கடுகு சேர்த்து அவை பொரிந்ததும், வெந்தயம், கறிவேப்பிலை மற்றும் ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்க்கவும். ஒரு நிமிடம் கிளறி விட வேண்டும்.
6.கடாயில் துண்டுகளாக்கப்பட்ட தக்காளியைச் சேர்த்து, அவை மென்மையாகும் வரை வேக வைக்க வேண்டும்.
7.இப்போது, கடாயில் சாம்பார் பொடியைச் சேர்த்து, தக்காளியுடன் மசாலா நன்கு சேரும் வரை இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
8. அதில் புளி கூழ் ஊற்றி நன்கு கலக்கவும். கலவையை சில நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.
9.கடாயில் பிசைந்த கத்தரிக்காயைச் சேர்த்து, புளி-மசாலா கலவையையும் சேர்க்கவும். அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு கிளறவும்.
10. பருப்பு நன்றாக வெந்ததும், கத்தரிக்காய்-புளி கலவையுடன் கடாயில் சேர்க்கவும். எல்லாவற்றையும் ஒன்றாகக் கிளறி, குறைந்த வெப்பத்தில் சுமார் 10-15 நிமிடங்கள் கொதிக்க விடவும். சாம்பார் உங்களுக்கு எந்த பதத்தில் வேண்டுமோ அதற்கேற்றவாறு தண்ணீர் சேர்க்க வேண்டும்.
11. சாம்பாரில் உப்பு சேர்த்து சரிபார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.
12. சாம்பாரை ருசித்து, தேவைப்பட்டால் மசாலா அளவை சரிசெய்து ஓரிரு நிமிடங்கள் கொதிக்க விட்டு கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கிக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் சுவையான கத்தரிக்காய் சாம்பார் தயார்.
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
விளையாட்டு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion