Kadhamba Chutney Dosa : இன்ஸ்டண்ட் தேங்காய் தோசை.. சுவையான கதம்ப சட்னி.. இப்படி செய்து அசத்துங்க!
Kadhamba Chutney - Dosa : இன்ஸ்டண்ட் தேங்காய் தோசையும் அதனுடன் வைத்து சாப்பிட சுவையான சட்னியும் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ரவை - 1 கப்
தேங்காய் துருவல் - முக்கால் கப்
சீரகம் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை
ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கப் ரவை சேர்க்கவும், இதனுடன் துருவிய முக்கால் கப் தேங்காய், 5 சின்ன வெங்காயம், ஒரு ஸ்பூன் சீரகம், தேவையான அளவு உப்பு, ரவையை அளந்த கப்பால் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
இதை ஒரு அரை மணிநேரம் மூடி போட்டு அப்படியே விட்டு விட வேண்டும். அரை மணி நேரத்தில் ரவை நன்றாக ஊறி வந்திருக்கும். இப்போது தோசை கல்லை அடுப்பில் வைத்து இதை வழக்கம் போல் தோசையாக ஊற்றவும் இதன் மேல் பகுதியில் துருவிய கேரட்டை தூவி மூடிப்போட்டு வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான தோசை தயார். இந்த மாவில் சுமார் 10 தோசைகள் கிடைக்கும். உங்களுக்கு அதிக அளவிலான தோசை வேண்டும் என்றால் அதற்கு ஏற்ற அளவில் பொருட்களை எடுத்து மாவு அரைத்துக் கொள்ளலாம். இப்போது இதனுடன் வைத்து சாப்பிட ஒரு சுவையான சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
கதம்ப சட்னி
கடலைப் பருப்பு கால் கப், உளுந்து ஒரு ஸ்பூன், தேங்காய் 3 துண்டு, கொத்தமல்லி ஒரு கைப்பிடி, கறிவேப்பிலை இரண்டு கொத்து, இஞ்சி சிறிய துண்டு, பூண்டு 2 பல், சீரகம் 1 ஸ்பூன், மிளகு 1 ஸ்பூன், தேவையான அளவு உப்பு, காய்ந்த மிளகாய் 10, தக்காளி 1, வெங்காயம் 2, இவை அனைத்தையும் சிறிது எண்ணெயில் சேர்த்து லேசாக வதக்கி எடுத்து ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து இந்த தாளிப்பை சட்னியில் சேர்த்து கலந்து விடவும். அவ்வளவு தான் சுவையான கதம்ப சட்னி தயார். இந்த சட்னி இன்ஸ்டண்ட் தோசைக்கு சூப்பர் காம்போவாக இருக்கும்.
மேலும் படிக்க
Vegetable Stew: கேரளா ஸ்டைலில் வெஜிடபிள் ஸ்டூவ்.. இடியாப்பத்திற்கு சூப்பர் காம்போ - செய்முறை இதோ!