Mutta Idli : பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா சொன்ன முட்டை இட்லி ரெசிப்பி.. 10 நிமிஷத்துல..
Mutta Idli / Egg Idli Recipe : சூர்யவம்சம் தேவயானி மாதிரி இட்லி உப்புமாவே செஞ்சிக்கிட்டு இருக்கணும்னு அவசியம் இல்ல. இனிமே முட்டை இட்லி ரெசிப்பி செஞ்சுபாருங்க.
Mutta Idli / Egg Idli Recipe : தினமும் காலையில இட்லி, தோசை செஞ்சு செஞ்சு போரடிக்குதா? காலையில் கொஞ்சம் வித்தியாசமாகவும், சுவையாகவும், ஆரோக்கியமாவும் புரதச்சத்து நிரம்புன மாதிரி ஒரு டிபன் செய்ய நினைக்குறீங்களா? உங்க வீட்டுல நைட்டே டின்னருக்கு தயார் பண்ண சுட்ட இட்லி இருந்தா போதும். காலை டிபனுக்கு ஏத்த மாதிரி நைட்டே அதிகமா இட்லி சுட்டு வெச்சிருங்க.
சூர்யவம்சம் தேவயானி மாதிரி இட்லி உப்புமாவே செஞ்சிக்கிட்டு இருக்கணும்னு அவசியம் இல்ல. இனிமே முட்டை இட்லி ரெசிப்பி செஞ்சுபாருங்க.
தேவையான பொருட்கள்:
இட்லி - 3
முட்டை - 2
சமையலுக்கு பயன்படுத்துற எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 1
கிராம்பு - 2
பச்சை மிளகாய் - 1 (பொடிபொடியா நறுக்கியது)
வெங்காயம் - 2 (பொடிப்பொடியா நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
தக்காளி - 2 (பொடியா நறுக்கியது)
உப்பு - தேவைக்கு ஏத்த மாதிரி எடுத்துக்கலாம்.
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (பொடிப்பொடியா நறுக்கியது)
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
இட்லிகளையெல்லாம் நல்லா குட்டி குட்டியா உதிர்த்து போட்டிருங்க. கடாயை அடுப்புல வெச்சு, அது சூடானதும், எண்ணெய் ஊத்தி, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு லைட்டா தாளிச்சு, உடனே நறுக்கி வெச்ச பச்சை மிளகாய், வெங்காயத்தூளைச் சேர்த்து நல்லா சிவக்க சிவக்க வறுத்துக்கோங்க.
தாளிச்ச வாசனை நல்லா வருதா? அப்படியே மோப்பம் பிடிச்சிக்கிட்டே, இஞ்சி பூண்டு பேஸ்ட்டை கொஞ்சம் சேர்த்து சுண்ட வதக்குங்க. இப்போ நறுக்கி வெச்ச தக்காளியைச் சேர்த்து, மஞ்சள் தூள் கொஞ்சம் போட்டு நல்லா மென்மையாகுற வரைக்கும் வதக்குங்க. இப்போ முட்டைகளை உடைச்சு ஊத்தி நல்லா கிளறி விடுங்க.
அப்புறம் உதிர்த்துப்போட்ட இட்லியை அதுக்குள்ள போட்டு, நல்லா மிக்ஸாகுற வரைக்கும் நல்லா கிளறி விடணும். மிளகுத்தூளை தூவி, கொத்தமல்லியைத் தூவி இறக்குனா போதும். வாட்சப்ல ஸ்டேட்டஸ் போட்டுட்டு, ஜாலியா எஞ்ஜாய் பண்ணுங்க..