News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

Rice Bonda: பச்சரிசி, உருளைக்கிழங்கில் மொறு மொறு போண்டா... இப்படி செய்து அசத்துங்க!

சுவையான பச்சரிசி உருளைக்கிழங்கு போண்டா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

FOLLOW US: 
Share:

மாலை நேரத்தில் சாப்பிடுவதற்கு ஏற்ற ஒரு ஸ்னாக்ஸ் எப்படி செய்வது என்று தான் இப்போது நாம் பார்க்க போகின்றோம். பச்சரிசி மற்றும் உருளைக்கிழங்கை கொண்டு சுவையான போண்டா செய்யலாம். இது சாப்பிடுவதற்கு மொறு மொறுவென சுவையாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த போண்டாவை விரும்பி சாப்பிடுவர். 

தேவையான பொருட்கள் 

பச்சரிரி - 1 கப்

உருளைக்கிழங்கு - 2 

பெரிய வெங்காயம் - 1

பச்சைமிளகாய் - 1

இஞ்சி - 1 துண்டு 

எண்ணெய் - தேவையான அளவு 

கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி 

உப்பு - தேவையான அளவு 

ஆப்ப சோடா - இரண்டு சிட்டிகை

செய்முறை 

1 கப் பச்சரிசியை 4 மணி நேரம் ஊற வைத்து அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து மைய அரைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகம் சேர்க்காமல் மாவை சற்று கெட்டியான பதத்தில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 

இரண்டு மீடியம் சைஸ் உருளைக்கிழங்கை வேக வைத்து துருவி அதையும் மாவுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இதணுடன் அரை இன்ச் இஞ்சியை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். 

1 பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு கைப்பிடி கொத்தமல்லியை நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். மீடியம் சைஸ் வெங்காயம் ஒன்றை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். 

தேவையான அளவு உப்பு. இரண்டு சிட்டிகை ஆப்ப சோடா சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.  மாவு போண்டா செய்யும் பதத்தில் இருக்க வேண்டும். 

மாவில் ஒருவேளை தண்ணீர் அதிகமாகி விட்டால் சிறிது அரிசி மாவை சேர்த்துக் கொள்ளலாம். மாவு அதிகம் கெட்டிப் பதத்தில் இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். 

இப்போது மாவுடன் சேர்த்த அனைத்துப் பொருட்களும் மாவில் நன்றாக கலக்கும்படி பிசைந்துக் கொள்ள வேண்டும். 

இப்போது அடுப்பில் ஒரு கடாய் வைத்து பொரிக்க தேவையான அளவு எண்ணெய்யை கடாயில் சேர்த்து சூடானதும் மாவை கையால் எடுத்து போண்டாவாக போட்டு விட வேண்டும். 

அடுப்பை மிதமான தீயில் வைத்து போண்டாவை வேக வைக்க வேண்டும். போண்டா பொன்னிறமாக வெந்ததும் எடுத்து விடலாம். இதை கார சட்னி அல்லது தேங்காய் சட்னி  உடன் வைத்து சாப்பிட்டால் சுவை சூப்பரா இருக்கும். 

மேலும் படிக்க

பேச்சுலர் சிக்கன் கிரேவி! இப்படி செய்தால் சமையல் தெரியாதவர்கள் கூட அசத்தலாம்!

Ragi Idiyappam:கால்சியம் சத்து நிறைந்த கேழ்வரகு இடியாப்பம்... இப்படி செய்தால் பெர்ஃபெக்ட்டா வரும்!

Pumpkin Morkuzhambu : வெள்ளைப்பூசணி மோர் குழம்பு.. இப்படி செய்தால் சுவை சூப்பரா இருக்கும்..

Published at : 01 Mar 2024 02:14 PM (IST) Tags: Evening snacks snacks recipe bonda procedure rice potato bonda

தொடர்புடைய செய்திகள்

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

டாப் நியூஸ்

நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!

நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!

போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!

போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!

Breaking News LIVE: நீட் பயிற்சி மையங்கள் விதிமுறைகளை மீறி செயல்படுகின்றன - கிருஷ்ணசாமி

Breaking News LIVE: நீட் பயிற்சி மையங்கள் விதிமுறைகளை மீறி செயல்படுகின்றன - கிருஷ்ணசாமி

Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!

Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!