House Hold Tips: வெங்காயம் நறுக்கினால் கண்ணீர் வராமலிருக்க.. பருப்பில் புழு, வண்டு வராமலிருக்க சூப்பர் டிப்ஸ்!
வெங்காயம் நறுக்கினால் கண்ணீர் வராமல் இருக்க, இஞ்சி ஃப்ரெஷ்ஷாக இருக்க டிப்ஸ்
வெங்காயம் நறுக்கும் போது கண்ணீர் வராமலிருக்க
வெங்காயம் நறுக்கும் போது கண் எரியும், கண்களில் இருந்து கண்ணீர் வரும். எனவே வெங்காயம் நறுக்குவது பலருக்கும் பெரும் சவாலாக உள்ளது. வெங்காயம் நறுக்கும் போது கண் எரியாமல் இருக்க, கண்ணீர் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். ஒரு பாத்திரத்தில் வெங்காயம் மூழ்கும் அளவு தண்ணீரை ஊற்றவும். இதை அடுப்பில் வைத்து மிதமான அளவு சூடாக்கவும். பின் நறுக்க வேண்டிய வெங்காயத்தை இந்த தண்ணீரில் போட்டு, 30 நொடிகளுக்கு பின் எடுத்து விடவும். இப்போது வழக்கம் போல் வெங்காயத்தின் தோலை நீக்கி விட்டு, வெங்காயத்தை நறுக்கலாம். இப்போது கண் எரியாது. வெங்க்காயத்தை சுடு தண்ணீரில் போடுவதால், அது வெந்து விடும் என்று நினைக்க வேண்டாம்.
பருப்பில் புழு, வண்டு வராமலிருக்க
நாம் வீட்டில் கடலை பருப்பு, துவரம் பருப்பு, உளுந்து போன்றவற்றை அதிகமாக வாங்கி ஸ்டோர் செய்து வைப்போம். இப்படி வைக்கும் போது, அதில் புழு, வண்டு வந்து விடும். இப்படி வராமல் இருக்க, அடுப்பில் கடாய் வைத்து, தீயை குறைவாக வைத்து, அந்த பருப்பை கடாயில் சேர்த்து லேசாக நிறம் மாறும் வரை வறுக்கவும். பின் இதை அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைத்துக் கொள்ள வேண்டும். பின் இதை டப்பாவில் சேர்த்து, இதில் 2 பிரிஞ்சி இலை மற்றும் காம்புடன் கூடிய பூண்டின் நடுப்பகுதி இரண்டையும் சேர்த்து டப்பாவை டைட்டாக மூடி வைத்து விட வேண்டும். இப்படி வைத்தால் 3 மாதம் ஆனாலும் பருப்பில், புழு, வண்டு வராது.
இஞ்சி ஃப்ரெஷ்ஷாக இருக்க
நாம் இஞ்சியை ஃப்ரிட்ஜிக்குள் வைத்தாலும் ஒரு வாரத்தில் அதன் தோல் சுருங்கி வதங்கி விடும். இப்படி ஆகாமல், இஞ்சி எப்போதும் ஃப்ரெஷ்ஷாக இருக்க, ஒரு டவலை தண்ணீரில் நனைத்து அதை நன்றாக பிழிந்து கொள்ள வேண்டும். இந்த டவலில் இஞ்சியை வைத்து மடித்துக் கொள்ளவும். இதை ஒரு மண் பாத்திரம் அல்லது மண் சட்டிக்குள் வைத்து விட வேண்டும். இப்படி வைத்தால் இரண்டு வாரம் ஆனாலும் இஞ்சி ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
மேலும் படிக்க
Household Tips: உடையாமல் முட்டை வேகவைக்க! பாத்திரத்தில் ஒட்டாமல் மாவு பிசைய - வீட்டுக் குறிப்புகள்!