மேலும் அறிய

Mushroom Dosa: சுவையான காளான் மசாலா தோசை - இப்படி செய்து அசத்துங்க!

Mushroom Dosa Recipe: மஸ்ரூம் தோசை எப்படி செய்வது என்பது பற்றி இங்கே காணலாம்.

தோசை பிரியர்களா? இதோ உங்களுக்காக காளான் மசாலா தோசை எப்படி செய்வது எளிதான செய்முறை காணலாம்.

காளான் மசாலா தோசை 

என்னென்ன தேவை?

தோசை மாவு - தேவையான அளவு

காளான் - 2 கப்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

வெங்காயம் - 2

தக்காளி - 2

மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்

சீரக தூள் - ஒரு டீஸ்பூன்

கரம் மசாலா - ஒரு டீஸ்பூன்

இஞ்சி, பூண்டு பேஸ்ட் - ஒரு டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

நெய் - தேவையான அளவு

சீஸ் - தேவையான அளவு

முதலில் தோசைக்கு தேவையான மசாலாவை தயார் செய்து வைக்கலாம். வெங்காயம் தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும். இப்போது கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கூடானதும், அதில் சீரகம்,பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி- பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதன் பிறகு, தக்காளி சேர்த்து நன்றாக வதங்கியதும் உப்பு, மிள்காய் தூள், அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். இதற்கு ஃப்ர்ஷ் க்ரீன்,சீஸ் கூட தேவையெனில் சேர்க்கலாம். ருசி நன்றாக இருக்கும். விருப்பம் இருப்பவர்கள் இரண்டு உருளைக்கிழங்கை வேகவைத்து சேர்க்கலாம்.  5 நிமிடங்கள் கொதித்ததும் அதில் நறுகிய காளான் சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது இது நன்றாக கொதித்ததும் காளான் மசாலா தயார். 

காளான் மசாலா தோசை தயாரிக்க..

தோசை கல்லில் தோசை ஊற்றி, அதன் மேல் காளான்  மசாலா வைத்து தோசை பொன்னிறமாக வேக விடவும். சுவையான காளான் மசாலா தோசை தயார். நெய் சேர்த்து தோசை தயாரிப்பது நல்லது. 

கொத்தமல்லி சட்னி

உளுந்து, பச்சை மிளகாய், சிறிதளவு சீரம், ஒரி கைப்பிடி அளவு கொத்தமல்லி எல்லாவற்றையும் நன்றாக வதக்க வேண்டும். அது ஆறியதும் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்தால் கொத்தமல்லி சட்னி தயார். மிக்ஸியில் வெகு நேரம் அரைக்க கூடாது. அப்படி செய்தால் சட்னியில் கசப்புத்தன்மை ஏற்படும். 

தேங்காய் சட்னி

தேங்காய், பொட்டுக்கடலை, பச்சைமிளகாய் உப்பு, வைத்து மிக்ஸியில் அரைத்து, கடுகு,உளுந்து, கருவேப்பிலை தாளித்தால் தேங்காய் சட்னி தயார்.

பாலக் பனீர் ஊத்தாப்பம்

தேவையான பொருட்கள்

பாலக்கீரை  - ஒரு கப்

ரவா - ஒரு கப்

தயிர் - ஒரு கப்

பனீர் துருவியது - ஒரு கப்

வெங்காயம் பொடியாக நறுக்கியது - ஒரு கப்

தக்காளி பொடியாக நறுக்கியது - ஒரு கப்

பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது - ஒரு கப்

கொத்தமல்லி - தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ரவா, தயிர், உப்பு, அரைத்த பாலக்கீரை  எல்லாவற்றையும் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலக்கவும். ஒரு 20 நிமிடங்கள் ஊறட்டும். இதில் மாதுளை போன்ற பழங்களை விருப்பப்பட்டால் சேர்த்து கொள்ளலாம்.  தோசை ஃபில்லிங்கிற்கு ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, துருவிய பனீர் அனைத்தையும் நன்றாக கலந்து வைத்து கொள்ளவும்.

பின்னர், தோசை கல்லில் மாவை ஊத்தி தோசை வார்க்க வேண்டும். அதன்மீது பழ கலவை, துருவிய பனீர் ஆகிவயவற்றை சேர்த்து நன்கு வேக விடவும். அவ்ளோதான். சுவையான பாலக்கீரை பனீர் ஊத்தாப்பம் ரெடி.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Aadhav Arjuna :  “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
Aadhav Arjuna : “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
அரசுக்கும் அமைச்சருக்கும் அவப்பெயர்... பகீர் குண்டை போட்ட மேயரால் அதிகாரிகள் அதிர்ச்சி
அரசுக்கும் அமைச்சருக்கும் அவப்பெயர்... பகீர் குண்டை போட்ட மேயரால் அதிகாரிகள் அதிர்ச்சி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”நான் GOVT ஸ்கூல் தான்” வம்பிழுத்த நிர்மலா! வச்சு செய்த கார்கேபிச்சை போட்டால் சிறையா? பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு! எச்சரிக்கும் கலெக்டர்Aadhav arjuna Resign VCK : ஆதவ் அர்ஜுனா ராஜினாமா!’’எனக்கு உள் நோக்கமா?’’திருமாவுக்கு பதிலடி!Aadhav Arjuna Joins Vijay TVK : விசிகவுக்கு டாட்டா!தவெகவில் இணையும் ஆதவ்?TARGET திருமா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhav Arjuna :  “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
Aadhav Arjuna : “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
அரசுக்கும் அமைச்சருக்கும் அவப்பெயர்... பகீர் குண்டை போட்ட மேயரால் அதிகாரிகள் அதிர்ச்சி
அரசுக்கும் அமைச்சருக்கும் அவப்பெயர்... பகீர் குண்டை போட்ட மேயரால் அதிகாரிகள் அதிர்ச்சி
SBI Clerk Recruitment: மிஸ் பண்ணிடாதீங்க; எஸ்பிஐ வங்கி வேலை; 13,735 பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
மிஸ் பண்ணிடாதீங்க; எஸ்பிஐ வங்கி வேலை; 13,735 பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
“பெரம்பலூரும் செந்தில்பாலாஜி கண்ட்ரோலா?” பொறுப்பு அமைச்சர் சி.சங்கர் படத்தை போடாத அருண் நேரு..!
“பெரம்பலூரும் செந்தில்பாலாஜி கண்ட்ரோலா?” பொறுப்பு அமைச்சர் சி.சங்கர் படத்தை போடாத அருண் நேரு..!
One Nation One Election : ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா! கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மக்களவையில் தாக்கல்..
One Nation One Election : ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா! கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மக்களவையில் தாக்கல்..
அரசு ஊழியர் பணியில் இருக்கும்போதே மரணம்; கருணை அடிப்படையில் வேலை யாருக்கு? ஆர்டிஐயில் வெளியான தகவல்!
அரசு ஊழியர் பணியில் இருக்கும்போதே மரணம்; கருணை அடிப்படையில் வேலை யாருக்கு? ஆர்டிஐயில் வெளியான தகவல்!
Embed widget