Kitchen Maintenance Tips: சமையறையில் பூச்சிகள் வராமல் இருக்க என்ன செய்வதென தெரியாமல் திணறுகிறீர்களா? இதோ டிப்ஸ்..!
சமையல் அறையை சுத்தமாக வைத்திருப்பது முதல் பூச்சிகள் அண்டுவதை எவ்வாறு தவிர்ப்பது என்பது குறித்து வரை இந்த தொகுப்பில் காணலாம்.
சமீப காலமாக உங்கள் சமையலறையில் தொடர்ந்து துர்நாற்றம் வீசுகிறதா? எறும்புகள் மற்றும் கரப்பான் பூச்சிகள் உணவு சமைக்கும் போதும், உணவுப் பொருட்களை சேமித்து வைக்கும் போதும் உங்களுக்கு சிரமத்தை தருகின்றனவா? ஆம் எனில், மழைக்காலம் தான் மிகவும் முக்கிய காரணம். மழைப்பொழிவு அதனால் ஏற்படும் காற்றில் ஈரப்பதம், உங்கள் சமையலறையை கிருமிகள், பூச்சிகள் மற்றும் பாக்டீரியாக்களின் இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாற்றுகிறது. இதனால் கண்ணுக்குத் தெரியும் மற்றும் கண்ணுக்கு தெரியாத பூச்சிகள் உணவு கெட்டுப்போகும் மற்றும் மாசுபடுவதற்கான அபாயங்களை மேலும் அதிகரிக்கின்றன. ஆனால் இப்போது, மழைக்காலத்தில் விடாமுயற்சியுடன் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பான சமையலறை நடைமுறைகளின் பட்டியலை இந்த கட்டுரையில் சுருக்கமாக காணலாம்.
பாத்திரங்களைக் கழுவுதல் மற்றும் சமையல் அறையின் ஸ்லாப்களை சுத்தம் செய்வது தவிர, உங்கள் சமையலறையில் உள்ள சின்னச்சின்ன இடங்களைக் கண்டறிந்து அவற்றைச் சரியாகச் சுத்தம் செய்வதும் முக்கியம். அந்த சின்னச்சின்ன இடங்களில் எஞ்சியிருக்கும் உணவு மற்றும் குப்பைகளில் கிருமிகள், எறும்புகள் மற்றும் கரப்பான் பூச்சிகளின் இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறும், இது சுகாதார அபாயங்களை அதிகரிக்கிறது.
காற்றோற்றமான சமையல் அறை
ஒவ்வொரு முறையும் நீங்கள் சமைக்கும்போது, புகை மற்றும் ஈரப்பதத்தை அகற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், இது சமையலறையின் வெவ்வேறு பகுதிகளில் அச்சுகளை (கரைகளை) உருவாக்கலாம். எனவே, சமைக்கும்போது சேரும் நீராவி, ஈரப்பதம், மணம் மற்றும் புகையை வெளியேற்ற சமையல் அறை ஜன்னலை திறந்து வைத்திருப்பது மிகவும் நல்லது. எக்ஸாஸ்ட் ஃபேன் அல்லது ஏர் கிளீனரைப் பயன்படுத்துவது சாலச்சிறந்தது.
மாசாலாப்பொருட்களை எங்கு வைக்க வேண்டும்
ஈரப்பதம் காரணமாக பாதிக்கப்படும் முதல் விஷயங்களில் ஒன்று உங்கள் மசாலா பாட்டில் . மசாலாப் பெட்டியில் கட்டிகள் உருவாகுவதை நீங்கள் அடிக்கடி காணலாம், இது காற்றில் இருந்து ஈரப்பதத்தை ஈர்க்கும் போது நிகழ்கிறது. எனவே, மசாலாப் பொருட்களை எப்போதும் அதன் தன்மை மாறாமல் வைத்திருக்க காற்று புகாத பாட்டிலில் நன்கு அடைத்து வைப்பது நல்லது.
சமைத்த உணவை எப்படி சேமிப்பது
நீங்கள் உணவை அப்போதே சமைத்து அவற்றை சூடாக சாப்பிடுவதே சிறந்த நடைமுறையாகும். இது உணவு மூலம் பரவும் நோய்களின் அபாயத்தைத் தவிர்க்க உதவுகிறது. ஆனால் புதிய உணவை எப்போதும் சாப்பிடுவது சாத்தியமில்லை என்பதை எதார்த்தம் . இந்நிலையில் எந்த வகையான மாசுபாட்டையும் தவிர்க்க நீங்கள் அதை சரியாக சேமிக்க வேண்டும். அதற்கு வேறு வழியே இல்லை நீங்கள் ஃப்ரிட்ஜைத் தான் நாடவேண்டும். அதேநேரத்தில் குழம்பு வகைகள் சமைக்கும் போது கொஞ்சம் புளி சேர்த்துக் கொண்டால், இயல்பாக கெட்டுப்போகும் நேரத்தை விட கூடுதலாக உணவை சேமிக்க முடியும்.
பூச்சிகளை விரட்ட செய்ய வேண்டியது
உணவைச் சுத்தம் செய்து, சரியாகச் சேமித்து முடித்தவுடன், எறும்புகள், ஈக்கள் மற்றும் பிற பூச்சிகள் உங்கள் சமையலறைப் பகுதிக்குள் நுழைவதைத் தடுக்க, சில பூச்சி விரட்டிகளை சமையலறையின் மேற்பரப்பில் பரப்ப வேண்டிய நேரம் இது அதாவது மழைக்காலம். கடுமையான வாசனையின் காரணமாக உங்களில் பலர் கடையில் வாங்கும் மருந்துகளைத் தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக, நீங்கள் எப்போதும் இயற்கையான விருப்பங்களான காபி கிரவுண்டுகள் மற்றும் இலவங்கப்பட்டை பொடிகளைப் பயன்படுத்தலாம். அவை பூச்சி விரட்டிகளாக செயல்படுகின்றன மற்றும் இரசாயனங்கள் இல்லாதவை.