Instant Crispy Dosa: இன்ஸ்டண்ட் மொறு மொறு தோசை... அதற்கு ஏற்ற சூப்பர் சட்னி : இப்படி செய்து அசத்துங்க!
இன்ஸ்டண்ட் மொறு மொறு தோசை மற்றும் அதற்கேற்ற சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
வீட்டில் தோசை அல்லது இட்லி மாவு இல்லாத சமயத்தில் அதீத பசியில் இருந்தால் கவலையே பட வேண்டாம். வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்து டேஸ்டியான மொறு மொறு தோசை தயார் செய்யலாம். இந்த தோசை கோதுமை மாவில் தயாரிக்கப்படுவதால் வழக்கமாக சாப்பிடும் தோசையை விட ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கும். இந்த தோசையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். வாங்க இந்த தோசையை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - பெரிய அளவில் 1
கோதுமை மாவு - 1 கப்
ரவை - 1 கப்
இஞ்சி - ஒரு துண்டு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
சில்லி ஃப்ளேக்ஸ் - ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
செய்முறை
ஒரு பெரிய சைஸ் உருளைக்கிழங்கை தோல் சீவி துருவல் கொண்டு துருவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதனுடன் ஒரு கப் கோதுமை மாவு மற்றும் ஒரு கப் ரவை சேர்த்து கிளறிக் கொள்ள வேண்டும்.
அதே கப் பால் 2 கப் அளவு தண்ணீரை ஊற்றி கட்டிப்படாமல் கரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் மேலும் ஒரு கப் தண்ணீர் இதனுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
இதனுடன் ஒரு துண்டு இஞ்சியை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அரைத்தை சில்லி ஃப்ளெக்ஸ் பவுடர் ஒரு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளவும்.
கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் சீரகம், நறுக்கிய ஒரு கைப்பிடி கொத்தமல்லித்தழை ஆகியவற்றை சேர்த்து கலந்துகொள்ள வேண்டும்.
இதை 10 நிமிடம் ஊற வைத்து விட வேண்டும். இப்போது இதனுடன் வைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற ஒரு சட்னி தயார் செய்யலாம்.
3 ஸ்பூன் தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன் தயிர், ஒரு மிக சிறிய துண்டு இஞ்சி, 3 பூண்டு பற்கள், சிறிதளவு நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் மல்லித்தழை ஆகியவற்றை மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது கடுகு கறிவேப்பிலை தாளித்து இந்த சட்னியுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு தவாவை அடுப்பில் வைத்து சூடானதும். தயாரித்து வைத்துள்ள மாவை தோசையாக வார்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போது நாம் தயாரித்து வைத்துள்ள தேங்காய் சட்னி உடன் இந்த தோசையை வைத்து சாப்பிடலாம். சுவை சூப்பரா இருக்கும்.
மேலும் படிக்க
Pumpkin Morkuzhambu : வெள்ளைப்பூசணி மோர் குழம்பு.. இப்படி செய்தால் சுவை சூப்பரா இருக்கும்..