Sprouts & soya chilla: புரதச்சத்து நிறைந்த முளைக்கட்டிய பச்சை பயறு, சோயா சில்லா - ரெசிபி இதோ!
Sprouts & soya chilla:புரதச்சத்து நிறைந்த பச்சை பயறு சோயா சில்லா எப்படி செய்ய வேண்டும் என்று காணலாம்.
காலை உணவு ஊட்டச்சத்துடன் இருக்க வேண்டும். அதிகம் சர்க்கரை இல்லாத, புரதம், நார்ச்சத்து நிறைந்த உணவு வகைகளை சேர்த்து கொள்ளவும். அவை நாள் முழுவதும் புத்துணர்வுடன் எல்லா வேலைகளையும் செய்ய தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்கும். அதோடு, ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்றாலும் ஆரோக்கியமானதை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.
முழு தானியங்கள், சிறு தானியங்கள், பழங்கள் உள்ளிட்டவற்றை தினமும் உணவில் சேர்த்துகொள்வது நல்லது. முளைக்கட்டிய பச்சை பயறு சில்லா செய்து சாப்பிடுவது ஊட்டச்சத்து நிறைந்தது. சில்லா மிகவும் பிரபலமான ஒரு உணவாகும். ஒரு எனர்ஜெட்டிக்கான உணவும் கூட. சில்லா பாரம்பரியமாக கடலை மாவு பயன்படுத்தித் தயாரிக்கப்படுகிறது.
என்னென்ன தேவை?
கடலை மாவு - ஒரு பெரிய கப்
முளைக்கட்டிய பச்சை பயறு - ஒரு கப்
சோயா Chunks - ஒரு கப்
துருவிய கேரட்- ஒரு கப்
துருவிய தேங்காய் - அரை கப்
நறுக்கிய வெங்காயம் - அரை கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்- 2
தக்காளி - 2
மஞ்சள் - ஒரு டீ ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - ஒரு ஸ்பூன்
செய்முறை:
பச்சை பயறு 6-7 மணி நேரம் நன்றாக ஊறை வைத்து அதை முளைக்கட்டி எடுக்கவும். சோயா சங்க்ஸ் தண்ணீரில் பத்து நிமிடம் ஊற வைக்கவும்.
இப்போது சில்லா தயாரிக்க மாவு அரைக்கலாம். பச்சை பயறு, சோயா சங்க்ஸ், இஞ்சி. பூண்டு விழுது, மிளகாய், உப்பு ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைக்கவும். இதை தனியே ஒரு பாத்த்திரல் சேர்க்கவும்.
இப்போது மிக்ஸியில் வெங்காயம், தக்காளி ஆகியவற்றை ஒன்றிரண்டாக அரைத்து பச்சை பயிறு கலவையுடன் சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, மஞ்சள், சீரகம், ஓமம் சேத்து நன்றாக கலக்கவும். இதோடு ஒரு கப் கடலை மாவு சேர்க்க வேண்டும். துருவிய கேரட் சேர்க்கலாம். . தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை சுடும் பதத்திற்கு மாவு இருக்க வேண்டும். மாவு தயாரானதும் 5 நிமிடங்கள் கழித்து தோசைகளாக ஊற்றி எடுக்கவும்.
தோசை கல்லில் மிதமான தீயில் மெலிதாக இல்லாமல் அடை மாதிரி வட்டமாக வார்க்கவும். மறுபுறம் புரட்டி, இருபுறமும் நன்றாக பொன்னிறமாக வேகும் வரை அதனை நன்கு சமைக்கவும். இதற்கு தேங்காய் எண்ணெய், நெய் என உங்கள் விருப்பபடி பயன்படுத்தலாம். பொன்னிறமாக மாறியதும் எடுத்தால் அவ்வளவுதான். ஊட்டச்சத்துமிக்க பச்சை பயிறு சோயா சில்லா ரெடி!
இதற்கு புள்ளிப்பும் காரமும் நிறைந்த தக்காளி, வெங்காயம் சட்னி, புதினா சட்னி என எதுவேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம். இதே செய்முறையில் முளைக்கட்டிய கொண்டைக்கடலை, நவதானியங்கள் என சேர்த்து சில்லா செய்து சாப்பிடலாம். புரதம் அதிகம் நிறைந்த உணவு.