News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

Ramassery idli : பாலக்காடு ராமசேரி இட்லி.. இந்த இட்லி மட்டும் ஏன் இவ்வளவு ஸ்பெஷல்.. எப்படி செய்யணும்?

 பல ஊர்களில் பல வகையான இட்லிகள் பிரபலமாக இருந்தாலும் கேரளா நாட்டின் ராமசேரி இட்லி தந்து தனித்தன்மையான சுவையால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக மக்களை வசியம் செய்து வைத்துள்ளது.

FOLLOW US: 
Share:
தென்னிந்திய உணவுகளில் மிகவும் ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவு வகை என்றால் அது நிச்சயமாக இட்லி தான். பல ஊர்களில் பல வகையான இட்லிகள் பிரபலமாக இருந்தாலும் கேரளா நாட்டின் ராமசேரி இட்லி தந்து தனித்தன்மையான சுவையால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக மக்களை வசியம் செய்து வைத்துள்ளது.

 நெசவாளர் குடும்பம் ஒன்று தஞ்சாவூரில் இருந்து கேரளவில் உள்ள பாலக்காடு அருகில் சிறிய கிராமமான ராமசேரி கிராமத்திற்கு குடிபெயர்ந்துள்ளது. அவர்கள் தங்களின் பொருட்களை விற்று கொண்டு வந்தனர். அப்படி அவர்கள் வரும் போது தங்களுடன் எடுத்து வந்ததுதான் இந்த இட்லி. பின்னர் அந்த கிராமத்தின் பெயரை கொண்டு அது ராமசேரி இட்லி என பிரபலமானது. சுமார் 4 குடும்பங்களிடம் மட்டுமே இந்த இட்லியின் முறையான செய்முறை பாதுகாக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த பிரபலமான பாரம்பரியமான ராமசேரி இட்லி அவர்கள் குடும்பத்துடன் அழிந்து விட கூடாது என்ற நோக்கத்தில் கப்பா சக்க கந்தாரி உணவகத்தின் இணை உரிமையாளரும் சமையல் இயக்குநருமான செஃப் ரெஜி மேத்யூ இந்த ராமசேரி இட்லியை  தத்தெடுத்துள்ளார். இன்று சென்னை மற்றும் பெங்களூருவில் உள்ள கப்பா சக்க கந்தாரி உணவகங்களில் இந்த ராமசேரி இட்லி தயாரிக்கப்பட்டு வருகிறது. இதை தயாரிக்கும் செய்முறை விதமே மிகவும் வசீகரமானது.
 


ராமசேரி இட்லியின் சிறப்பு:
 பாலக்காட்டில் கிடைக்கும் அரிசி, வெந்தயம், உளுந்து, கடல் உப்பு, உள்ளூர் தண்ணீர் மற்றும் அதன் தரம் தான் இந்த இட்லியின் தனித்துவம் வாய்ந்த சுவைக்கு காரணம். அரிசியை ஊறவைக்கும் நேரத்தை விடவும் குறைந்த நேரம் மட்டுமே பருப்பு ஊறவைக்கப்படுகிறது. இப்படி தயாரிக்கப்படும் மாவை மண் பானையில் ஒரு மஸ்லின் துணியில் ஊற்றி வேகவைக்கப்படுகிறது. மேல்புறமும் மற்றுமொரு மண்பானையால் மூடப்படுகிறது. அதனால் நீராவியானது ராமசேரி இட்லி வழியாக செல்வதால் இந்த இட்லி மிகவும் மென்மையாக வேகவைக்கப்படுகிறது. ஒட்டுமொத்த செய்முறையிலும் எந்த ஒரு உலோகமும் பயன்படுத்தப்படவில்லை.  



மண்பானைகளில் செய்யப்படுவதால் இந்த இட்லிகள் நீண்ட நாட்களுக்கு கெட்டு போகாமல் இருக்கும். இதனுடன் சிறப்பாக தயாரிக்கப்பட்ட பொடியில் தேங்காய் எண்ணெய் சேர்த்து பரிமாறப்படுகிறது. பயணத்தின்போது எடுத்துச்செல்வதற்கு மிகவும் சிறப்பானது.

பாலக்காடு செல்லும் வழியில் செஃப் ரெஜி மேத்யூ முதன்முதலில் இந்த ராமசேரி இட்லியை ஒரு தேநீர் கடையில் தான் சுவைத்துள்ளார். இந்த இட்லிகள் பிளாச்சி இலையைப் பயன்படுத்தி பரிமாறப்படுவதால் அது அந்த உணவிற்கு மேலும் ஒரு அருமையான நறுமணத்தை அளிக்கிறது என்றார். வாழை இலைகளை போன்ற வலுவானதாக இல்லாமல் மிகவும் நுட்பான நறுமணம்.



பொடியின் தனித்துவம்:

ராமசேரி இட்லிகளுக்கு பரிமாறப்படும் போட்டியானது பாலக்காட்டின் உள்ளூர் அரிசி வகையில் சில மசாலா பொருட்களையும் சேர்த்து அரைக்கப்படுகிறது. இதனை சாம்பார் அல்லது கோழிக்கறி குழம்புடன்  பரிமாறலாம். உணவகத்திற்கு வருபவர்கள் நிச்சயம் ஒரு செட் ராமசேரி இட்லியை ஆர்டர் செய்யாமல் இருப்பதில்லை.  

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

Published at : 21 Jul 2022 04:01 PM (IST) Tags: Ramassery idli palakkad special idli kerala Ramassery idli special Ramassery idli Ramassery idli ingredients

தொடர்புடைய செய்திகள்

அச்சச்சோ! செட்டிநாடு சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்! மதுரையில் சோகம்

அச்சச்சோ! செட்டிநாடு சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்! மதுரையில் சோகம்

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

டாப் நியூஸ்

Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்

Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்

DMK Protest: இன்னும் சற்று நேரத்தில்! நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்!

DMK Protest: இன்னும் சற்று நேரத்தில்! நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்!

EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.

EPS Pressmeet:

வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்

வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்