பேச்சுலர் சிக்கன் கிரேவி! இப்படி செய்தால் சமையல் தெரியாதவர்கள் கூட அசத்தலாம்!
சிக்கன் கிரேவியை மிக சுவையாகவும் எளிமையாகவும் செய்து அசத்துவது எப்படி என்று கீழே காணலாம்.
பெரும்பாலான பேச்சுலர்கள் ஹோட்டலில் சாப்பிடுவதைக் காட்டிலும் சமைத்து சாப்பிடுவதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர். இருந்த போதிலும் இதற்கு முன் எப்போதும் சமைத்ததில்லை என்பதுதான் பெரும் பிரச்சனை. இனி பேச்சுலர்கள் சிக்கன் கிரேவி செய்ய சிரமப்பட வேண்டாம்.
மிக எளிய முறையில், மிக சுலபமாக சிக்கன் கிரேவியை செய்து விட முடியும். புதிதாக திருமணமான பெண்களும், லிட்டில் பிரின்சஸ்களும் கூட இந்த முறையை பயன்படுத்தி ஈசியாக வெகு விரைவாக சிக்கன் கிரேவி செய்து விட முடியும்.
தேவையான பொருட்கள்
சிக்கன் - 1/2 கிலோ, வெங்காயம் - 3 (நறுக்கியது), தக்காளி - 2 (நறுக்கியது), இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4, குழம்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் , பட்டை - 1, கிராம்பு - 2 , சோம்பு - 1/2 டீஸ்பூன் , சீரகம் - 1/2 டீஸ்பூன் , உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் , கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது).
செய்முறை
முதலில் சிக்கனை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளியை மிக்ஸியில் சேர்த்து, அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், பட்டை, கிராம்பு, சோம்பு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் அதில் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.
பிறகு அத்துடன் அரைத்து வைத்துள்ள வெங்காய கலவையை போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கி விட வேண்டும்.
அடுத்து அதில் சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து, 5 லிருந்து 10 நிமிடங்கள் வரை நன்கு பிரட்டி விட்டு, குழம்பு மிளகாய் தூள் சேர்த்து ஒரு முறை பிரட்டி, பின் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். அதன் மேல் கொத்தமல்லியை தூவினால், சுவையான சிக்கன் கிரேவி தயார்.
மேலும் படிக்க
TN Assembly: பிப்ரவரி 22 ஆம் தேதி வரை சட்டப்பேரவை; ஆளுநர் செய்வது சரியா? - சபாநாயகர் அப்பாவு பதிலடி
TN Assembly: "இருங்க இனிதான் ஜன கன மண பாடுவோம்" ஆளுநரிடம் கூறிய சபாநாயகர் அப்பாவு!